Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
சருமத்தை தங்கம் ஜொலிக்க வைக்க உதவும் உருளைகிழங்கு பேஸ் பேக்... எப்படி செய்யணும் தெரியுமா?
அழகை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும், முகத்தின் பொலிவை கூட்டிக்காட்டவும் பெரும்பாலும் பெண்கள் அழகு நிலையங்களில் பணத்தை செலவு செய்கிறார்கள். இதற்கு பெரும்பாலும் முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மையே.
பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் பெண்கள் அதற்கென தினம் தனி கவனம் செலுத்த முடியாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். இதை தவிர்க்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிமையான முறையில் பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தலாம். அதற்கு நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் உருளைக்கிழங்கே போதுமானது. உருளைக்கிழங்கு பேஸ் பேக்கின் பயன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ் பேக்ஸ்:
உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை
நன்கு அரைத்த உருளைக்கிழங்கு விழுது - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கு விழுது மற்றும் எலுமிச்சை சாறை நன்றாக கலந்து முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் உலர்ந்ததும் கழுவி விடவும்.
இந்த பேஸ் பேக் சருமத்தைப் பொலிவாக்குவதற்கும் கரும்புள்ளிகளைக் குறைப்பதற்கும் உதவுகிறது. எலுமிச்சை சாற்றில் கரும்புள்ளிகளை குறைக்க உதவும் இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் இருக்கின்றன. அதே சமயம் உருளைக்கிழங்கு சாற்றில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பிரகாசமாக்க உதவுகின்றன. மேலும், இது இறந்த சரும செல்களை வெளியேற்றவும், பளபளப்பான மற்றும் மிருதுவான சருமத்தை பெறவும் உதவுகின்றன.
உருளைக்கிழங்கு மற்றும் தேன் பேஸ் பேக்
உருளைக்கிழங்கு சாறு - 2 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கு சாறுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் உலர்ந்ததும் கழுவி விடவும்.
இந்த பேஸ் பேக் சரும ஈரப்பதத்தை தக்க வைக்கவும், ஊட்டமளிப்பதற்கும் சிறப்பான ஒன்று. தேன் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் இயற்கையான ஈரப்பதமூட்டியாக இருக்கிறது. அதே நேரத்தில் உருளைக்கிழங்கில் மாவுச்சத்து நிறைந்துள்ளதால், இது வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்தை மீட்டெடுக்கவும் உதவுகிறது. இந்த பேஸ் பேக் சருமத்தை புத்துயிர் பெறவும், மென்மையாகவும் மிருதுவாகவும் உணர வைக்கிறது.
உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரி ஃபேஸ் பேக்
வெள்ளரி காய் விழுது - 1 ஸ்பூன்
உருளைக்கிழங்கு விழுது - 1 ஸ்பூன்
செய்முறை:
இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் உலர்ந்ததும் கழுவி விடவும்.
இந்த பேஸ் பேக் கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. வெள்ளரிக்காய் வீக்கத்தைக் குறைக்க கூடிய குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் உருளைக்கிழங்கில் இருக்கும் என்சைம்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்களுக்குக் கீழே உள்ள பகுதியை பிரகாசமாக்க உதவுகின்றன. இந்த பேஸ் பேக் சோர்வுற்ற கண்களை புத்துணர்வு பெற செய்யவும், கண்களைச் சுற்றியுள்ள சருமத்தை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைக்க உதவுகிறது.
உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
உருளைக்கிழங்கு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
செய்முறை:
மேலே குறிப்பிட்ட இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் உலர்ந்ததும் கழுவி விடவும்.
இந்த பேஸ் பேக் முகப்பரு மற்றும் தழும்புகளை குறைக்க சிறந்த ஒன்று. மஞ்சள் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இவை முகப்பரு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. அதே போல் உருளைக்கிழங்கு சாறு சருமத்தை பிரகாசமாக்கவும், தழும்புகளின் தோற்றத்தை குறைக்கவும் உதவுகிறது. இந்த பேஸ் பேக் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், முகப்பரு தழும்புகளை குறைக்கவும் உதவுகிறது.



Click it and Unblock the Notifications

