Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப மஞ்சளை தினமும் இப்படி யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து டல்லாக உள்ளதா? உங்கள் முகப்பொலிவை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகிறீர்களா? இருப்பினும் உங்கள் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லையா? அப்படியானால் இயற்கை வழிகளை நாடுங்கள்.
அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள மஞ்சள் தூளைக் கொண்டே சரும பொலிவை இயற்கையாக அதிகரிக்கலாம். நம் முன்னோர்கள் கூட தங்கள் அழகை பராமரிக்க தினமும் மஞ்சளைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். மஞ்சளைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, அதில் உள்ள மருத்துவ பண்புகள் சருமத்தில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை போக்க பெரிதும் உதவி புரியும்.

முக்கியமாக மஞ்சளில் உள்ள குர்குமின், சருமத்தை பிரகாசமாக்கவும், முகப்பருவை எதிர்த்துப் போராவும், கரும்புள்ளிகளை நீக்கவும், சரும நிறத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இப்போது சரும பொலிவையும் அழகையும் மேம்படுத்த மஞ்சளைக் கொண்டு எப்படியெல்லாம் சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடலாம் என்பதை காண்போம்.
1. மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், சரும பொலிவு மேம்பட்டு, முகம் பளபளவென்று இருக்கும்.
2. மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 3 முறை பயன்படுத்தி வர, முகத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
3. மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ரோஸ் வாட்டர் அல்லது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு அதை குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. மஞ்சள் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தினால், முகம் பிரகாசமாக இருக்கும்.
5. மஞ்சள் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10-12 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications