Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
கொளுத்துது வெயில் - பத்திரம் தோல்!

காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை உள்ள வெயிலில் புற ஊதாக் கதிரின் தாக்கம் அதிகம். இந்த நேரத்தில் அதிக அளவிலான சூரிய கதிர்கள் உடலில் படும் போது தோல் சிவந்து, தடித்து கருகுவதுடன், தோலில் சுருக்கங்களும், கட்டிகளும் ஏற்படுகின்றன. இது நாளைடைவில் தோல் புற்று நோயாகவும் மாற வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தோல் நோயில் இருந்து தப்பிக்க :
- பருத்தி ஆடைகளையே அதிகம் பயன்படுத்த வேண்டும்.
- புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகம் உள்ள நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.
- பணி நிமித்தமாக வெளியில் செல்ல நேர்ந்தால் கையுறைகளை அணிந்து செல்லலாம். இது வெப்பத்தின் நேரடித்தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.
- மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கிரீம்களை உபயோகிக்கலாம். வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக கிரீம்களை உபயோகிப்பதோடு, உதட்டிற்கு தேவையான தனிப்பட்ட கிரீம்களை உபயோகிக்க வேண்டும்.
சத்தான உணவுகள்:
- கோடைக்கு ஏற்ற உணவுமுறைகளை உண்ண வேண்டும்.
- பச்சைக் காய்கறிகள், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்த பழங்களை உண்ண வேண்டும்.
- மோர், இளநீர், பானங்களுடன், நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
- இவற்றை தவிர டீ, காஃபி, மது பானங்களை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- வெப்பம் அதிகமாக உள்ள சமயங்களில் மஞ்சள் பூசிச்செல்வது, தலைமுடிக்கு சாயம் தடவுவது, போன்றவற்றையும் குறைத்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
