Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
வெயில் காலத்தில் சருமத்தை ஜொலிக்க வைக்கும் வீட்டு பொருட்கள் என்னென்ன? விளக்குகிறார் ப்யூட்டிஷியன் ஜெயஸ்ரீ...!
Summer Skincare: இந்த வருடம் வெயில்காலம் வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டது. அதுவும் இந்த வருடம் வழக்கத்தை விட வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. வெயில்காலம் வந்தாலே பல ஆரோக்கிய பிரச்சினைகள் வருவது இயல்புதான், மேலும் இலவச இணைப்பாக சருமப் பிரச்சினைகளும் ஏற்படும். வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும்.
அதிக வெப்பம், வறண்ட காற்று, நீண்ட நேரம் வெளியில் இருப்பது போன்ற பிரச்சினைகள் சருமத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழலில் சருமத்தைப் பாதுகாக்க அனைவராலும் பியூட்டி பார்லர் செல்ல முடியாது. எனவே அதுபோன்ற சூழலில் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவது சருமத்தைப் பாதுகாக்கும். வெயில் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ப்யூட்டிசியன் ஜெயஸ்ரீ.

எலுமிச்சை சாறு
வெயில் காலம் வந்தாலே அனைவரின் வீட்டிலும் அவசியம் இருக்கும் ஒரு பழம் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சை நமது சருமத்திற்கு நாமே எதிர்பார்க்காத பல நன்மைகளை அளிக்கும். இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதுடன், சருமத்தின் கருமையையும் நீக்குகிறது.
எப்படி பயன்படுத்துவது?
எலுமிச்சையை பல வழிகளில் பயன்படுத்தலாம். ஒரு எலுமிச்சையை வெட்டி சாறை தனியாக பிழிந்து விட்டு, தோலை சருமத்தின் மீது தேய்க்கவும். மேலும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எலுமிச்சை சாறில் போட்டும் சருமத்தில் தடவலாம். பின்னர் 10 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர்
வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை இணைப்பது அதிக வெப்பத்தால் ஏற்படும் சரும பிரச்சினைகளைக் குணப்படுத்தும் சிறந்த மருந்தாகும். இதிலுள்ள ஒவ்வொரு மூலப்பொருளும் அதற்கென தனிப்பட்ட நன்மைகளைக் கொண்டுள்ளது, இது சருமப் பிரச்சினைகளை குணப்படுத்தவும், ஈரப்பதமாக்கவும், ஒளிரச் செய்யவும் ஒன்றாகச் செயல்படுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
அரைத்த வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எடுத்து நன்கு கலந்து, சருமம் முழுவதும் தேய்க்கவும். சிறப்பான பலன்களுக்கு இந்த செயல்முறையை தினமும் இரண்டு முறை முயற்சிக்கவும். காய்ந்த பிறகு சருமத்தை நன்றாக கழுவவும்.
கடலை மாவு மற்றும் மஞ்சள்
கடலை மாவு மற்றும் மஞ்சள் இரண்டுமே பல நூற்றாண்டுகளாக இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியப்பொருட்களாகும். இதற்கு காரணம் அவற்றில் உள்ள மருத்துவ குணங்கள்தான். இவை இரண்டும் இணையும்போது, அது சருமப் பிரச்சினைகளைக் குணப்படுத்தும் மற்றும் பிரகாசமான, அதிக பொலிவான சருமத்தை வழங்கும் சக்திவாய்ந்த கலவையை உருவாக்குகிறது.
எப்படி பயன்படுத்துவது?
ஒரு சிறிய கிண்ணத்தில், 2 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலக்கவும். பின்னர் இந்த கலவையில் 2 ஸ்பூன் தயிரைச் சேர்த்து ஒரு மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். தயிர் சருமத்திற்கு கூடுதல் ஈரப்பதமூட்டும் நன்மைகளைக் கொண்டுள்ளது. வெயிலால் பாதிக்கப்படும் இடங்களில், குறிப்பாக முகம் மற்றும் கழுத்தில் பேஸ்ட்டைத் தடவவும். இந்த பேஸ்ட் முழுமையாக காய்ந்து போகும் வரை காத்திருக்கவும். உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் நன்றாக கழுவினால் பொலிவான சருமம் கிடைக்கும்.
ஓட்ஸ் மற்றும் மோர்
ஓட்ஸ் மற்றும் மோர் இரண்டுமே சருமத்திற்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய இரண்டு சக்திவாய்ந்த இயற்கை பொருட்கள் ஆகும், இவை இரண்டும் இணையும் போது அது சக்திவாய்ந்த கலவையை உருவாக்குகிறது.
எப்படி பயன்படுத்துவது?
ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் மற்றும் மோர் ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்துக்கொண்டு ஒரு கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும். வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு இந்த பேஸ்ட் சிறப்பான தீர்வுகளை வழங்கும். முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் வேறு ஏதேனும் வறண்ட அல்லது கரடுமுரடான பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்த பேஸ்ட்டை தடவி மசாஜ் செய்யவும். ஓட்ஸ் சருமத்தை உரிக்கவும், மோர் இறந்த செல்களை அகற்றவும் சில நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்யவும். இந்த பேஸ்ட்டை வெதுவெதுப்பான நீரில் கழுவவும், இது சருமத்தை நீரேற்றமாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும்.
பாசிப்பருப்பு, தக்காளி மற்றும் கற்றாழை
பாசிப்பருப்பு இறந்த சருமத்தை நீக்கும் குணங்களைக் கொண்டுள்ளது, தக்காளியில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் சருமத்தை ஒளிரச் செய்ய உதவும் இயற்கை அமிலங்கள் உள்ளன, மேலும் கற்றாழை மென்மையான மற்றும் ஈரப்பதமுள்ள சருமத்தை வழங்குகிறது.
எப்படி பயன்படுத்துவது?
ஒரு கைப்பிடி பாசிப்பருப்பை இரவே ஊற வைக்கவும். பருப்பு நன்கு ஊறியவுடன் தண்ணீரை வடிகட்டி, மிக்சியில் போட்டு மென்மையான பேஸ்ட்டாக அரைக்கவும். ஒரு கிண்ணத்தில், ஒரு தக்காளியை பிழிந்து சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும். மென்மையான சருமத்தைப் பெற பருப்பு பேஸ்ட் மற்றும் கற்றாழை ஜெல்லை தக்காளி சாறுடன் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சமமாகப் தடவவும். இதை அரை மணி நேரம் அப்படியே ஊறவிட்டு நன்கு காய்ந்ததும் கழுவினால் மென்மையான, ஈரப்பதமுள்ள மற்றும் பொலிவான சருமம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
