Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
கொரிய பெண்களின் கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமத்திற்கு காரணம் அவங்க சாப்பிடும் இந்த 5 உணவுகள்தான்...!
Skin Care Tips: தற்போது உலகளவில் அழகு சாதனங்கள் மற்றும் முடி ஆரோக்கியம் சார்ந்த பொருட்களின் சந்தையானது மிகப்பெரியதாக மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் புதுப்புது அழகுப்பொருட்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பிருந்தே கொரிய பெண்கள் சுத்தமான மற்றும் கண்ணாடி போன்ற சருமத்தைக் கொண்டிருந்தனர். அதற்கு அவர்கள் அழகு சாதனப் பொருட்களுக்குப் பதிலாக ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகளையே பெரிதும் நம்பியிருந்தனர்.
கொரியப் பெண்களின் அழகின் ரகசியங்கள் இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகின்றன. உலகம் முழுக்க பல கோடி பெண்கள் கொரியப் பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். கொரியப் பெண்களின் அழகை மேம்படுத்தும் உணவுகள் இப்போது இந்திய சந்தையிலேயே கிடைக்கின்றன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்துக்கு கொள்ளலாம்.

கிம்ச்சி
இது கொரியாவின் மிகவும் பிரபலமான கொரிய உணவுகளில் ஒன்றாகும், இது சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவும். கிம்ச்சி முக்கியமாக பூண்டுடன் நிரம்பிய காரமான புளித்த முட்டைக்கோஸால் ஆனது, இதில் அதிகளவு செலினியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை சமமான மற்றும் பளபளப்பான நிறத்தை ஊக்குவிக்கின்றன மற்றும் முன்கூட்டியே வயதாவதைத் தடுக்கின்றன. ஒவ்வொரு நேர உணவின் போதும் உடன் சேர்த்து சாப்ப்பிடப்படும் இந்த சுவையான மற்றும் காரமான உணவு அனைத்து உணவிற்கும் கூடுதல் சுவையை சேர்க்கிறது.
சோயாபீன் சூப்
கொரிய உணவு வகைகளில் வறுத்த கோழி மற்றும் பார்பிக்யூவை விட அதிகம் நுகர்ப்படுவது சோயாபீன் சூப் தான், சொல்லப்போனால் இது கொரிய உணவு வகைகளின் ஆன்மாவாகும், மேலும் இது தினமும் கொரிய மக்களால் உட்கொள்ளப்படுகிறது. இது வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கொண்ட ஆரோக்கியமான சோயாபீன் பேஸ்ட்டால் நிரம்பியுள்ளது, இது சருமத்தை எரிச்சலூட்டும் புற ஊதா சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
கடற்பாசி சூப்
கொரிய காலை உணவில் வழக்கமாகக் கிடைக்கும் கடற்பாசி சூப்-ல், பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. மேலும், இது முக்கியமாக புதிதாக அம்மாவானவர்களால் உட்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இதில் குறைவான கலோரி மற்றும் குறைந்த கொழுப்பு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கண்ணாடி போன்ற சருமத்தையும், அழகான நிறத்தையும் பெற, ஒவ்வொரு நாளும் இதை காலையில் உட்கொள்ள வேண்டும்.
புளிக்கவைக்கப்பட்ட அரிசி ஒயின்
கொரியாவில் மக்கியோலி என்று அழைக்கப்படும் இது, குடிப்பதற்கும், அழகுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மதுபானத்தில் வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன, அவை சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்கி, சருமத்தின் சீரற்ற தன்மையை மேம்படுத்துகின்றன. முகப்பருவுடன் போராடும் பெண்கள் இதை தங்கள் சருமத்தில் தடவலாம், மக்கியோலி ஆன்லைனில் எளிதில் கிடைக்கும்.
பார்லி டீ
இது கோடைக்காலத்திற்கு ஏற்றது, நீங்கள் பெரிய பாட்டில்களில் பார்லி தேநீரை தயாரித்து சேமித்து வைக்கலாம். பார்லி டீ இரத்த ஓட்ட விகிதத்தை மேம்படுத்துவதற்கும், நமது சருமத்தை உறுதியாக வைத்திருப்பதற்கும், சாதாரண வேகத்தை விட வேகமாக செல்களை மீண்டும் உருவாக்குவதற்கும் பெயர் பெற்றது. இது தயாரிக்கவும், சேமிக்கவும், உட்கொள்ளவும் எளிதானது, இந்த குளிர் பானத்தை நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications
