Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
கண்ணாடி போல பளபளப்பான சருமம் வேண்டுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க...
Skin Care Tips In Tamil: உலகிலேயே கொரிய பெண்கள் பளபளப்பான கண்ணாடி போன்ற சருமத்திற்கு பெயர் பெற்றவர்கள். இந்நாட்டில் உள்ள பெண்கள் பொம்மை போன்று மிகவும் அழகாக இருப்பார்கள். இதனாலேயே நிறைய பெண்கள் இந்த கொரிய பெண்களைப் போன்ற சருமத்தைப் பெற விரும்புகின்றனர். அதற்காக கடைகளில் விற்கப்படும் ஏராளமான கொரியன் சரும பராமரிப்பு பொருட்களை வாங்கி பெண்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இப்படி விலை அதிகமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட, நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே கண்ணாடி போன்ற பளபளப்பான சருமத்தைப் பெறலாம் என்பது தெரியுமா? கீழே கண்ணாடி போன்ற பளபளப்பான சருமத்தைப் பெற உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி, உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், வெள்ளையாகவும் மாற்றுங்கள்.

1. அவகேடோ, ஆலிவ் ஆயில் மற்றும் தேன்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு அவகேடோ பழத்தின் சதைப் பகுதியை எடுத்து மசித்து, அத்துடன் ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
2. ஓட்ஸ், தேன் மற்றும் ரோஸ் வாட்டர்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் கழுவி, துடைக்க வேண்டும்.
* இறுதியாக மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
3. கொக்கோ வெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர்
* இதற்கு ஒரு பௌலில் கொக்கோ வெண்ணெயுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை சருமத்தில் பஞ்சுருண்டை பயன்படுத்தி தடவ வேண்டும்.
* 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை போடுவதனால், சருமம் ஈரப்பதத்துடனும், பட்டுப்போன்று மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.
4. மஞ்சள், சந்தன பவுடர், ரோஸ் வாட்டர் மற்றும் பால்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூள், சந்தனப் பவுடர், ரோஸ் வாட்டர், பால் ஆகியவற்றை சமஅளவில் எடுத்து சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாகவும், மென்மையாகவும் இருக்கும்.
5. தயிர் மற்றும் தேன்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் தயிர் மற்றும் தேனை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்குவதோடு, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்த உதவும்.
6. ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை
* இதற்கு ஒரு பௌலில் ஆலிவ் ஆயிலை எடுத்து, அத்துடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 10 நிமிடம் ஊற வைத்து, அதன் பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, மென்மையாக தேய்த்தவாறு முகத்தைக் கழுவ வேண்டும்.
* இறுதியாக மாய்ஸ்சுரைசரை தவறாமல் தடவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications