For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கத்திரி வெயிலில் சருமத்தைப் பற்றி கவலை வேண்டாம் !

By Mayura Akilan
|

Skin Care
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்க இன்னும் பத்துநாள் இருக்கிறது. அதற்கு முன்பாகவே அனலடிக்கும் வெயில் ஆளை வாட்டி வதைக்கிறது. வெப்பக் கதிர்வீல் இருந்து சருமத்தை பாதுகாக்க எதை எதையோ எடுத்து முகத்திலும் சருமத்தில் பூசிக்கொள்கின்றனர் இளம் பெண்கள். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தை பாதுகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் வெயில் காலத்தில் இவர்கள் தங்களின் சருமத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் பாலாடையுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி குளிர்ந்த நீரால் கழுவலாம்.

வியர்வை பாதிப்பு

வெயில் காலத்தின் முக்கிய எதிரி வியர்வை. இதனால் உடலில் துர்நாற்றம், வியர்குரு மற்றும் பங்கல் இன்பக்ஷன் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வியர்வையால் ஏற்படும். உடல் துர்நாற்றம் மற்றும் வியர்குருவை போக்க சோப்புக்கு பதில் கடலை மாவு, பயத்தம் மாவு, கஸ்தூரி மஞ்சள், வாசனை பொடி, காய்ந்த எலுமிச்சை பழ தோல் அனைத்தையும் சேர்ந்து பொடி செய்து தினமும் உடலில் தேய்த்து குளிக்கலாம்.

கடலை மாவு, பன்னீர்

எண்ணை பசை, காம்பினேஷன் மற்றும் சாதாரண சருமம் உள்ளவர்கள், கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு பன்னீரில் குழைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவலாம்.

நீர்ச்சத்து அவசியம்

கற்றாலை ஜெல் சிறந்த மருந்தாகும். வீட்டின் கொல்லைப்புறத்தில் கற்றாலை இருந்தால் அதை பறித்து அதில் உள்ள கூழ் பகுதியை சருமத்தில் பூசி ஊறவைத்து குளிக்கலாம். அதேபோல் வெள்ளரிக்காய் உடலின் நீர் சத்தினை தக்கவைக்கும். சருமத்திற்கு குளிர்ச்சி தரும்.

வெயில் காலத்தில் உடலில் உள்ள நீர்சத்து குறையும். அதனால் குறைந்த பட்சம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். பச்சை காய்கறி, கீரை மற்றும் பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழ சாறு குடிப்பது அவசியம். இதில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும்.

பால் கிளின்சர்

வெயிலில் சென்று வீட்டுக்கு வந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கிளின்சர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இது சரும ஓட்டையில் உள்ள அழுக்கை நீக்கி சருமத்தை சுத்தமாக்கும். சோப்புக்கு பதில் பேஸ்வாஷ் பயன்படுத்தலாம். பால் சிறந்த கிளின்சராக செயல்படுகிறது. குளிர்ந்த பாலை கொஞ்சம் பஞ்சில் மூழ்கி எடுத்து அதை முகத்தில் துடைக்கலாம். அழுக்கு நீங்கி முகம் புத்துணர்ச்சியாகும். தயிருடன் மஞ்சளை சேர்ந்து குழைத்து சருமத்தில் தடவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமையை தவிர்க்கலாம்.

கிருமி தாக்குதல்

வியர்வையால் பங்கல் இன்பக்ஷன் ஏற்படும். மார்பக அடிப்பகுதி அக்குள் போன்ற பகுதியில் வியர்வை தங்கி அதனால் சரும பிரச்னை ஏற்படும். அதை தவிர்க்க வெளியே செல்லும் போது ஆன்டி பங்கல் பவுடர் பயன்படுத்தலாம். மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. எனவே குளிக்கும் போது உடலில் மஞ்சள் பூசி குளிக்கலாம். சரும நோய் ஏற்படாது. முடிந்த வரை வெளியே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக காரம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

Read more about: skin care summer care tips
English summary

Skin Care Tips for Summer Home Remedies | கத்திரி வெயிலில் சருமத்தைப் பற்றி கவலை வேண்டாம் !

Warm weather can be tough on your skin. Not only do shorts, skirts and sandals expose more of your skin, hot days can leave you sweaty and sunburned if you're not careful.
Story first published: Friday, April 27, 2012, 15:20 [IST]
Desktop Bottom Promotion