Latest Updates
-
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம்
60 வயதிலும் இளமையாக காட்சியளிக்கும் நீத்தா அம்பானியின் அழகு ரகசியம் தெரியுமா?
Nita Ambani Beauty Secrets: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்சு இண்டஸ்ட்ரீஸ் என்ற குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மனைவி தான் நீத்தா அம்பானி. இவர் ரிலையன்சு பவுண்டேசன் என்னும் அறக்கட்டளையின் தலைவர் ஆவார் மற்றும் வெற்றிகரமான பெண் தொழிலதிபராகவும் வலம் வருகிறார்.
தற்போது முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானியின் திருமண விழா மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜூலை 12 ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முன் சங்கீத் மற்றும் ஹால்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று இணையத்தில் போட்டோக்களும் வெளிவந்தவாறு உள்ளன. மேலும் பல பிரபலங்களும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த திருமண விழா போட்டோக்களில் மாப்பிள்ளையின் அம்மாவான நீத்தா அம்பானியை பார்த்தால், அவருக்கு 60 வயதாகிவிட்டது என்று கூறினால் நம்ப முடியாது. ஏனெனில் அந்த அளவில் நீத்தா அம்பானியின் சருமம் சுருக்கமின்றி இன்னும் இளமையாக உள்ளது. இதைப் பார்க்கும் பலருக்கும் நீத்தா அம்பானி இப்படி இளமையாக காட்சியளிப்பதன் ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். உங்களுக்கும் அப்படி இருந்தால், அவரது அழகு ரகசியத்தை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சரும பராமரிப்பு விதிகள்
நீத்தா அம்பானி தினமும் தனது சருமத்திற்கு மூன்று விஷயங்களை தவறாமல் மேற்கொள்வாராம். அது கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங். அதுவும் இதை தினமும் 2 முறை தவறாமல் மேற்கொள்வாராம். மேலும் இவர் தனது சரும வகைக்கு ஏற்ற நல்ல தரமான சரும பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவாராம். கூடுதலாக, இவர் சீரான இடைவெளியில் சருமத்திற்கு ஸ்க்ரப் மற்றும் வாரம் ஒருமுறை ஃபேஷியல் என்று தவறாமல் செய்வாராம்.
நீரேற்றம்
நீத்தா அம்பானி நீரேற்றத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர். இப்படி நீரேற்றத்துடன் இருப்பதால் உடல் மட்டுமின்றி, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்காக இவர் தினமும் போதுமான அளவு நீரைக் குடிப்பாராம். அதோடு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்வாராம்.
ஆரோக்கியமான டயட்
ஒருவர் நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்க வேண்டுமானால், அவர் நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதன் தாக்கம் அப்படியே நமது சருமத்திலும் தெரியும். நீத்தா அம்பானி பொலிவான சருமத்தைப் பெற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் தேர்ந்தெடுத்து உண்பாராம்.
தியானம்
மனதை ஒருவர் அழுத்தமின்றி வைத்துக் கொண்டால், அது ஒருவரது முதுமையைத் தள்ளிப் போடும். நீத்தா அம்பானி தனது மன அழுத்தத்தைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் தினமும் தியானம் மற்றும் மனதை அமைதிப்படுத்தும் பிற வழிகளை தவறாமல் மேற்கொள்வாராம். அதோடு போதுமான ஓய்வை தவறாமல் தினமும் உடலுக்கு கொடுப்பாராம்.
சன் ஸ்க்ரீன்
நீத்தா அம்பானி சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க தவறாமல் சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்துவாராம். ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் தவறாமல் பயன்படுத்துவாராம். இது தவிர நீத்தா அம்பானி குறிப்பிட்ட சரும நிலைகளை பூர்த்தி செய்வதற்கும், சரும நிறத்தை தக்க வைப்பதற்கும் ஃபேஷியல், மசாஜ் மற்றும் லேசர் சிகிச்சைகள் போன்றவற்றிலும் ஈடுபடுவாராம்.



Click it and Unblock the Notifications
