Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இளமையா இருக்கணுமா நத்தை மசாஜ் செய்யுங்களேன்!

மூன்று நாடுகளுக்கு இடையே போட்டி
மசாஜ் செய்வதற்கு, எந்தப் பொருளை பயன்படுத்துவது என்பதில் தான், இப்போது சீனா, ஜப்பான், ரஷ்யா நாடுகளுக்கு இடையே, தற்போது கடும் போட்டி நிலவுகிறது. சீனா, ஜப்பான், ரஷ்யாவைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் நத்தை மசாஜ் கலாசாரம் அடி எடுத்து வைத்துள்ளது.
முகத்தில் நத்தை கையில் காசு
பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள அழகு நிலையங்களில் சிறிய அளவிலான நத்தைகளை, முகத்தில் விட்டு, மசாஜ் செய்கின்றனர். ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில், ‘நத்தை மசாஜ் கிளப்' உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை, படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர். அந்த நத்தைகளும், மூக்கு, கன்னம், கண், நெற்றி என, வீதி உலா போவது போல், முக உலா போகின்றன. இந்த நத்தை மசாஜ் செய்வதற்காக, வாடிக்கையாளர்களிடம், கணிசமான ஒரு தொகையையும் கறந்து விடுகின்றனர்.
இந்த நத்தை மசாஜால், முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து, முகம் புதுப் பொலிவு பெறுகிறது என்கின்றனர், இந்த கிளப்பை நடத்துவோர்.
எகிப்தில் தொடங்கிய மசாஜ்
இந்த நத்தை மசாஜ் கலாச்சாரம் கி.பி 16ம் நூற்றாண்டில் எகிப்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் படிப்படியாக முக்கிய நாடுகளுக்குப் பரவி இப்போது இந்தியாவில் அடிஎடுத்து வைத்துள்ளது. ராய்பூரில் உள்ள இந்திரா காந்தி க்ரிஷி வைத்தியசாலாவில் இந்த நத்தை மசாஜ் சிகிச்சை செய்யப்படுகிறது. இங்கு ஆப்ரிக்க காடுகளில் உள்ள நத்தைகளைக் கொண்டு செய்யப்படும் மசாஜ் மூலம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு மனஅழுத்தமும் சரியாகிறதாம்.



Click it and Unblock the Notifications