Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
முழங்கை மற்றும் முழங்கால் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்!
Skin Care Tips In Tamil: என்ன செய்தாலும் சிலருக்கு முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமை மட்டும் போகாமல் இருக்கும். இப்படி முழங்கை மற்றும் முழங்கால் மட்டும் கருமையாக இருந்தால், அது ஒருவரது ஒட்டுமொத்த தோற்றத்தையும் பாதிக்கும். உடலின் மற்ற பாகங்களை விட முழங்கை மற்றும் முழங்கால்கள் மட்டும் கருமையாக இருப்பதற்கு காரணம் இறந்த சரும செல்கள் குவிதல், உராய்வு மற்றும் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது போன்றவை தான்.

அதுமட்டுமின்றி, இப்பகுதிகளில் எண்ணெய் சுரப்பிகள் குறைவாக இருப்பதால், அவை வறட்சி மற்றும் கருமைக்கு ஆளாகின்றன. இந்நிலையில் போதுமான பராமரிப்பை இப்பகுதிகளுக்கு கொடுக்காமல் போகும் போது கருமையான திட்டுக்கள் உருவாகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்பகுதியில் ஏற்படும் வறட்சியையும், கருமையையும் தடுக்க ஈரப்பதமூட்டுவது அவசியம். அதுமட்டுமின்றி, இப்பகுதிகளில் தேங்கும் இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப்களை பயன்படுத்த வேண்டும். அதுவும் நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களை கொண்டு முழங்கை, முழங்கால்களுக்கு பராமரிப்பு கொடுக்கும் போது, கருமை நீங்கி வெள்ளையாகும். இப்போது முழங்கை மற்றும் முழங்கால் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
1. கற்றாழை மற்றும் பால் பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் பாலை சம அளவில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வரும் போது, முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமை நீங்குவதைக் காணலாம்.
2. ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
* இதற்கு ஒரு பௌலில் சர்க்கரையை எடுத்துக் கொண்டு, அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் தேய்த்து கழுவ வேண்டும்.
3. தயிர் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்
* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 4 முறை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
4. எலுமிச்சை சாறு
* இதற்கு ஒரு பௌலில் பாதி எலுமிச்சையின் சாற்றினை எடுத்துக் கொண்டு, அதை முழங்கை மற்றும் முழுங்கால்களில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* பின்பு தவறாமல் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
5. மஞ்சள், பால் மற்றும் தேன்
* இதற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இப்படி அடிக்கடி பயன்படும் போது, முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமை நீங்குவதோடு, மென்மையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

