சருமம் எப்போதுமே இளமையாகத் திகழ்வதற்கான 13 வழிகள்!!!

By Super

அழகாக இருக்க வேண்டுமென்று சருமப் பராமரிப்பிற்காகவும், அழகு நிலையத்திற்கும் ஏராளமான பணத்தை செலவு செய்த பிறகும், இன்னும் இளமைத் தோற்றத்தை திரும்ப அளிக்கும் இரகசியத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?

அதற்காக இதுவரை கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் சில பழக்கவழக்கங்கள் உங்களுக்கு மிகவும் நன்மை பயப்பதாகத் தோன்றினாலும், உங்களது சரும எழிலைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தால், உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா?

ஆகவே, நீங்கள் உங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய 13 செயல்களை உங்கள் கவனத்திற்கு அளிக்கிறோம். அதைப் படித்து கவனமாக இருந்து, அழகை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதுபோன்றே ஆகிறீர்கள்

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதுபோன்றே ஆகிறீர்கள்

ஆம், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அது உங்கள் சருமத்தில் பிரதிபலிக்கிறது. சருமத்தில் எண்ணெய் வழியாமல், அதிகப்படியான எண்ணெய் பசையின்றி இருக்க வேண்டுமென்று விரும்பினால், எண்ணெய் அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்கவும். மேலும் இளமைத் தோற்றமுடைய சருமத்தைப் பெற வேண்டுமானால், ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை உண்ண வேண்டும்.

சருமத்தை ப்ளீச் செய்யும் போது கவனமாக இருங்கள்

சருமத்தை ப்ளீச் செய்யும் போது கவனமாக இருங்கள்

வீட்டில் உங்கள் சருமத்தை ப்ளீச் செய்து கொள்ள நேரம் இல்லை என்றால், நல்லதொரு அழகு நிலையத்திற்கு சென்று ப்ளீச் செய்து கொள்ளலாம். அது தவறில்லை. ஆனால் அவர்கள் ப்ளீச் செய்வதற்கு என்ன பொருளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் கவனமாக இருங்கள். அழகு நிலையத்தில் இருப்பவர்கள் உங்களிடம் வகை வகையான பிராண்டுகளைக் காட்டி எதைப் பயன்படுத்தலாம் என்று உங்களிடம் கேட்பார்கள். ஆனால் அவர்கள் மொத்தமாக வாங்கி வைத்துள்ள பிராண்டையே பயன்படுத்திவிடுவார்கள். எனவே அங்கு மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.

மென்மையான டவல் ஒன்றை எப்போதும் உடன் வைத்திருங்கள்

மென்மையான டவல் ஒன்றை எப்போதும் உடன் வைத்திருங்கள்

உங்களுடைய மென்மையான சருமத்தை மென்மையான டவலைக் கொண்டே ஒற்றி எடுங்கள். கடினமான டவல்களைத் தவிர்த்துவிடுங்கள். மென்மையான டிஷ்யூ பேப்பர் அல்லது ஸ்கின் வைப் கொண்டு சருமத்தைத் துடைத்தாலும், அவற்றை மென்மையாகக் கையாளுங்கள். குறிப்பாக வீட்டை விட்டு வெளியில் செல்ல நேர்ந்தால், உங்களுடன் மென்மையான பருத்தி டவல் ஒன்றை எப்போதும் உடன் கொண்டு சென்று பயன்படுத்துங்கள்.

சூரியன் இல்லாத நாட்களில் கூட சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்துங்கள்

சூரியன் இல்லாத நாட்களில் கூட சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்துங்கள்

வெயிலில்லாத மேகமூட்டமான நாள் தானே என்று சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்தாமல் இருந்து விடாதீர்கள். பகல் நேரம் முழுவதும் காற்று மண்டலத்தில் இருக்கும் புற ஊதாக்கதிர்களை இந்த சன் ஸ்க்ரீன் லோசன் தடுத்து, சருமத்தைப் பாதுகாக்கும். எனவே மேக மண்டலத்தில் சூரியன் மறைந்து இருந்தாலும் கூட, இந்த அபாயகரமான புற ஊதாக்கதிர்கள் சருமத்தைத் தாக்கும் என்பதை மறவாதீர்கள்.

வைட்டமின் டி-யை சருமத்திற்குக் கொடுங்கள்

வைட்டமின் டி-யை சருமத்திற்குக் கொடுங்கள்

நமது உடலுக்கும் எலும்புகளின் வலிமைக்கும் அவசியமான வைட்டமின் டி என்னும் சத்தானது சூரிய ஒளியிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. எனவே காலை நேரங்களில் அல்லது மாலை நேரங்களில், உடல் முழுதும் சூரிய ஒளிபடும் வண்ணம் வாக்கிங் செல்லுங்கள். கொதிக்கும் சூரியன் குளிர்ந்திருக்கும் இந்த நேரங்கள் சருமத்தையும் அழகுபடுத்தும்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுங்கள்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுங்கள்

புகைப்பிடித்தல் உடனடியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது போலத் தோன்றினாலும், அதன் பாதிப்பை அது உண்டாக்கிக் கொண்டேயிருக்கும். தொடக்க நிலையில் எந்த வெளிப்புற அறிகுறிகளும் தெரியாது. ஆனால் அது உள்புற உறுப்புகளை பாதிக்கத் தொடங்கியிருக்கும். அதே நேரத்தில் உங்கள் சருமத்திலும் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். புகைப்பிடிப்பவர்களது சருமம் சுருங்கத் தொடங்கி விரைவிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கிவிடும். கண்கள் வீங்கும். சரும நோய்கள் உண்டாகி இறுதியில் சருமப்புற்று நோய் கூட உண்டாகலாம்.

தூங்கும் முன் மேக் அப்புகளைக் கலைத்துவிடுங்கள்

தூங்கும் முன் மேக் அப்புகளைக் கலைத்துவிடுங்கள்

எப்போதும் சருமம் எளிதாக சுவாசிக்கட்டும். ஆனால் முகத்திலோ சருமத்திலோ மேக் அப் க்ரீம்களுடன் உறங்கப்போனால், சருமத்திலுள்ள நுண்ணிய துவாரங்கள் அடைபட்டு சருமம் சுவாசிக்க முடியாமல் போகும். இதன் காரணமாக சருமம் வறண்டு போகும். இதனால் சருமம் தனது மேற்பரப்பை ஈரப்படுத்திக் கொள்ள எண்ணெய்ப் பசையைச் சுரக்கத் தொடங்கிவிடும். இதனால் காலையில் எழுந்ததும் முகம் எண்ணெய்ப்பிசுக்குடன் தோன்றும். எனவே உறங்கப் போகும் முன் மேக் அப்புகளைக் கலைத்துவிடுங்கள்.

மேக் அப்புகளை நீக்கும் பேடுகளைப் பயன்படுத்துங்கள்

மேக் அப்புகளை நீக்கும் பேடுகளைப் பயன்படுத்துங்கள்

நமது முகத்திலுள்ள மேக் அப் க்ரீம்களை நீக்குவதற்கு தனி லோஷன்கள் மற்றும் தண்ணீரில் நனைக்கப்பட்ட பஞ்சுகளைப் பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. இப்போது மேக் அப்புகளை நீக்கும் பேடுகள் (makeup removal pads) வந்துவிட்டன. இவற்றைப் பயன்படுத்தினால், மாயம் போல க்ரீம்கள் மறைந்துவிடும். முக்கியமாக இவற்றைக் கொண்டு முகத்திலுள்ள க்ரீம்களை நீக்கினாலும், தண்ணீர் கொண்டு முகத்தை நன்றாகக் கழுவ மறந்துவிடாதீர்கள்.

ஷேவிங் செய்யும் போது கவனம் தேவை

ஷேவிங் செய்யும் போது கவனம் தேவை

ஷேவிங் ரேசரைப் பயன்படுத்தி ஷேவ் செய்யும் போது, ஷேவிங் க்ரீம் அல்லது ஜெல்களைப் பயன்படுத்துங்கள். முடி இருக்கும் திசை நோக்கியே ரேசரை இழுங்கள். முடிக்கு எதி திசையில் இழுக்கக்கூடாது. சரியாகச் செய்யாவிட்டால், ஷேவிங் செய்தல் ஒரு மிகப்பெரிய தொந்தரவாகிவிடும்.

இலவச மேக் அப் அழைப்புகளுக்கு மயங்கிவிடாதீர்கள்

இலவச மேக் அப் அழைப்புகளுக்கு மயங்கிவிடாதீர்கள்

நகரமெங்கும் அழகு நிலையங்கள் அமைத்து இலவச ட்ரையல் என்று உங்களை ஒருமுறையாவது மேக் அப் செய்து கொள்ள அழைக்கும் அழகு நிலையங்களுக்கு செல்லும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள். அழகு சாதனப் பொருட்களை விற்பதற்கான மார்க்கெட்டிங் பிரதிநிதிகள், தமது விற்பனை இலக்கை அடைவதற்கு செய்யும் நுணுக்கங்களில் ஒன்று தான் இலவச ட்ரையல். தனது இனிமையான பேச்சுத்திறன் மூலம் பொருட்களை உங்களது தலையில் கட்டப் பார்க்கும் தந்திரம் தான் அது. அதற்கு விலை உங்களது சருமத்தின் எழில். சரியாக சோதிக்கப்படாத, புதிய அழகு சாதனப் பொருட்களை நம்புதல் மிகவும் ஆபத்தானது.

சருமத்திற்குத் தகுந்த துணிகளை அணியுங்கள்

சருமத்திற்குத் தகுந்த துணிகளை அணியுங்கள்

மிகவும் விலை உயர்ந்த துணி வகையாக இருந்தாலும், உங்களுக்கு வசதியாக உணரவில்லையென்றால், அதனைக் கட்டாயப்படுத்தி அணிய வேண்டும் என்று எண்ணாதீர்கள். சருமத்திற்கு எது வசதியாக உணர்கிறீர்ளோ அதனை மட்டும் அணிந்தால் போதுமானது. அனைத்துத் துணி வகைகளும் சருமத்திற்கு உகந்தவை அல்ல. நீங்கள் புதிதாக ஆடைகளை வாங்கியிருந்தால், அணிவதற்கு முன் ஒருமுறை துவைத்துவிட்டு பின் அணிந்து கொள்வது நல்லது.

கடைசி நிமிட மணமகள் அலங்காரம் தவிர்க்கப்பட வேண்டும்

கடைசி நிமிட மணமகள் அலங்காரம் தவிர்க்கப்பட வேண்டும்

திருமணத்தின் போது மணமக்கள் அலங்காரம் செய்து கொள்வது வரவேற்கப்பட வேண்டியது தான். அது இருவருக்குமே அழகான தோற்றத்தை அளிக்கும். ஆனால் கடைசி நேரத்தில் முடிவு செய்து அவசர அவசரமாக ஒரு அலங்கார நிபுணரைத் தேடி அலங்காரம் செய்து கொள்வதைத் தவிர்க்கவும். ஒரு மணமக்களின் அனுபவம் அடுத்த மணமக்களுக்கு பாடமாக இருக்கும். ஒருசில அழகு சாதனப் பொருட்கள் உடலுக்கும், சருமத்திற்கும் ஒப்புக்கொள்ளாமல் அலர்ஜியை ஏற்படுத்தலாம். சில பொருட்கள் முகத்தையே பாழ்படுத்தலாம். எனவே கடைசி நிமிடத்தில் அலங்காரம் செய்து கொள்வதையும், அலங்காரத்தில் கூடுதலாக ஏதாவது சேர்ப்பதையும் தவிர்க்கவும்.

ஃபேஸ் பேக் மற்றும் ஸ்கரப்

ஃபேஸ் பேக் மற்றும் ஸ்கரப்

புதியதாக முகத்திற்கு ஃபேஸ் பேக் மற்றும் ஸ்கரப் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தியிருந்தால், உடனடியாக வெயிலில் செல்ல வேண்டாம். வேண்டுமெனில், சருமத்திற்கு ஃபேஸ் பேக் மற்றும் ஸ்கரப் போன்றவற்றை செய்த பின்னர், சருமத்தின் மீது ஏதேனும் க்ரீம் அல்லது லோஷனைத் தடவி, பின் வெளியே செல்வது சிறந்தது.

ஆகவே மென்மையான சருமத்தைப் பாதிக்கக்கூடிய செயல்களிலிருந்து தள்ளியே இருங்கள். மேலே குறிப்பிட்ட எளிமையான செயல்களைப் பின்பற்றி, சருமத்தின் மென்மையைப் பேணுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion