For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதல் கைக்கூடி வர, சில ஸ்டைலிஷ் ஐடியா - காதலர் தின ஸ்பெஷல்!

By Viswa
|

எத்தனை வருடங்களாக மனதினுள் விதைத்து வைத்திருந்த காதல், துளிர்விட வேண்டும் என்ற ஆசையுடன் உங்களது கனவு தேவதையிடம் நீங்கள் காதலை சொல்லப் போகிறீர்களா? அப்போ இந்த ஸ்டைலிஷ் ஐடியாவின் படி சொல்லுங்கள், உங்கள் காதல் கைக்கூடி வர நிறையவே வாய்ப்புகள் உள்ளது. பெரும்பாலான பெண்கள் எதிர்பார்ப்பது தனது காதலன் மற்றவர்களை போல இல்லாமல் தனித்துவமாய் இருக்க வேண்டும் என்பதுதான் இதை நீங்கள் முதலில் நிறைவேற்றிவிட்டாலே காதல் கிட்டத்தட்டக் கனிந்தது போல் தான்.

"அட! நம்ம எங்க போய் தனித்துவத்த கண்டுப்புடிக்கிறது?" அப்படி என்று யோசிப்பவரா நீங்கள். கவலையை விடுங்கள். உலக சினிமாக்களில் இருந்து நமது உள்ளூர் சினிமாக்காரர்கள் காப்பி அடிக்கும் போது, நாம் ஏன் அவர்களை கண்டு காப்பி அடிக்க கூடாது. நம் நாட்டில் நடிகர்களின் ஸ்டைலுக்கா பஞ்சம், ஒன்றிரண்டை கலந்து விடுங்கள் அப்பறம் என்ன, மிஞ்சி இருக்கும் கால்வாசி காதலும் கனிந்து உங்கள் கைகளில் விழுந்துவிடும். ஆனால் ஒரு விஷயம் முக்கியம், "நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும். நம்ம பண்ற தப்பு நாலு பேருக்கு தெரிஞ்சிடக்கூடாது, புரியுதா கைப்புள்ள!!!" இனி நம்ம ஊரு ஸ்டைல்களின் ஒரு கண்ணோட்டம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூப்பர் ஸ்டார் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினி!

ஸ்டைலான ப்ரோபோசல் என்று சொல்லிவிட்டு சூப்பர் ஸ்டார் பற்றி பேசாவிட்டால் அது உலக மகா குற்றமாகிவிடும். அதுவும் காதலில் வென்று காதல் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்களின் கரம் பிடித்தவர். ரஜினியின் சிகை அலங்காரம் ஒன்று போதும் பெண்களை கவர்ந்து இழுத்திட. அதுவும் ரஜினி 80'களில் செய்த ஸ்டைலின் ஏதேனும் ஒன்றை நீங்கள் சரியாக செய்தாலே உங்கள் வருங்கால காதலியை சுலபமாக வளைத்துப் பிடித்து விடலாம்.

காதல் நாயகன் கமல் ஹாசன்!

காதல் நாயகன் கமல் ஹாசன்!

ரஜினிக்கு அடுத்து வேறு யார் இருகிறார்கள், நம்ம கமல் ஹாசன் தான். இவர் நடித்த, அல்ல வாழ்ந்த காதல் திரைப்படங்களை பார்த்துவிட்டு பிப்ரவரி 14 அன்று நீங்கள் கிளம்பினாலே கண்டிப்பாக காதல் தேர்வில் தேறிவிடலாம். இவரும் காதல் திருமணம் (கள்) [புரிந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித்

தல அஜித்

9௦'களில் காதல் மன்னனாக, காதல் கோட்டையேக் கட்டியவர் நம்ம தல அஜித்குமார். நீங்கள் "தல"யின் ரசிகர் என்று சொன்னாலே உங்களுக்கு ப்ரோபோசல்கள் ஆடைமழையெனக் கொட்டும். இதில் அவரது பாணியில் காதலை வெளிபடுத்தினால், அடுத்த முகர்த்தமே சாந்தி முகர்த்தம் தான். "தல"யும் காதல் திருமணம் செய்தவர் தான் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை.

தளபதி விஜய்

தளபதி விஜய்

காதலுக்கு மரியாதை செலுத்திய நல்ல உள்ளம். காதல் தோல்வியின் மூலம் (பூவே உனக்காக) திரையுலகில் வெற்றிக் கண்டவர் விஜய். பெண்களுக்கு இவர் மீத அலாதி ப்ரியம் உண்டு. நீங்கள் உண்மையாக காதலித்தால் இந்த "ஷாஜகான்" உங்களை உங்களது காதலியுடன் இவரது உயிரை கொடுத்து சேர்த்து வைப்பார்.

வெரைட்டி விக்ரம்

வெரைட்டி விக்ரம்

"ஐ" மூலம் காதலுக்கு புது உருவம் கொடுத்தவர் விக்ரம். உருவம் மட்டுமல்ல உடல், உயிர் என மொத்தத்தையும் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவரது வித விதமான லுக்கில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து சென்றாலும், அதுவே போதுமானது உங்கள் காதலை கனிய வைக்க.

"வேற லெவல்" தனுஷ்

தனது திரையுலக பயணத்தை பல்வேறு விதமான காதல் திரைப்படங்களின் மூலம் தொடங்கியவர் தனுஷ். இவரது காதல் மனைவியின் இயக்கத்தில் இவர் நடித்த மற்றொரு காதல் திரைப்படமான "3" மூலம் "வேற லெவல்" நடிகர் ஆகிவிட்டார். திரிஷா இல்லாட்டி திவ்யா என்ற மகத்துவத்தை இளைஞர்கள் நெஞ்சில் விதைத்தவர்.

ஸ்டைல் சிம்பு

ஸ்டைல் சிம்பு

ரீல் காதலில் மட்டும் அல்ல ரியல் காதலிலும் பெயர் போனவர் நமது ஸ்டைலிஷ் சிம்பு. கொஞ்சம் வாலு தனம் அதிகமாக இருந்தாலும், இவர் காதலில் வல்லவன்.நயன்தார, ஹன்ஷிக்கா என உயர்ரக அழகிகள் தான் இவரது சாய்ஸ்! நீங்களும் கொஞ்சம் கலரான பெண்ணை தேடுபவரை இருந்தால் இவரது ஸ்டைல்களை பின் பற்றுவதே உகந்ததாய் இருக்கும்.

மாஸ் சூர்யா

மாஸ் சூர்யா

தொடக்கத்தில் சமத்து பிள்ளை போல, இந்த பூனையும் பால் குடிக்குமா என இருந்த சூர்யா ஜோதிகாவையே தன் காதல் வலையில் சிக்கவைத்தவர்.சில்லுனு ஒரு காதல் "முன்பே வா" பாடல் உங்களுக்கு நன்றாக பாடத் தெரிந்தாலே போதும். (பின் குறிப்பு: குரல்வளம் சரி இல்லாதவர்கள் இதை முற்சிக்க வேண்டாம்.)

குறும்பு சித்தார்த்

குறும்பு சித்தார்த்

நவரச நாயகன் கார்த்திக், பிரசாந்த், அப்பாஸ் போன்றவர்களை அடுத்து இன்றைய தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாகத் திகழும் "பாய்ஸ்" நாயகன். காதலில் தற்போதைய நிலையில் வெற்றி கொடிகளை எற்றிக் கொண்டிருப்பவர் இவர்தான். தீயாக வேலை செய்து காதலை கனிய வைப்பவர்.நீங்கள் இவரது பாணியை கையாண்டால் சில அடிகள் சறுக்கினாலும் காதலில் வென்றுவிடலாம்.

நம்ம வீட்டு பையன் சிவா

நம்ம வீட்டு பையன் சிவா

அட, நம்ம வீட்டு பையன் சிவா "லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்" (last but not the least) என்று ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. அது போல தான் இவரும். நீங்கள் என்ன ஸ்டைல்கள் முயற்சித்தும் காதலில் வெற்றி பெற முடியவில்லை என்றால். இவரை போல குறும்பு ரகளை செய்யும் பையனாக நீங்கள் இருந்தால் எந்த பெண்ணுக்கும் பிடித்துவிடும். ஹன்சிக்காவிற்கே பிடித்து விட்டதாம் அப்பறம் என்ன!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Valentines Day Special Proposal Ideas

here, from this article you can know about valentines day special proposal ideas