Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சரும நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. ஒரு டைம்-லயே நல்ல மாற்றம் தெரியும்...
Skin Care Tips In Tamil: ஒவ்வொருவரும் நல்ல வெள்ளையான சருமத்தையே பெற விரும்புவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் பல்வேறு அழகு பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அனைவராலும் இப்படி விலை அதிகமான பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாது. இந்நிலையில் நிறைய பேர் சரும நிறத்தை அதிகரிக்க இயற்கை வழிகள் ஏதேனும் உள்ளதா என்று தேடுவார்கள்.
நீங்களும் அப்படி தான் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க இயற்கை வழிகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சரும நிறத்தை அதிகரிக்க உதவும் 2 ஃபேஸ் பேக்குகளை போடுங்கள்.

இந்த ஃபேஸ் பேக்குகளை ஒருமுறை பயன்படுத்தினால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். இப்போது அப்படிப்பட்ட ஃபேஸ் பேக்குகள் என்னவென்பதையும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் காண்போம்.
ஃபேஸ் பேக் #1
தேவையான பொருட்கள்:
* சாதம் - 1/2 கப்
* காபித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு/ரோஸ் வாட்டர்
பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு கிண்ணத்தில் சாதத்தை எடுத்துக் கொண்டு, அத்துடன் காபித் தூள் சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் அவற்றை சேர்த்து, சிறிது ரோஸ்வாட்டர் அல்லது எலுமிச்சை சாறு அல்லது நீரை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வெறுமனே முகத்தில் மட்டுமின்றி, கருமையாக இருக்கும் கை, கால்கள் மற்றும் அக்குளிலும் பயன்படுத்தலாம்.
* முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கை தினமும் கூட பயன்படுத்தலாம் மற்றும் ஒருமுறை பயன்படுத்தினாலே நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஃபேஸ் பேக் #2
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
* பச்சரிசி - 2 ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் பச்சரிசி ஆகிய மூன்றையும் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஊற வைத்ததை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications