Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
பார்லர் சென்று 10 பைசா செலவழிக்காமல் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப இந்த ஃபேஷியல் மாஸ்க்கை போடுங்க..
Skin Care Tips In Tamil: யாருக்கு தான் பொலிவான சருமத்தின் மீது ஆசை இருக்காது. நிச்சயம் ஒவ்வொருவருமே அப்படிப்பட்ட சருமத்தைப் பெறவே விரும்புவோம். அதற்காக அழகு நிலையங்களுக்கு எல்லாம் சென்று சருமத்திற்கு பலவிதமான பராமரிப்புக்களையும் கொடுப்போம். ஆனால் அனைவராலுமே இப்படி அழகு நிலையங்களுக்கு சென்று நிறைய பணத்தை செலவழிக்க முடியாது. அப்படியே பணத்தை செலவழிக்க முடிந்தாலும், தற்போதைய வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை முறையினால், பார்லர் செல்லும் அளவு நேரம் கிடைப்பதில்லை.
இந்நிலையில் வீட்டின் சமையலறையில் உள்ள இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பது என்று யோசிப்போர் ஏராளம். அதுவும் தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருப்பதால் , நிறைய பேரின் சரும நிறம் மாறியிருக்கும். இதனால் பலரது முகம் பொலிவிழந்து கருப்பாக காட்சியளிக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், சருமத்தை பொலிவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து வந்தாலே போதும். நீங்கள் பார்லர் சென்று பணம் செலவழிக்காமல் சரும நிறத்தை அதிகரிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில நேச்சுரல் ஃபேஷியல் மாஸ்க்குகளை ட்ரை செய்யுங்கள்.
1. தேன் மற்றும் மஞ்சள் மாஸ்க்
* இந்த ஃபேஷியல் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை நீரில் கழுவி துடைத்துவிட்டு, தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஷியல் மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
2. அவகேடோ மற்றும் தயிர் மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த அவகேடோ பழத்தின் பாதியை எடுத்து, அதன் தசைப்பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. ஓட்ஸ் மற்றும் பால் மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின் 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, முகம் பளிச்சென்று இருக்கும்.
4. வாழைப்பழம் மற்றும் தேன் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பாதி வாழைப்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
5. கற்றாழை மற்றும் எலுமிச்சை மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 1-2 முறை மேற்கொள்ளலாம்.
6. வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ்வாட்டர் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் அரைத்த வெள்ளரிக்காய் விழுதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் மிகச்சிறந்த ஒரு கோடைக்கால ஃபேஸ் மாஸ்க் ஆகும். இந்த மாஸ்க்கை கோடைக்காலத்தில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால், முகத்தை எப்போதும் பளிச்சென்று வைத்துக் கொள்ள முடியும்.
7. கடலை மாவு மற்றும் பால் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.
பொலிவான சருமத்தைப் பெறுவதற்கான சில டிப்ஸ்...
* ஃபேஸ் மோஸ்க் போட்ட பின் முகம் பளிச்சென்று தெரிய வேண்டுமானால், மாஸ்க் போடும் முன், முகத்தில் பாலைத் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.
* ஃபேஸ் மாஸ்க் போட்டு நீக்கிய பின், முகத்தில் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
* முக்கியமாக சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவும், நீண்ட காலம் இளமையாகவும் இருக்க வேண்டுமானால், நிறைய நீரை அருந்த வேண்டும் மற்றும் ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











