Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
Skin Care: 30 வயசுலேயே உங்க முகம் வயசான மாதிரி இருக்கா? அதுக்கு இதுல ஒன்னுதான் காரணமா இருக்குமாம்...!
Skin Care: வயதாவது என்பது யாராலும் தடுக்க முடியாத ஒன்றாகும், ஆனால் இளமையிலேயே முதுமையான தோற்றத்தை பெறுவது என்பது மிகவும் மோசமான ஒன்றாகும். தற்போதைய காலகட்டத்தில் 20 வயதுகளிலேயே சிலர் முதுமையான தோற்றத்தை அடைகின்றனர்.
இளமையாக இருக்க வேண்டிய காலத்தில் இப்படி முதுமையான தோற்றத்தை பெறுவதற்கான காரணம் என்னவென்பது நம்மை கவலையடையச் செய்யலாம். சரும ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் முன்கூட்டிய வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் பல காரணிகள் உள்ளன. சூரிய ஒளி, உறக்கம், உணவு மற்றும் மனநிலை என பல விஷயங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்.

நீரிழப்பு
உடலில் நீர்ச்சத்து இல்லாதது சருமம் மந்தமாகவும், சோர்வாகவும் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மோசமான நீரேற்றம் சேதத்திலிருந்து தன்னைத்தானே சரிசெய்யும் சருமத்தின் திறனை பாதிக்கிறது. இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை தளர்த்துகிறது, இதன் விளைவாக சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் இருப்பது
சூரிய ஒளியிலிருந்து போதுமான பாதுகாப்பு இல்லாமல் இருப்பது முன்கூட்டிய முதுமைக்கு வழிவகுக்கும். இது சூரிய ஒளி, தோல் அழற்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. நீங்கள் நல்ல சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தாமல் வெளியே செல்கிறீர்கள் என்றால், கருவளையங்கள், சுருக்கங்கள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற தோல் ஆரோக்கிய பிரச்சனைகளை நீங்கள் அனுபவிக்கலாம்.
வைட்டமின் சி பற்றாக்குறை
உங்கள் சருமம் வயதானதாகத் தோன்றினால், அது உங்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி கொலாஜன் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது, ,மற்றும் சுருக்கங்களை குறைத்து, சருமத்தை பளபளப்பானதாக மாற்றுகிறது.
புகைபிடித்தல்
புகைபிடித்தல் பல ஆரோக்கியப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, அதில் சரும பிரச்சினைகளும் அடங்கும். புகைபிடித்தல் கொலாஜன் மற்றும் தோல் நெகிழ்ச்சித்தன்மையை குறைக்கிறது. இது லிப் ஹைப்பர் பிக்மென்டேஷனையும் ஏற்படுத்துகிறது. சிகரெட்டின் நச்சுக் கூறுகள் ஆரோக்கியமான சரும செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, சருமத்தை வயதானதாக மாற்றுகிறது மற்றும் முன்கூட்டியே முதுமையை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.
மனஅழுத்தம்
படிப்பு, தொழில், வேலை மற்றும் உறவுகளின் அழுத்தம் அதிகரிப்பதால் 20 வயதுகளில் இருப்பவர்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படலாம். இந்த மன அழுத்தம் உங்கள் தோல் சுருக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். நாள்பட்ட மன அழுத்தம் நமது ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கிறது. இது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது, உடல் முழுவதும் ஆக்ஸிஜனின் ஓட்டத்தை பாதிக்கிறது. இதன் விளைவாக கருவளையங்கள், கரும்புள்ளிகள், நேர்த்தியான கோடுகள் மற்றும் வெளிர் சருமம் ஏற்படுகிறது.



Click it and Unblock the Notifications

