Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
வெள்ளை புள்ளிகள் அழகை கெடுக்குதா? இத ட்ரை பண்ணலாமே!!!
முகத்தில் கரும்புள்ளிகள் மட்டும் ஏற்படுவதில்லை. சிலருக்கு வெள்ளை புள்ளிகளும் உருவாகின்றன. இதற்கு காரணம், சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக எண்ணெயை சுரப்பதே ஆகும். இத்தகைய வெள்ளை புள்ளிகள் மூக்கின் பக்கவாட்டில் அல்லது மூக்கின் மேலே பொதுவாக ஏற்படும். இவை அதிகம் வந்தால், முகத்தில் பருக்கள் வருவதற்கான அறிகுறிகளாகும். இவை ஏற்படுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அவை சரியான சரும பராமரிப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களான எண்ணெய் பதார்தங்கள், அதிகப்படியான சூரிய வெப்பம் போன்றவையும் வெள்ளை புள்ளிகள் வருவதற்கு காரணங்களாகும்.
இவற்றை போக்குவதற்கு அதனை பிடுங்கினால் மட்டும் போதாது. அதனை தடுப்பதற்கு ஒருசில வீட்டுப் பொருட்களையும் பயன்படுத்துவதால் தடுக்கலாம். இத்தகைய பொருட்கள் சாதாரணமாக சமையலறையிலேயே கிடைக்கும். அந்த பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வெள்ளைப் புள்ளிகளை போக்கி, முகத்தை அழகுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை துருவியோ அல்லது சாறு எடுத்தோ வெள்ளை புள்ளிகளை நீக்கலாம். அதுவும் அதனை வைத்து வெள்ளை புள்ளிகள் வரும் இடத்தில் தினமும் இரண்டு முறை தடவி, மசாஜ் செய்து வந்தால், வெள்ளை புள்ளிகள் தானாக உதிர்ந்துவிடும்.

எலுமிச்சை
சமையல் பொருட்களுள் ஒன்றான எலுமிச்சையை வைத்து பருக்கள், வெள்ளை புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்கலாம். அதற்கு அதனை வைத்து வெள்ளை புள்ளிகள் உள்ள இடத்தில் மசாஜ் செய்த பின், தேனை தடவியும் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். ஏனெனில் எலுமிச்சை வறட்சியை ஏற்படுத்தும் என்பதாலேயே.

தயிர்
தயிரில் நிறைய அழகு இரகசியங்கள் உள்ளன. அவை சருமத்தை மென்மையாக்குவதோடு, வறட்சியின்றியும் வைக்கும். ஆகவே தயிரை, பால் மற்றும் ஓட்ஸ் உடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்தால், வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

சந்தன பொடி
உடலையும், சருமத்தையும் குளிர்ச்சியோடு வைக்கும் சந்தன பொடி, வெள்ளை புள்ளியை நீக்கவும் உதவியாக உள்ளது. அதிலும் அதனை நீக்குவதற்கு, சந்தன பொடியுடன், ரோஸ் வாட்டரை கலந்து, தடவினால், சருமம் புத்துணர்ச்சியுடனும், வெள்ளை புள்ளிகளின்றியும் இருக்கும்.

தேன்
தேனின் நன்மைகளுள் வெள்ளை புள்ளிகளை நீக்குவதும் ஒன்றாகும். அதற்கு தேனை தினமும் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

ஓட்ஸ்
ஓட்ஸை, பாலுடன் சேர்த்து வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் உள்ள இடங்களில் ஸ்கரப் செய்தால், அவை எளிதில் போய்விடும்.

கற்றாழை
சருமத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் பிம்பிள்களை போக்குவதற்கு கற்றாழை ஜெல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய கற்றாழையை முகத்திற்கு தினம் இரண்டு முறை பயன்படுத்தினால், முகம் பொலிவோடு இருக்கும்.

முட்டை
பருக்களை போக்கும் இயற்கைப் பொருட்களில் சிறந்தது முட்டையின் வெள்ளை கரு தான். அத்தகைய முட்டையின் வெள்ளைக் கருவை, தேனுடன் சேர்த்து கலந்து, குளிப்பதற்கு முன் 15 நிமிடம் மசாஜ் செய்தால், அதனை போக்கிவிடலாம்.

பூண்டு
அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கும் பொருட்களில் ஒன்று தான் பூண்டு. இந்த பூண்டின் வாசனை தான் கெட்டதாக இருக்குமே தவிர, அதில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் ஒன்று தான் வெள்ளைப் புள்ளிகளை நீக்குதல். அதற்கு பூண்டின் சாற்றை வெள்ளை புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளது. அதில் இந்த பழத்தை மசித்து தினமும் தடவி வந்தால், அவை வெள்ளை புள்ளிகளை அறவே போக்கிவிடும்.



Click it and Unblock the Notifications