Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க..
Skin Care Tips In Tamil: வெயில் காலம் என்பதால் அதிகமாக வியர்க்கும். அத்துடன் முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கும். இப்படி முகத்தில் எண்ணெய் வழிந்தவாறு இருந்தால், அதன் விளைவாக சருமத்துளைகளில் அழுக்குள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு, பருக்களை உண்டாக்கிவிடும்.
இந்த பருக்கள் பின் முகத்தில் அசிங்கமான வடுக்களை ஏற்படுத்திவிடும். இந்த பிரச்சனையெல்லாம் சந்திக்கக்கூடாதெனில், சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.

அதுவும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும் ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்கலாம். குறிப்பாக இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது எண்ணெய் பசை சருமத்திற்கான சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் முகத்தை நீரில் கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் நற்பதமான கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் 2 முறை கற்றாழையைப் பயன்படுத்தி வர, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். மேலும் முகத்தில் எண்ணெய் வழிவதும் தடுக்கப்படும்.
2. பாதாம் எண்ணெய் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு தினமும் இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் மறுநாள் காலையில் முகத்தை கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஈ சரும செல்களை சரிசெய்யவும், சருமத்தை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள உதவும்.
3. தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2-3 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுவதன் மூலம், அதில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து, சருமத்துளைகளில் உள்ள அடைப்புக்களை நீக்கும். மேலும் இந்த ஃபேஸ் பேக் சருமத்தை பொலிவாக்குவதோடு, ஈரப்பதமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
4. மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. மஞ்சள் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
6. முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அத்துடன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி கட்டுப்பட்டு, விரிவடைந்த சருமத்துளைகள் இறுக்கமடையும். மேலும் இந்த ஃபேஸ் பேக் பருக்கள் வருவதைத் தடுக்கும்.
7. சந்தன ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊறு வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர சருமத்தில் எண்ணெய் சுரப்பு கட்டுப்படுவதோடு, பருக்களும் வராமல் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
8. ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்கை முழுமையாக வெளியேற்றி, சரும நிறத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பதைத் தடுக்கும்.
9. தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முகத்தை நீரில் கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தேனை எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் விரிவடைந்த சருமத்துளைகள் இறுக்கமடைவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்படும். மேலும் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியும் கட்டுப்படும்.
10. தயிர் மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து, 2-3 துளிகள் டீ ட்ரீ ஆயிலை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி, முகம் பளிச்சென்று பிரகாசமாகவும், பொலிவோடும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications