For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் உள்ள கருமை நீங்கி, பளிச்சென்று மின்ன ஆசையா? அப்ப இத படிங்க...

By Maha
|

சருமத்தின் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒரு அழகுப் பராமரிப்பு பொருள் என்றால், அது சந்தனம் தான். ஏனெனில் இந்த சந்தனத்தில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக முகப்பரு பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், சந்தனத்தைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் சந்தன பொடி மட்டுமின்றி, சந்தன எண்ணெயும் பல சரும பிரச்சனைகளை போக்கக்கூடியது. அதிலும் அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் உள்ள கருமைகள், கரும்புள்ளிகள் போன்றவை. அந்த சந்தனத்தைக் கொண்டு பலவாறு ஃபேஸ் பேக்/ஃபேஸ் மாஸ்க் போடலாம். இவ்வாறு சருமத்திற்கு அவ்வப்போது ஃபேஸ் பேக்/ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சரும பிரச்சனைகள் குணமாகி, சருமம் நன்கு பட்டுப் போன்றும், கருமை நீங்கி பொலிவோடும் இருக்கும்.

இப்போது இந்த சந்தனத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக்/ஃபேஸ் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர்

பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி

சந்தனப் பொடியை முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பாதாம் பவுடர்

பாதாம் பவுடர்

அழகுப் பராமரிப்பு பொருட்களில் பாதாம் பவுடரும் முக்கியமான ஒன்று. எனவே இந்த பவுடருடன் சேர்த்தும் மாஸ்க் போடலாம். அதற்கு பாதாம் பவுடர் மற்றும் சந்தனப் பொடியை ஒன்றாக கலந்து, சிறிது பால் உற்றி பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி காய வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமம் நன்கு பளிச்சென்று காணப்படும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

சந்தனப் பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.

முட்டை மற்றும் தேன்

முட்டை மற்றும் தேன்

மற்றொரு சந்தன சந்தன ஃபேஸ் பேக் தான் இது. இதற்கு முட்டையை நன்கு அடித்து, தேன் மற்றும் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் அழகாக இளமையுடன் காணப்படும்.

சந்தன எண்ணெய்

சந்தன எண்ணெய்

சந்தன எண்ணெயை முல்தானி மெட்டி பவுடரில் சேர்த்து கலந்து, முகத்திற்கு பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.

கற்பூரம்

கற்பூரம்

பொதுவாக சந்தனப் பொடி முகப்பருவை போக்குவதில் மிகவும் சிறந்தது. எனவே முகப்பரு அதிகம் உள்ளவர்கள், சந்தனப் பொடியில் சிறிது கற்பூரத்தை பொடி செய்து போட்டு, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் எளிதில் நீங்கிவிடும்.

தயிர்

தயிர்

தயிர் ஒரு சிறந்த கிளின்சர் என்று சொல்லலாம். எனவே அந்த தயிரை சந்தனப் பொடியில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றுடன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பருக்கள் வராமலும் இருக்கும்.

தக்காளி

தக்காளி

சந்தனப் பொடியில் தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

பால்

பால்

சந்தனத்தில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் நீக்க வல்லது. அதிலும் சரும திடீரென்று சிவப்பு நிறத்திலோ அல்லது முகப்பருவினால் எரிச்சல் ஏற்பட்டாலோ, சந்தனப் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய்

முகமானது பொலிவிழந்து, கரும்புள்ளிகள் அதிகம் இருந்தால், அப்போது அதனை போக்குவதற்கு, சந்தனப் பொடியில் லாவெண்டர் எண்ணெயை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு தடவ வேண்டும். மேலும் இந்த முறையால் சருமம் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sandalwood Powder Face Packs

The aromatic sandalwood powder as well as oil is used to treat skin problems like oily skin, remove dark patches and blemishes etc. Sandalwood powder is also used as a beauty ingredient to treat sun tan. So if you want a glowing skin, you can use sandalwood powder as one of the chief ingredients for the face pack. Here are the most common sandalwood powder face packs that are homemade and effective too.
Story first published: Wednesday, July 31, 2013, 13:02 [IST]
Desktop Bottom Promotion