Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சரும கருமையை போக்கணுமா? அப்ப உருளைக்கிழங்கை வாரம் 3 முறை இப்படி யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: ஒவ்வொருவரும் தங்கள் முகம் பளிச்சென்று பிரகாசமாக எவ்வித தழும்புகளும், கருமையும் இல்லாமல் இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் ஏராளமான அழகு பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அவற்றில் கெமிக்கல்கள் சேர்த்திருப்பதால் சிலருக்கு அந்த பொருட்கள் அழற்சியை ஏற்படுத்தலாம்.
உங்களுக்கும் அப்படி ஏதேனும் க்ரீம்களை பயன்படுத்தினால், சருமத்தில் அழற்சி ஏற்படுகிறது என்றால், அவற்றை நிறுத்திவிட்டு, இயற்கை வழிகளைப் பின்பற்றுவதே சிறந்தது. அதுவும் நம் வீட்டு சமையலறையில் சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஏராளமான பொருட்கள் உள்ளன. அதுவும் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை கூட நம் சரும பராமரிப்பில் பயன்படுத்தலாம்.

குறிப்பாக அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு சருமத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவி புரியும் என்பது தெரியுமா? கீழே எந்த சரும பிரச்சனைக்கு உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து பின்பற்றி பயன் பெறுங்கள்.
1. கரும்புள்ளிகள் நீங்க..
* முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக இருந்தால், உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சாற்றினை பஞ்சுருண்டையில் நனைத்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகள் மறையும்.
2. கருவளையங்கள் நீங்க...
* கருவளையங்களை அதிகம் கொண்டவர்களுக்கு உருளைக்கிழங்கு மிகச்சிறந்த நிவாரணி. அதுவும் உருளைக்கிழங்கை வட்ட துண்டுகளாக்கி, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து நன்கு குளிர்விக்க வேண்டும்.
* பின் கண்களை மூடி அந்த உருளைக்கிழங்கு துண்டை கண்களின் மேல் வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் விரைவில் நீங்கும்.
3. முகப்பரு நீங்க..
* முகப்பருக்கள் அதிகமாக இருந்தால், உருளைக்கிழங்கை தேனுடன் சேர்த்து மாஸ்க் போட வேண்டும்.
* அதற்கு துருவிய உருளைக்கிழங்கை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
4. முதுமை தோற்றத்தைத் தடுக்க...
* முகத்தில் சுருக்கங்கள் அதிகம் வருவதைக் கண்டால், உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து ஃபேஸ் பேக் போட வேண்டும்.
* அதற்கு உருளைக்கிழங்கு சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை சம அளவில் ஒரு பௌலில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ளலாம்.
5. சரும கருமை நீங்க...
* சரும கருமை அதிகமாக இருந்தால், ஒரு உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வர, சரும கருமை நீங்கி, சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications