Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா?
பிரபலமான நடிகைகளின் அழகு இரகசியங்கள்!!!
'அழகு தான் எல்லையற்ற இன்பத்தின் ஆதாரமாக உள்ளது' என்ற ஜான் கீட்ஸின் வார்த்தைகளின் படி அழகில் தான் அனைத்தும் அடங்கியிருக்கிறது. ஒரு அழகானவள் என்று சொல்லப்படுகிறாள் மற்றும் அவளுடைய வழிமுறைகள் மற்றும் அழகை கண்டு போற்றப்படுகிறாள். ஒவ்வொரு பெண்ணும் தன்னை அழகாக வைத்துக் கொள்ள ஒரு தனியான வழியை வைத்திருக்கிறாள். அழகாகவும் மற்றும் நளினமாகவும் இருப்பவர்களுக்கு சுய மதிப்பீடு (Self Esteem) அதிகமாக இருக்கும். எனினும், அழகை பராமரிப்பது ஒன்றும் எளிதான விஷயமல்ல, அதற்கு சில முயற்சிகள் செய்ய வேண்டும். சில பேர் இரசாயனப் பொருட்களை நம்பியிருப்பார்கள், வேறு சிலர் வீடடில் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவார்கள், இன்னும் சிலர் ஆயுர்வேதம் அழகு வேதம் என்பார்கள்.
சினிமாவில் வருபவர்களின் சரும பளபளப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுபவராகவும், எல்லா நேரத்திலும் அழகாக இருப்பதற்காக இவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று எண்ணுபவராகவும் இருந்தால், நீங்கள் கண்டிப்பாக இந்த குறிப்புகள் படிக்க வேண்டும். நாங்கள் உங்களுக்காகவே பிரபலமானவர்கள் பயன்படுத்தும் சரும பராமரிப்பு டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகவே சரும உள்ளது, அதனை நீங்கள் பளபளப்பாகவும் மற்றும் பளிச்சிடுமாறும் கவனித்துக் கொள்ள போதுமான கவனம் செலுத்த வேண்டும். எனவே இந்த பிரபலமானவர்களின் சரும பராமரிப்பு குறிப்புகள் உங்களுக்கு உதவும்! பிரபலமானவர்களின் அழகு என்பது அவர்களுடைய சரும பராமரிப்பில் தான் அடங்கியுள்ளது.

மிராண்டா கெர்-ன் வலைப்பதிவை (Blog) படியுங்கள்
அழகை மிகவும் ஆராதிப்பவரான மிராண்டா கெர், அழகை பராமரிக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்பவராவார். தன்னுடைய அழகின் இரகசியங்களை தன்னுடைய வலைப்பதிவுகளில் டிப்ஸ்களாகவும் அவர் வெளியிட்டுள்ளார். தன்னுடைய தோலை பராமரிக்க தான் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபலமானவர்களின் சரும பராமரிப்பு முறை காஸ்ட்லியானதும் கிடையாது. முயற்சி செய்து பாருங்கள். தேங்காய் எண்ணெயில் அரிப்பை தடுக்கும் குணம் இருப்பதால், அது உங்கள் சருமத்தை பளபளப்பாக்கி, பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது.

கேட் மிடில்டனின் இரகசியம்
பெருமையுடன் உற்சாகமாக நடந்து செல்லும் புதிய தாயாகவும் மற்றும் தன்னுடைய திருமணத்திற்கு முன்னர் தேனீயின் விஷத்தைக் கொண்டு ஃபேஸியல் செய்தவராகவும் இவர் இருந்ததாக சொல்லப்படுகிறார். இப்பொழுது சொல்லுங்கள் இந்த ட்ரீட்மெண்ட பிரபலமானவர்களுக்கு மட்டும் தானா என்று? நீங்களும் பிரபலமானவராக மாற விரும்பினால், அவர்களுடைய சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றுங்கள்.

ஹாலே பெர்ரி
இந்த ஆண்களைத் தூங்க விடாத அழகி தன்னுடைய தோலை கச்சிதமாக வைக்க அதிக செலவுகள் எதுவும் செய்யவில்லை. தன்னுடைய தோலுக்கு போதும் போதும் என்ற அளவிற்கு வைட்டமின் சி கொடுப்பது தான் இவருடைய ஒரே சரும பராமரிப்பு செலவினம். ஏனெனில் உங்கள் சருமத்தைப் பராமரித்து, பளபளக்கச் செய்யும் குணம் வைட்டமின் சி-க்கு உள்ளது. இது உண்மையிலேயே ஒரு பிரபலமானவரின் இரகசியம் தானே?

ஜெனிபர் லவ் ஹெவிட்டின் டூத் பேஸ்ட் அனுபவம்
தன்னுடைய முகத்தில் உள்ள பருக்களை (Zits), வெடிப்புகளை சரி செய்ய டூத் பேஸ்ட்டை பயன்படுத்திய நடிகையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது உண்மை தான். மேலும் அதிக செலவும் வைக்காத பராமரிப்பு தான். இது சாதாரணமானவர்களும் பின்பற்றத் தகுந்த, மலிவான குறிப்பு தான்.

மலைக்கா அரோராவின் அழகும், ஈர்ப்பும்
பாலிவுட் அழகியான மலைக்கா அரோரா பரிந்துரைப்பதெல்லாம் ஆரோக்கியமான நீரில் (Spa) குளிப்பது தான். அவர் செய்வதெல்லாம் சூடான எண்ணெய் மசாஜ் மற்றும் பாலாடைக் குளியல் (Aromatherapy) இரண்டும் தான்.

அசத்தும் ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் இல்லாமல் அழகுக் குறிப்பா? ஐஸ்வர்யா பயன்படுத்தும் அழகு சாதனங்களில் அதிகளவு உள்ளவை இயற்கையான பொருட்கள் தான். தன்னுடைய உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதற்காக, தினமும் காலையில் சூடான தண்ணீரில் தேன் கலந்து குடிப்பதாக அவர் சொல்லுகிறார். இந்த குறிப்பை பயன்படுத்துவதொன்றும் சாதாரணமானவர்களுக்கும் பெரிய விஷயமில்லை தானே?

பெபோவின் பாதை
பெபோ மிகவும் கொடை பெற்றவர்! இயற்கையாகவே பிரகாசமான தோலை கொடுத்த அவரின் ஜீன்களுக்கு நன்றி சொல்லுவோம். அவர் தன்னுடைய உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொண்டு, தோலில் குறையெதுவும் ஏற்படாமல் கவனித்துக் கொள்வார். அவர் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவராவார். இந்த பிரபலமானவரின் அழகுக் குறிப்பை நீங்களும் பாராட்டலாமே!

அழகுப் பதுமை காத்ரினா கைப்
மிகவும் எளிமையான சரும பராமரிப்பு முறைகளை பாலிவுட்டின் அழகுப் பதுமை காத்ரினா கைப் பயன்படுத்துகிறார். அவர் பின்பற்றுதெல்லாம் ஆரோக்கியமான உணவு, சரியான உடற்பயிற்சி மற்றும் சில அடிப்படையான சரும பராமரிப்பு முயற்சிகள் ஆகியவை மட்டுமே.
இந்த பிரபலமானவர்களின் அழகு குறிப்புகள் மிகவும் அற்புதமானவை. புpரபலமானவர்களின் அழகைக் கண்டு நீங்கள் வியப்பவராக இருந்தால், இந்த அழகுக் குறிப்புகளைப் பின்பற்றி நீங்களும் பிறரை வியக்கச் செய்யுங்கள. அழகை ஆராதனை செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications