Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
உங்க முகம் கருப்பா, டல்லா இருக்கா? அப்ப இந்த டோனரை தினமும் யூஸ் பண்ணுங்க...
Skin Care Tips In Tamil: ஒருவரது முகம் கருப்பாக, டல்லாக காட்சியளிக்கிறது என்றால், அவரது முகத்தில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்க வேண்டுமானால், முகத்தை தினமும் ஆழமாக சுத்தம் செய்ய வேண்டும். பெரும்பாலானோர் முகத்தில் உள்ள அழுக்கை நீக்க சோப்பு மற்றும் ஃபேஸ் வாஷ் போன்றவற்றையே பயன்படுத்துவார்கள்.
ஆனால் இவற்றைக் கொண்டு அதிகமாக முகத்தை சுத்தம் செய்தால், பின் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் நீக்கப்பட்டு விடும். இப்படி எண்ணெய்கள் முழுமையாக நீக்கப்பட்டு விட்டால், சருமத்தின் pH அளவு பாதிக்கப்பட்டு, பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சரி, வேறு என்ன வழி என்று கேட்கலாம். அது தான் டோனர் பயன்படுத்துவது.

டோனர்களை பயன்படுத்தும் போது, அது சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றுவதோடு, சருமத்துளைகளை சுருங்கச் செய்து, சருமத்தில் பருக்கள் ஏதும் வராமல் தடுக்கும். மேலும் டோனர்களை பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும், இளமையாகவும் காட்சியளிக்கும்.
அதற்கு கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த டோனர்களை பயன்படுத்தாமல், நேச்சுரல் டோனர்களைப் பயன்படுத்தினால், எவ்வித பக்கவிளைவுகளும் இருக்காது மற்றும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது முகத்திற்கு உடனடி பொலிவைத் தரும் சில நேச்சுரல் டோனர்களைக் காண்போம்.
1. கற்றாழை மற்றும் ரோஸ்வாட்டர் டோனர்
* இதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, ஈரமான பஞ்சுருண்டை கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.
2. க்ரீன் டீ மற்றும் தேன் டோனர்
* இதற்கு ஒரு பௌலில் க்ரீன் டீயை எடுத்து, அத்துடன் சிறிது தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவ வேண்டும்.
* அடுத்து பஞ்சுருண்டையைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி தினமும் செய்யும் போது அழுக்குகள் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
3. வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை டோனர்
* இதற்கு ஒரு பௌலில் வெள்ளரிக்காய் சாற்றினை எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி, ஈரமான பஞ்சுருண்டை கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி தினமும் செய்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.
4. ஆப்பிள் சீடர் வினிகர் டோனர்
* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கும்.
5. தயிர் மற்றும் மஞ்சள் டோனர்
* இதற்கு ஒரு பௌலில் தயிரை எடுத்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, பஞ்சுருண்டையை நீரில் நனைத்து, முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி செய்வதனால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, சரும நிறமும் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications