Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
உங்க முகம் வட்டமா அல்லது சதுரமா? உங்கள் முக வடிவத்திற்கு ஏற்ற மேக்கப் டிப்ஸ்கள் இதோ!
Makeup Tips In Tamil: நாம் எல்லோரும் வெவ்வேறு முக அமைப்பை கொண்டவர்கள். எனவே அதற்கேற்றாற் போல் மேக்கப் போடுவது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் முகத்திற்கு ஏற்ற வகையில் நாம் மேக்கப் போடும் போது அழகை மேம்படுத்த முடியும்.
உங்கள் முக அழகு கூர்மையாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். எனவே இனி மேக்கப் போடுவதற்கு முன்பு முக வடிவமைப்பை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் முகத்திற்கு ஏற்ற மேக்கப்பை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

உதாரணமாக உங்களுக்கு வட்ட வடிவ முகம் என்றால் மேக்கப் பவுடர் மற்றும் பவுண்டேஷன் இவற்றை அதற்கேற்றாற் போல் பயன்படுத்த வேண்டும். சரி வாங்க உங்கள் முகத்திற்கு ஏற்ற மேக்கப்பை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
வட்ட வடிவ முகம்
உங்களுக்கு வட்ட வடிவ முகம் என்றால் உங்களது மேக்கப்பை இப்படி செய்து பாருங்கள். வட்ட வடிவ முகத்திற்கு மேக்கப் போடும் போது கன்னத்து எலும்புகள், தாடை இவற்றை ஹைலைட் செய்து காட்ட வேண்டும். நெற்றி மற்றும் கன்னத்தை ஹைலைட் செய்ய வேண்டும். கன்னத்தை முன்னிலைப்படுத்தி காட்ட வேண்டும். எனவே வட்ட வடிவ முகத்திற்கு இந்த பகுதியை சரியாக காட்ட வேண்டும். எனவே வட்ட வடிவ முகத்தை உடையவர்கள் கன்னத்தை முன்னிலைப்படுத்தி மேக்கப் செய்ய வேண்டும்.
மேக்கப் ஷேட்ஸ் : வட்ட வடிவ முகத்தை உடையவர்கள் டார்க் மற்றும் லைட் கலர் மேக்கப் ஷேட்ஸ்களை பயன்படுத்துங்கள்.
பவுண்டேஷன் : நெற்றியில் உள்ள தோல், ஸ்க்ரீம் எலும்புகள் மற்றும் கன்னம் பகுதியில் இருந்து டோன் லைட்டை பயன்படுத்த வேண்டும். உங்கள் தாடையில் இருந்து அடிப்பகுதி வரை டார்க் ஷேட்ஸ் பவுண்டேஷனை பயன்படுத்த வேண்டும். இது உங்கள் முகத்தை மெல்லியதாக மாற்றும்.
ஐ மேக்கப் : வட்ட வடிவ முகத்திற்கு டார்க் ஐ ஷேடோ சரியாக இருக்கும். கண்களுக்கு ஐ ஷேடோவுடன் மஸ்காராவை கொண்டு ஃபினிஷிங் டச் கொடுக்க வேண்டும். அப்புறம் ஐ லைனரை பயன்படுத்த வேண்டும்.
லிப் மேக்கப் : வட்ட வடிவ முகத்திற்கு சிவப்பு கலர் லிப்ஸ்டிக் சரியான ஒன்றாக இருக்கும். மைல்டு கலர் லிப்ஸ்டிக் வேண்டாம்.
நீள் வட்ட வடிவ முகம்
நீள் வட்ட வடிவ முகம் குறுகிய தாடைகளால் ஆனது. எனவே ஒட்டுமொத்த முகமும் பார்ப்பதற்கு நீளமாக இருக்கும். எனவே மேக்கப்பை கொண்டு தாடைகளை சுருக்க வேண்டும். நெற்றி மற்றும் கன்னத்தில் ஹைலைட்டரை பயன்படுத்த வேண்டும். உதடுகளில் டார்க் மேக்கப்பை பயன்படுத்தினால் கன்னங்களில் மிதமான மேக்கப் போதுமானது. இதுவே கண்களுக்கு ஸ்மோக்கி ஐயை பயன்படுத்தினால் உதட்டிற்கு நடுநிலை மேக்கப் பொருத்தமாக இருக்கும்.
மேக்கப் ஷேட்ஸ் : நீள் வட்ட வடிவ முகத்திற்கு கோரல், பிங்க் கலர் மற்றும் பழுப்பு நிற ஷேட்ஸ் பொருத்தமாக இருக்கும்.
பவுண்டேஷன் : உங்கள் சருமத்திற்கு ஏற்ற பவுண்டேஷனை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். பவுண்டேஷனுக்கு பதிலாக பிபி மற்றும் ப்ளேமிஷ் கிரீம் பயன்படுத்துவதும் சிறப்பான ஒன்றாக இருக்கும்.
ஐ மேக்கப் : ஐ மேக்கப்பில் நீங்கள் பல வடிவங்களை முயற்சி செய்யலாம். டார்க் ஐ ஷேடோவுடன் கண் இமைகளின் விளிம்பில் அப்ளை செய்யலாம். இரண்டு அடுக்கு மஸ்காராவை கூட நீங்கள் பயன்படுத்தி வரலாம். இது உங்களுக்கு ஒரு ஸ்மோக்கி விளைவை கொடுக்கும்.
லிப் மேக்கப் : எல்லா வகையான நிற லிப்ஸ்டிக்கும் நீள் வட்ட முகத்திற்கு ஏற்றது.
நீண்ட முகம்
நீண்ட முகம் இருக்கும் பெண்களுக்கு நெற்றி அகலமானதாகவும், தாடை பெரியதாகவும் இருக்கும். கன்னங்களின் அடிப்பகுதியில் இருந்து, நெற்றிக்கு மேலே மற்றும் தாடையின் இருமுனைகள் வரை காண்டூரிங் செய்ய வேண்டும்.
மேக்கப் ஷேட்ஸ் : நீண்ட முகத்திற்கு காப்பர், வொயின், ஆழமான ப்ளம்ஸ் போன்ற ஷேட்ஸ் பொருத்தமானதாக இருக்கும்.
பவுண்டேஷன் : கன்னங்களில் பீச், பழுப்பு அல்லது பிங்க் பவுண்டேஷன் பொருத்தமானதாக இருக்கும்.
ஐ மேக்கப் : கனமான மேக்கப் கண்களுக்கு பொருத்தமானதாக அமையும். எனவே டார்க் ஐ மேக்கப்பை தேர்ந்தெடுப்பது நல்லது.
லிப் மேக்கப் : உங்கள் ஆடைக்கு ஏற்ற லிப்ஸ்டிக் நிறத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
