Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மழைக்காலத்தில் அழகா ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க...
Skin Care Tips In Tamil: மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், ஆங்காங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது. எப்படி கோடைக்காலத்தில் நிறைய சரும பிரச்சனைகளை சந்திப்போமோ, அதேப் போல் மழைக்காலத்திலும் நிறைய சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் வெள்ளைப்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள் உருவாக்கம், பூஞ்சை தொற்றுகள், சரும எரிச்சல், அரிப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மழைக்காலத்தில் உங்கள் சருமத்தில் எவ்வித பிரச்சனைகளும் வராமல், இருக்க வேண்டுமானால், சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். அதுவும் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கவும், சருமத்தில் தேங்கியுள்ள இறந்த செல்களை அகற்றவும், பருக்களை தடுக்கவும் ஒருசில ஃபேஸ் பேக்குகளை அவ்வப்போது போட வேண்டும். கீழே மழைக்காலத்தில் அழகாக இருக்க எந்த ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கானதை தேர்ந்தெடுத்து போடுங்கள்.

ஃபேஸ் பேக் #1
* முதலில் ஒரு பௌலில் ரோஸ் வாட்டரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஆரஞ்சு தோல் பவுடர், துவரம் பருப்பு பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #2
* முதலில் தக்காளி துண்டை எடுத்து, அதை சிறிது நேரம் ஃப்ரீசரில் உறைய வைத்து எடுக்க வேண்டும்.
* பின் அதைக் கொண்டு முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள அமிலத்தன்மை முகத்தில் திறந்துள்ள சரும துளைகளை சுருங்கச் செய்யும்.
* இப்படி தினமும் பன்படுத்தி வந்தால், சருமத் துளைகள் சுருங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.
ஃபேஸ் பேக் #3
* முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 4 டேபிள் ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
* பின் அதில் சில துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து சில நிமிடங்கள் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் பரு பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.
ஃபேஸ் பேக் #4
* முதலில் ஒரு பௌலில் 1 ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும்.
ஃபேஸ் பேக் #5
* முதலில் மிக்சர் ஜாரில் வாழைப்பழத்தை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது ஆப்பிள் துண்டுகள் மற்றும் பீச் துண்டுகளை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த பழ ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வர, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications