Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சாப்பிட கூடிய நெயில் பாலிஷ் பற்றி தெரியுமா..? குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாமாம் ..!
இயற்கை முறையிலான அழகியல் குறிப்புகளே மக்களுக்கும் பிடித்தமானதாக என்றும் கருதப்படுகிறது. அத்தகைய ஒரு அழகியல் கண்டுபிடுப்புதான் சாப்பிடக்கூடிய "நெயில் பாலிஷ்"...
அழகு என்பது மிகவும் முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் கருதப்படுகிறது. பெண்கள் எந்த அளவிற்கு தங்களை அழகாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்களோ அதே அளவிற்கு ஆண்களும் தங்களை அழகாக காட்டி கொள்ளத்தான் எண்ணுகிறார்கள். அழகை மேம்படுத்தி கொள்வது என்பது இன்று நேற்று வந்தது இல்லை. பல ஆயிரம் வருடங்களாக அழகை மேம்படுத்த பலரும் பல விதமான அழகியல் குறிப்புகளை பின்பற்றித்தான் வருகிறார்கள்.

அந்த காலத்து அழகியல் முறை முதல் இந்த காலத்து அழகியல் முறை வரை எண்ணற்ற மாற்றங்கள் அடைந்து கொண்டுதான் இருக்கிறது. அழகியல் கலைகளில் வேதி பொருட்கள் அற்ற முறைகளே எல்லா கால நிலைகளிலும் முன்னோடியாக இருந்து வருகிறது. இயற்கை முறையிலான அழகியல் குறிப்புகளே மக்களுக்கும் பிடித்தமானதாக என்றும் கருதப்படுகிறது. அத்தகைய ஒரு அழகியல் கண்டுபிடுப்புதான் சாப்பிடக்கூடிய "நெயில் பாலிஷ்"... என்னது இதை கூடவா சாப்பிட முடியும்..? அப்படினு யோசிக்கிறீங்களா..? இது முற்றிலும் உண்மையே... இந்த பதிவில் அவற்றின் முழு தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.

அழகியல் பொருட்கள்...
ஒருவரை அழகு செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த அழகியல் பொருட்கள்தான். எத்தகைய அழகானவராக ஒருவர் விளங்க வேண்டுமோ அதை அவ்வாறே செய்கிறது இந்த அழகியல் பொருட்கள். ஒருவரின் நகங்களை அழகாக மாற்ற பெரிதும் பயன்படுகிறது இந்த வகையான நெயில் பாலிஷுக்கள். இது மிக முக்கியமான அழகியல் பொருளாக அழகு நிபுணர்களால் கருதப்படுகிறது.

வண்ணங்கள் ஆயிரம்..!
ஒருவரின் நகங்களை அழகு செய்வதில் இந்த நெயில் பாலிஷுக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக இவை பலவகையான வண்ணங்களில் இருக்கிறது. பெண்களில் விரல் நகங்களை அழகாக காட்டுவதில் இது முதன்மையாக உள்ளது. பலவித வண்ணங்களில் பலவித டிசைன்களை நம்மால் எளிதாக செய்து கொள்ள முடியும். பலருக்கும் இதை நகங்களில் வைப்பதால் நகங்களை கடிக்கும்போது இதை சாப்பிடுவதே ஒரு பழக்கமாக மாறி வருகிறது. ஆனால் இந்த வேதி நெயில் பாலிஷுக்கள் பல பாதிப்புகளை தர கூடியது.

சாப்பிட கூடிய நைல் பாலிஷ்..!
நைல் பாலிஷை இப்போதுதான் சாப்பிட கூடாது என்று குறிப்பிட்டர்களே..! அதற்குள் சாப்பிடக்கூடிய நைல் பாலிஷ் என்று கூறுகிறீர்களே...? என்ற கேள்வி உள்ளதா...!? உண்மைதாங்க, இப்போது அழகியல் விஞ்ஞானிகள் சாப்பிட கூடிய நைல் பாலிஷை கண்டறிந்துள்ளனர். இது குறிப்பாக குழந்தைகளுக்காகவே பிரேத்தியேகமாக உருவாக்கப்பட்டது என்றே கூறுகின்றனர். இதை கையிலும் வைத்து கொள்ளலாம். அதே நேரத்தில் சாப்பிட்டும் கொள்ளலாம், என இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

இதில் உள்ள மூல பொருட்கள்...
இந்த நைல் பாலிஷில் பல வகையான மக்க கூடிய பொருட்களே சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, இவை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதாம். அத்துடன் இது நச்சு தன்மை அற்றதும் கூட. இது சில வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களினால் செய்யப்பட்டது. குறிப்பாக கேரட், ஆரஞ்ச், பீட் ரூட் , பார்லி இலைகள் போன்றவையில் இருந்து பெறப்படுகிறது.

செய்வது எப்படி..? #1
முதலில் சில வகையான இயற்கை கலரிங் பவ்டர்களை வாங்கி கொள்ள வேண்டும். அடுத்து ஸ்டார்ச் என்பதையும் வாங்கி கொள்ள வேண்டும். தற்போது, 1 டீஸ்பூன் கலரிங் பவ்டர், 1 டீஸ்பூன் ஸ்டார்ச், சிறிது நீர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவை நீரை 10 நிமிடம் காய வைக்க வேண்டும்.

செய்முறை #2
அடுத்து காய்ந்த இந்த கலரிங் நீரை நைல் பாலிஷ் போடும் பிரஷை கொண்டு உங்கள் நகங்களில் வர்ணம் பூசி கொள்ளுங்கள். ட்ரையரை(dryer) பயன்படுத்தி நகங்களை காய வையுங்கள். இது உங்கள் கைகளை மிகவும் அழகானதாக காட்டும். வேண்டுமென்றால் இரண்டாவது கோட்டிங்கையும் நீங்கள் கொடுத்து கொள்ளலாம்.

பயன்கள்...
இது போன்ற நைல் பாலிஷுக்கள் உடலுக்கும் கைகளுக்கும் மிகவும் நன்மை தரும். இதனால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. குழந்தைகளுக்கு நைல் பாலிஷ் வைக்க பயப்படும் பெற்றோர்கள் இதை தாராளமாக பயன்படுத்தலாம். அத்துடன் இதில் எந்தவித வேதி பொருட்களும் சேர்க்கப்படாததால் எந்தவித ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களுக்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications











