Latest Updates
-
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
உங்க முகம் டல்லா இருக்கா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Skin Care Tips In Tamil: தற்போது மாம்பழ சீசன் என்பதால், மார்கெட்டுகளில் மாம்பழங்கள் விலைக் குறைவில் விற்கப்படும். இப்படி விலைக்குறைவில் மாம்பழங்கள் கிடைக்கும் நிச்சயம் அனைவரும் வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்து சாப்பிடுவோம். மாம்பழங்கள் வெறும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம் மட்டுமின்றி, இவற்றைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புகளை கொடுத்து வந்தால், சருமத்தில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
ஏனெனில் மாம்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை அனைத்தும் சருமத்தில் மாயங்களை புரியக்கூடியவை.

முக்கியமாக மாம்பழத்தைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சருமத்தில் உள்ள கருமை நீங்கும், சருமம் நீரேற்றத்துடன் இருக்கும் மற்றும் சருமம் பொலிவு பெறும். அதற்கு மாம்பழத்தைக் கொண்டு அடிக்கடி ஃபேஸ் பேக்கை போட வேண்டும். கீழே எந்த பிரச்சனைக்கு மாம்பழத்தை எந்த மாதிரி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. சரும கருமை நீங்க...
* முதலில் ஒரு பௌலில் மாம்பழ கூழை 2-4 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
2. பொலிவான முகத்திற்கு...
* ஒரு பௌலில் 1-2 டேபிள் ஸ்பூன் மாம்பழ கூழை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2-3 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
3. வறண்ட சருமத்திற்கு...
* ஒரு பௌலில் மாம்பழ துண்டுகளை எடுத்து, அவற்றை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1-2 டேபிள் ஸ்பூன் மசித்த அவகேடோ பழத்தை சேர்த்து, அத்துடன் 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும்.
4. சரும சுருக்கம் நீங்க...
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் மசித்த மாம்பழக் கூழை எடுத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
5. கரும்புள்ளிகள் நீங்க...
* ஒரு பௌலில் 2-3 டேபிள் ஸ்பூன் மாம்பழக் கூழை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் பால் மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சில நிமிடங்கள் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின்பு அதை நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் அனைத்தும் முற்றிலும் இயற்கையானவை மற்றும் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும் சிலருக்கு சில பொருட்கள் அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால், இவற்றை பயன்படுத்தும் முன் கைகளில் தடவி சோதனை செய்து பார்த்த பின் முகத்தில் பயன்படுத்துங்கள்.
Image Courtesy: Masala Monk



Click it and Unblock the Notifications