Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
புத்தாண்டு தினத்தன்று அழகா பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை 2 நாள் தொடர்ந்து போடுங்க..
New Year 2025 Skin Care Tips In Tamil: இன்னும் சில நாட்களில் 2025 புத்தாண்டில் நுழையவுள்ளோம். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடும் வகையில் பலரும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக நேரத்தை செலவிடுவார்கள். சிலர் குட்டி பார்ட்டியை கூட ஏற்பாடு செய்வார்கள். இப்படியான சூழ்நிலையில் அழகாக இருக்க வேண்டுமென்று நிறைய பேர் அழகு நிலையங்களுக்கு செல்வார்கள்.
ஆனால் சிலருக்கு அழகு நிலையங்களுக்கு செல்ல கூட நேரம் இருக்காது. இப்படிப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தாலே, புத்தாண்டு தினத்தன்று பளிச்சென்று ஜொலிக்கலாம். இப்போது புத்தாண்டு தினத்தன்று அழகாக ஜொலிக்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. அதே போல் தேனில் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. இவ்விரண்டையும் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் முழுமையாக அகற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று இருக்கும். இந்த ஃபேஸ் பேக் போடுவதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளன. இந்த மஞ்சளையும் தயிரையும் ஒன்றாக கலந்து ஃபேஸ் பேக் போட்டால், முகத்தில் உள்ள பருக்களால் ஏற்பட்ட கறைகள் நீங்கும் மற்றும் முகம் பளிச்சென்று பிரகாசிக்கும். இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஆகிய இரண்டுமே சருமத்தின் ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த பல ஆண்டுகளாக சரும பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கற்றாழையின் ஜெல்லை 2 டீஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை போடுவதன் மூலம், முகம் பிரகாசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications