For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்தை பாதுகாக்கும் இயற்கை சன்ஸ்கிரீன் லோசன் !

By Mayura Akilan
|

Sunscreen Lotion
வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வறுத்து எடுக்கிறது. சன்ஸ்கிரீன் லோசன் போடாமல் வெளியே எங்கேயும் போகமுடியாது. புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பதம் பார்த்துவிடும். எனவே அதிக காசு செலவில்லாமல் வீட்டிலே சன் ஸ்கிரீன் லோசன் தயாரித்து உபயோகித்தால் சருமம் சேதாரமில்லாமல் தப்பிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு ஈடு இணையில்லை. வெளியே கிளம்புவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக லைட்டாக தேங்காய் எண்ணெயை சருமத்தில் பூசுங்கள். சருமம் பாதிக்கப்படாது.

தேங்காய் எண்ணெயுடன் கோகோ பட்டர் கலந்து சருமத்தில் பூசவும். இது சிறந்த சன்ஸ்கிரீன் லோசன். சருமம் மென்மையடைவதோடு வெயிலில் கருப்பதை தடுக்கும்.

கோகோ பட்டர்

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைக்கவும். அதனுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ மாத்திரைகளை போட்டு ஆறவைக்கவும் இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு எங்காவது வெளியே கிளம்புவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்னதாக சருமத்தில் பூசி செல்லவும். சருமம் கருமையடையாமல் பாதுகாக்கப்படும். நல்லெண்ணெயுடன், ஆவகேடோ எண்ணெய் கலந்து அதனுடன் கோகோ பட்டர் கலந்து பூசலாம். சருமம் கருமையடையாது.

செண்பகப்பூ எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் 10 துளி புதினா சாறு, சில துளிகள் செண்பகப்பூ ஆயில் சேர்த்து கலந்து சருமத்தில் பூசிக் கொள்ளலாம். இதனால் வெயிலின் பாதிப்பு தடுக்கப்படும். வெப்பத்தில் இருந்து பாதுகாக்க இயற்கையான இந்த லோசன்களை பின்பற்றிப் பாருங்கள் சருமம் பாதுகாக்கப்படும்.

English summary

Homemade Sunscreen Lotion To Prevent Sun Tan! | சருமத்தை பாதுகாக்கும் இயற்கை சன்ஸ்கிரீன் லோசன் !

Sun tan is a major problem during summers! Even after applying sunscreen lotions, your skin gets tanned. A sunscreen basically protects your skin from ultraviolet rays by shielding a layer on the top of the skin. If you want to go natural and cover that glowing skin with a sunscreen lotion, check out the homemade sun block recipes.
Story first published: Tuesday, March 20, 2012, 17:18 [IST]
Desktop Bottom Promotion