Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
உங்க முகத்தில் காய்ச்சாத பாலை இந்த பொருட்களுடன் சேர்த்து தடவினால் உங்க முகம் தகதகன்னு ஜொலிக்குமாம்...!
Skin Care: அழகாக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் விருப்பமாகும், அழகின் மீதான விருப்பத்திற்கு பாலின வேறுபாடுகள் கிடையாது. தங்கள் சரும அழகை பேணிக்காப்பதில் அதிக கவனம் கொண்டவர்களே அதிகம். ஆனால், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அதில் கவனம் செலுத்த போதுமான நேரம் கிடைப்பதில், சிலருக்கு அழகை பேணி காக்க செலவிட வேண்டுமா என்கிற எண்ணம் நிச்சயம் இருக்கும்.
அப்படி நினைக்கும் பெண்களுக்காகவே வீட்டில் எளிமையாக செய்ய கூடிய பேஸ் பேக் வரிசையில் இன்று நம் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பால் பேஸ் பேக் செய்முறை மற்றும் பயன்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பால் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் செய்முறை
2 ஸ்பூன் பாலுடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவவும்.
பயன்கள்:
சருமத்தில் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் பிரகாசத்திற்கு பெயர் பெற்றது மஞ்சள். அது பாலில் இருக்கும் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்போடு இணையும் போது நல்ல மாற்றங்களை தரும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் இருக்கும் கறைகள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வாக இருக்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்துவது நல்ல பலனை தரும். மஞ்சளின் அளவில் கவனமாக இருங்கள், மஞ்சள் முகத்தில் அதிக அளவில் ஒட்டிக்கொண்டால் முகம் தற்காலிக மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும்.
பால் மற்றும் தேன் ஃபேஸ் பேக் செய்முறை
2 ஸ்பூன் பாலுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவலாம்
பயன்கள்
இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயல்பட்டு தேன் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது. இது பாலுடன் இணையும் போது மிக சிறந்த நன்மைகளை தரவல்லது. இந்த பேக் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை கொடுக்க கூடியது, சருமத்தை ஈரப்பதத்தை தக்க வைத்து, வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தும் பளபளப்பான சரும பொலிவை தருகிறது. வாரம் ஒரு முறை இதனை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு, பின் குளிர்ந்த நீரால் கழுவவும். நீங்கள் பயன்படுத்தும் தேன் சுத்தமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
பால் மற்றும் கடலைமாவு ஃபேஸ் பேக் செய்முறை
2 ஸ்பூன் பாலுடன் 1 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவவும்.
பயன்கள்:
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அசுத்தங்களை நீக்கி, இயற்கையான சுத்தப்படுத்தியாக கடலைமாவு செயல்படுகிறது. பாலுடன் கடலை மாவை கலக்கும் இந்த ஃபேஸ் பேக் எண்ணெய்ப்பசை இல்லாத மற்றும் பிரகாசமான நிறத்தை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. இந்த பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துவது நல்ல மாற்றத்தை தரவல்லது. இந்த பேஸ் பேக்கை பயன்படுத்திய பின், மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது நல்லது.
பால் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக் செய்முறை
2 ஸ்பூன் பப்பாளி விழுதுடன் 2 ஸ்பூன் பால் சேர்த்து முகத்தில் தடவவும்
பயன்கள்:
பப்பைன் என்னும் என்சைம்கள் பப்பாளியில் நிறைந்து இருக்கின்றன. இது சரும பொலிவை அதிகரிக்கிறது. பாலுடன் பப்பாளி கலந்து பயன்படுத்தும் இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மிருதுவாக வைக்கவும், வெயிலால் ஏற்படும் நிறமாற்றத்தை தடுக்கவும் உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவது நல்ல மாற்றத்தை தரும். இந்த பேஸ் பேக்கை முகத்தில் பூசி 15-20 நிமிடங்களுக்கு பின் கழுவவும். சிறப்பான பலன்களை பெற பப்பாளி நன்றாக பழுத்திருப்பதை உறுதி செய்யவும்.
பால் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக் செய்முறை
1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 2 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தேய்க்கவும்
பயன்கள்:
கற்றாழை அதன் மருத்துவ பண்புகளுக்காகவே பெரிதும் பெயர் பெற்ற ஒன்று. பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களோடு கற்றாழை சேரும் இந்த ஃபேஸ் பேக் சரும எரிச்சலை குறைக்கவும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது. வாரம் ஒரு முறை இதை முகத்தில் பூசி, 20 நிமிடங்களுக்கு பின் கழுவவும். நீங்கள் பயன்படுத்தும் கற்றாழை ஜெல் தூய்மையானது அல்லது கலப்படம் இல்லாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.



Click it and Unblock the Notifications

