Latest Updates
-
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
டல்லான முகத்தை பொலிவாக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஷியலை செய்யுங்க...
Skin Care Tips In Tamil: வாரம் முழுவதும் சருமத்திற்கு எவ்வித பராமரிப்பும் கொடுக்காமல், உங்கள் முகத்தில் இறந்த செல்களும், அழுக்குகளும் அதிகம் தேங்கி, முகம் பொலிவிழந்து டல்லாகவும், கருப்பாகவும் காணப்படுகிறதா? உங்கள் முகத்தை பளிச்சென்று பிரகாசமாக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் அழகு நிலையங்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க நினைக்கிறீர்களா?
ஆனால் அப்ப நிறைய பணம் செலவழித்து சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்காமல், வார இறுதியில் உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்க, வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பைக் கொடுங்கள். இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பைக் கொடுக்கும் போது, எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது, சருமமும் பளிச்சென்று பிரகாசமாக ஜொலிக்கும்.

கீழே சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தின் பொலிவை உடனடியாக அதிகரிக்கும் சில நேச்சுரல் ஃபேஷியல் ப்ளீச்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் உங்களுக்கு எது ஈஸியாக இருக்குமோ, அதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.
1. கடலை மாவு
* சருமத்திற்கு பொலிவைத் தரும் ஒரு அற்புதமான பொருள் தான் கடலை மாவு. இந்த கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை திறம்பட வெளியேற்றும்.
* அதற்கு ஒரு பௌலில் சிறிது கடலை மாவை எடுத்து, அதில் நீர் அல்லது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. மஞ்சள்
* மஞ்சள் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தின் பொலிவை மேம்படுத்த பெரிதும் உதவி புரியும்.
* அதற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 5 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. எலுமிச்சை
* எலுமிச்சை இயற்கையாகவே ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டது.
* இந்த எலுமிச்சையின் சாற்றினை ஒரு பௌலில் பிழிந்து, அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. கற்றாழை
* கற்றாழை குளிர்ச்சிப் பண்புகளைக் கொண்டது மற்றும் இது சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும், கரும்புள்ளிகளைப் போக்கும்.
* இந்த கற்றாழை ஜெல்லை ஒரு பௌலில் எடுத்து, அதை முகத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. ஓட்ஸ் மற்றும் தயிர்
* இதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
6. உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஜூஸ்
* இதற்கு ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சாறு, வெள்ளரிக்காய் சாறு மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications