Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா?
மன அழுத்தத்தால் முகத்தில் அதிக பருக்கள் தோன்றுகிறதா? அதை எப்படி போக்கலாம்?
Skin Care Tips In Tamil: மன அழுத்தம் என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாகும். இது நமக்கு சரும பிரச்சனைகள், சரும பாதிப்பு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் காரணமாக முகத்தில் ஏராளமான முகப்பருக்கள் தோன்றுகின்றன. இந்த முகப் பருக்களால் சருமத்தில் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.
முகத் தழும்புகள் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மன அழுத்தம் நம் உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பை ஏற்படுத்தி இத்தகைய மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. மன அழுத்தத்தை சரி செய்ய கீழ்க்கண்ட தினசரி டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இது உங்களுக்கு மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

மன அழுத்தத்தை சரிசெய்ய உதவும் குறிப்புகள்
மன அழுத்தம் காரணமாக முகத்தில் நிறைய பருக்கள் தோன்றுகின்றன. எனவே மன அழுத்தத்தை சரிசெய்ய தியானம், யோகா மற்றும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டு வரலாம். மன அழுத்தத்தை நிர்வகிப்பதன் மூலம் ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளை சரிசெய்ய முடியும்.
போதுமான தூக்கம் அவசியம்
ஆராய்ச்சியின் படி, நீங்கள் போதுமான மற்றும் தரமான தூக்கத்தை பெறுவது மிகவும் அவசியம். நீங்கள் சரியாக தூக்கம் இல்லாமல் இருந்தால் அது உங்கள் மன அழுத்தத்தை பாதிக்கும். இதனால் உடலில் வீக்கம் அதிகரிக்கும், இது முகத்தில் முகப்பருக்களை உண்டாக்கும். எனவே மன அழுத்தம் இல்லாமல் வாழ தினசரி 7 மணி நேரம் இடைவிடாமல் தூங்குவது மிகவும் அவசியம்.
சீரான உணவு அவசியம்
சீரான உணவு சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆன்டி ஆக்ஸிடன்கள் வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது. மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து இது உங்களை காக்கிறது. சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்க வேண்டும். ஏனெனில் இவை முகப்பருக்களை தூண்ட வாய்ப்பு உள்ளது.
உங்களை நீரேற்றத்துடன் வைத்திருங்கள்
ஒருவர் தங்கள் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்றால் அதற்கு நீர்ச்சத்து மிகவும் அவசியம். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடம்பில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க நினைத்தால் தினமும் குறைந்தது 8 கிளாஸ் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் சரும ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது மன அழுத்தத்தால் ஏற்படும் பருக்களை போக்க உதவுகிறது. கற்றாழை ஜெல்லை பிரித்தெடுத்து உங்கள் சருமத்தில் தடவினால் வீக்கம், சிவத்தல் போன்ற பிரச்சினைகள் குறைய வாய்ப்பு உள்ளது. கற்றாழை ஜெல்லில் நிறைய ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது சருமத்தை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.
மனதை அமைதிப்படுத்தும் மூலிகை தேநீர்
சீமைச்சாமந்தி மற்றும் மிளகுக்கீரை போன்ற சில மூலிகைகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்கிறது. இறுதியில் மன அழுத்தத்தால் ஏற்படும் பருக்களை போக்க உதவுகிறது.
வழக்கமான உடற்பயிற்சி அவசியம்
தினசரி வழக்கமான உடற்பயிற்சி செய்வது உங்கள் ஒட்டுமொத்த வாழ்விற்கும் நன்மை அளிக்கிறது. ஆரோக்கியமான சருமத்திற்கு உடற்பயிற்சியும் அவசியமான ஒன்று. மன அழுத்தத்தை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வியர்வை மூலம் நச்சுக்களை அகற்றவும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். வாரத்தின் பெரும்பாலான நாட்களில் யோகா போன்ற உடற்பயிற்சிகளை செய்து வரலாம். குறைந்தது 30 நிமிடங்கள் இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
இயற்கையான ஃபேஸ் மாஸ்க்குகள் பயன்பாடு
மன அழுத்தத்தை எதிர்த்து போராட இயற்கையான ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்தி வரலாம். தேன், மஞ்சள் மற்றும் தயிர் போன்ற பொருட்களில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை அழற்சியை போக்கி முகப்பருக்களை குறைக்கிறது. எனவே முகப்பருக்களை போக்க வீட்டில் இருந்த படியே சில இயற்கையான ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்தி வாருங்கள்.



Click it and Unblock the Notifications