Latest Updates
-
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க
ஆண்களே! உங்க முகம் பொலிவிழந்து டல்லா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை வாரத்துக்கு 2 முறை போடுங்க..
Skin Care Tips For Men In Tamil: தற்போது பெண்களைப் போன்றே ஆண்களும் தங்களின் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதற்காக பல ஆண்கள் கடைகளில் விற்கப்படும் பல்வேறு க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அந்த க்ரீம்கள் ஒன்றும் விலை குறைவானது அல்ல.
எனவே அனைவராலும் அந்த மாதிரியான க்ரீம்களை வாங்கி பயன்படுத்த முடியாது. இத்தகைய சூழ்நிலையில் ஆண்கள் தங்களின் சரும அழகை மேம்படுத்தவும், சரும பிரச்சனைகளைத் தடுக்கவும், நம் வீட்டு சமையலறையில் உள்ள மருத்துவ பண்புகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடலாம்.

இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடும் போது, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும். கீழே ஆண்களின் சருமத்தை புத்துணர்ச்சியாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கடலை மாவு மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
2. வேப்பிலை மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* முகப்பரு அதிகம் கொண்டவர்கள் ஒரு கையளவு வேப்பிலையை எடுத்து நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
3. கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
* முதலில் 1/2 வெள்ளரிக்காயை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு துணியில் போட்டு வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. மஞ்சள் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. எலுமிச்சை மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பாதி தக்காளியை எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் ஆனதும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது சரும வறட்சியை அதிகரித்துவிடும்.



Click it and Unblock the Notifications
