For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாடியை சீக்கிரம் வளர வைக்க சில எளிய வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை தரும். பண்டைய காலத்தில் தாடி வீரத்தின் அடையாளமாக இருந்தது. ஒரு அரக்கத்தனமான பெரிய தாடியை உடையவர்கள் மிகுந்த பலசாலியாக கருதப்படுவார்கள். தாடி ஒரு ஆணுக்கு அழகூட்டும் ஆண்மையை வெளிப்படுத்தும்.

ஆண் மனதில் உள்ள ஆசைகளில் ஒன்று தாடி வளர்ப்பதாகும். இதை சிறிதளவு சாதித்தாலும் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள். பெரிது பெரிதாக மற்றும் நல்ல அடர்த்தியுடன் அனைவராலும் முகத்தில் முடி வளர்க்க முடியாது. ஆனால், வளர்க்க முடியாதவர்கள் சில முயற்சிகளின் மூலம் அதன் வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த முடியும். நமது வயது, மரபணுவின் அமைப்பு ஆகியவையே தாடி வளர்ச்சியின் அளவையும் அடர்த்தியையும் தீர்மானிக்கின்றது. ஆனால் உங்கள் வயதிற்கேற்ற வளர்ச்சியை விட அதிக அளவு தாடியை வளர செய்வதற்கு இயற்கையான பல வழிகள் உள்ளன.

இதுப்போன்று வேறு சில: தாடிகளில் பொடுகு வருகிறதா? இதை படிச்சு பாருங்க...

உங்கள் தாடி சீக்கிரமாக வளர்வதற்கு அதை ஊட்டமளித்து பராமரிக்க வேண்டியது அவசியமாகும். வாழ்வில் உள்ள மற்ற காரியங்களை போல இதற்கும் நல்ல ஊட்டமளித்தல் மற்றும் தேவையான அளவு கவனிப்பை அதற்கு கொடுத்தல் ஆகிய செயல்கள் சீக்கிரம் வளர உதவும். முகத்தில் உள்ள காய்ந்து போன மற்றும் இறந்து போன திசுக்களை வாரம் ஒரு முறை எக்ஸ்போலியேட் செய்வதன் மூலம் தாடி விரைவாக வளர உதவுகின்றது.

அதிக அளவு அக்கறையுடன் முகத்தில் உள்ள தாடியையும், முகத்தையும் பாதுகாக்க வேண்டும். அதை நன்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இதற்கென்று சில எண்ணெய்கள் பயன்படுத்தி தாடிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்க மறக்கக் கூடாது.

உணவு

புரதச் சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களும் மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்வும் தாடியை சீக்கிரம் வளர்க்க உதவுகின்றன. முடி வளர்வதற்கு தேவையான ஊட்டத்தை புரதச்சத்தே தருகின்றது. அதை செயல்படுத்த நல்ல தூக்கம் தேவைபடுகின்றது. தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அடர்த்தியான நீளமான முடியை வளர செய்யும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் இதில் மிகவும் அவசியமானதாகும். இல்லையென்றால் அது இருக்கும் முடியையும் உதிர செய்துவிடும்.

வளர விடுங்கள்

முடி வளரும் பருவத்தில் கொஞ்சம் ஏற்றமும் இறக்கமுமாக அமைந்திருக்கும். மெதுவாக வளரும் முடியும் தாடி வளர வளர சீக்கிரம் முளைத்து வளரும். இவ்வாறு வளரும் போது அவை சமமாகவும், ஏதேனும் சமமில்லாத திட்டுகள் இருந்தால் அவையும் மறைந்துவிடும். ஆகையால் முடி வளர்வதற்காக நேரம் கொடுங்கள்.

இறந்த தோலை நீக்குதல்

உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப முகத்தில் உள்ள தேவையற்ற இறந்த திசுக்களை நீக்கி விடுங்கள். நல்ல ஸ்கிரப்-ஐ பயன்படுத்தி இதை செய்யுங்கள். இறந்த தோல் தசைகளை எடுத்து விடுதல் புதிய தசைகளையும் நல்ல முடியையும் வளரச் செய்யும். ஆண்களின் சருமத்திற்கென்று தயார் செய்யப்பட்ட எக்ஸ்போலியேட் மாஸ்க்-ஐயும் பயன்படுத்தி பாருங்கள்.

கண்டிஷனர்

நல்ல முடி இருந்தால் மட்டும் போதாது அதை நல்ல முறையில் கண்டிஷன் செய்து வைக்க வேண்டும். இது தாடி முடியை வெட்டச் செய்யாமல் பாதுகாக்கும். காஸ்டர் எண்ணெய் இதற்கு மிக சிறந்த கண்டிஷனிங் பொருளாக அமைகின்றது. கண்டிஷனர் உங்கள் தாடியை சரியாக வளர வைக்கும். ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய் ஆகியவை முகத்தில் இருக்கும் முடிகளுக்கு ஊட்டமளிப்பதில் சிறந்தவையாகும்.

வைட்டமின்கள்

வைட்டமின் 'பி' யை உங்கள் உணவிலும் அழகு சாதனப் பொருட்களிலும் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை முடியை சீக்கிரம் வளர வைக்க உதவும். பையோடின் என்ற இணை சேர்க்கையை எடுத்துக் கொள்வதும் முடி மற்றும் நகத்தை விரைவாக வளர்க்க உதவும். பையோடின் - கல்லீரல், காலிபிளவர், பீன்ஸ், மீன், கேரட், வாழைப்பழம், சோயா, முட்டை மற்றும் தானியங்களில் உள்ளது.

English summary

Faster Beard Growth Tips

Growing a beard can be one of life’s secret joys; even a token accomplishment. Not all men find it easy to grow plums of facial hair, but there are a few things you can do to help in pushing the growth rate by a few notches.
Story first published: Sunday, January 12, 2014, 13:01 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more