For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பியூட்டி பார்லருக்கு சென்ற இந்த 6 பெண்களுக்கு என்ன கொடுமை நடந்தது தெரியுமா?...

|

இன்றைய காலகட்டத்தில் முகத்திற்கு பேஷியல் என்பது நம் தினசரி அழகு பராமரிப்புக்கு மிக முக்கியமானதும் தேவையானதுமாக மாறிவிட்டது. நம்மில் பெரும்பாலானோர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பார்லருக்கு போவோம். சிலர் குறிப்பிட்ட பார்லருக்குப் போவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருப்போம். உங்களுக்கும் பியூட்டிசனுக்கும் சரியான புரிதல் இல்லாவிட்டால் கண்டிப்பாக அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அதைப்பற்றி ஒரு பிரபல பியூட்டிஷன் என்ன கூறுகிறார் என்பதை இப்பொழுது பார்க்க போகிறோம்.

30 வருட அனுபவம் வாய்ந்த பியூட்டிஷனான ரெனீ ரவுலூ என்ன கூறுகிறார் என்றால் முன்பை விட இப்பொழுது தன்னுடைய அனுபவத்தில் ஸ்கின் அலர்ஜி அதிகமாக இருபு்பர்களைப் பார்க்க முடிகிறது என்று கூறுகிறார்.

ரவுலூவின் கோட்பாடு என்னவென்றால் நாம் வீட்டில் செய்யும் ஸ்கின் கேர் என்பது பாதுகாப்பற்றது. ஏனெனில் கடைகளில் விற்கப்படும் பொருட்களில் நிறைய கடுமையான கெமிக்கல்கள் கலந்ததுள்ளன. இதனால் முகத்தில் உள்ள ஈரப்பதம் சேதமடைந்த மோசான நிலையில் தான் வாடிக்கையாளர்கள் தங்களை சந்திக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

எடுத்துக்காட்டாக நீங்கள் வீட்டிலேயே இரவில் சோனிக் ப்ரஷ் கொண்டு முகத்தை சுத்தம் செய்து விட்டு காலையில் எழுந்ததும் விட்டமின் சி சீரம் அப்ளை செய்கிறீர்கள். அப்படியே அழகு நிலையம் சென்று மதிய வேளையில் பேஷியல் செய்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக அது உங்கள் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.

ஒரு அனுபவம் வாய்ந்த அறிவார்ந்த பியூட்டிசன் என்றால் கண்டிப்பாக வாடிக்கையாளர் வீட்டில் எதாவது பராமரிப்பை முறையை மேற்கொண்டாரா என்பதை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பியூட்டிஷனருக்கும் வாடிக்கையாளருக்கும் உள்ள உறவு வெளிப்படையாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் வாடிக்கையாளர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அப்படி அவர் சந்தித்த ஆறு பயங்கர விளைவுகளை பற்றி ரவுலு நம்மிடம் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாட்ரிசியா

பாட்ரிசியா

" ஒரு நாள் நான் ஸ்பா செய்வதற்காக எப்பொழுதும் செல்லும் அழகு நிலையத்திற்கு சென்றேன். ஆனால் அன்றைய தினம் அது மூடப்பட்டு இருந்தது. எனவே எனது தோழியின் உதவியோடு நான் இன்னொரு இடத்திற்கு சென்றேன். அவர் எனது முகத்திற்கு பேஷியலை ஆரம்பித்து கண்களின் மேலே மேலே என்று மறுபடியும் அப்ளே செய்து கொண்டு இருந்தார். நான் காண்டாக்ட் லென்ஸ் அணிவது வழக்கம். நான் கண்களை மூடிக்கொண்டு இருந்தேன். பிறகு கொஞ்சம் நேரம் கழித்து வெதுவெதுப்பான க்ரீன் டீ பேக்கை எடுத்து என் கண்களில் வைத்து விட்டார். என்ன நடந்தது சூடான அழுத்தத்தால் என் காண்டாக்ட் லென்ஸ் பாதிக்கப்பட்டு கண்கள் சிவப்பாகிவிட்டது. மேலும் ஒரு வாரத்திற்கு பிறகு முகமும் நிறமாற்றம் அடைய ஆரம்பித்து விட்டது என்று தன் பாதிப்பை கூறுகிறார் - பாட்ரிசியா

மிஸ்கேல்

மிஸ்கேல்

"ஒரு வருடத்திற்கு முன் நான் ஒரு பியூட்டிசனை சந்தித்தேன். என் வாய் மற்றும் தாடையைச் சுற்றியுள்ள சிஸ்டிக் முகப்பருக்களை நீக்க ஒரு ஊசியை பயன்படுத்தினார். என்னுடைய கொப்புளங்கள் முழுவதும் நீங்கிய பிறகும் அதை அழுத்திப் பிடித்து கொண்டே இருந்தார். இது நடந்து ஒரு வருடம் ஆகியும்கூட கடினமான கொப்புளங்களோடு அழற்சியாகி உள்ளது என் முகம். அடுத்து இன்னொரு பியூட்டிசனை சந்தித்து தீர்வு பெற்றேன். அவர் கொடூரமான என் முகத்திற்கு தண்ணீர் மற்றும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வாருங்கள் என்றார். அதன்பின்பே ஓரளவு என்னுடைய முகம் சரியாகத் தொடங்கியருக்கிறது என்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் - மிஸ்கேல்

விக்டோரியா

விக்டோரியா

" நான் முதன்முதல் பேஷியல் செய்துவிட்டு வீட்டிற்கு சென்றேன். நிறைய ப்ரவுன் நிறப் புள்ளிகள், கண்களுக்குக் கீழே நிறைய கருப்பு புள்ளிகள் , என் நடு நெற்றியில் நிறைய புள்ளிகள் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. கொத்து கொத்தாக மெலாஸ்மா உருவாகி விட்டது. முகமே பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. பேஷியல் பண்ணப்போன ஒரு மணி நேரத்துக்குள் என் வாழ்க்கையே மாறிவிட்டது. மாதக் கணக்கில் அழுதேன். பேஷியல் செய்தால் என் முகம் இன்னும் பொலிவு பெறும் என்று நினைத்தேன் ஆனால் மிகவும் தீவிர பக்க விளைவை எனக்கு ஏற்படுத்தி விட்டது. இப்பொழுது 10 வருடங்கள் கழித்து தான் அந்த புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்று கவலையுடன் கூறிகிறார்- விக்டோரியா

எல்சி

எல்சி

" நான் டெர்மோபிளாண்ட் /மைக்ரோ ப்ளாண்ட் செய்த போது அந்த பியூட்டிசன் எனது முகத்தில் உள்ள முடிகளை நீக்க அடர்த்தியான மாய்ஸ்சரைஸரைப் பயன்படுத்தினார். அது என் சரும துவாரங்களை அடைத்து விட்டது. இதனால் என் முகம் முழுவதும் சிறிய புடைப்புகள் உருவாகி பார்ப்பதற்கே அசிங்கமாக அழற்சியை உண்டாக்கிவிட்டது. சில வாரங்கள் கழித்து தான் அது போகவே செய்தது. அதற்கு அப்புறம் அவரிடம் நான் செல்லவில்லை என்று எல்சி கூறுகிறார்

ஆட்ரி

ஆட்ரி

"நான் முதல் முறையாக லேசர் பேஷியல் செய்வதற்காகச் சென்றேன். எனது முகப்பருக்களை நீக்கச் சொன்னேன். 15 நிமிடத்தில் நல்ல பொலிவும் கிடைக்கும் என்றனர். தலையில் ரப்பர் பெல்ட் மாட்டி லேசர் சிகிச்சையை ஆரம்பித்தனர். சிகச்சை முடிந்ததும் கண்ணாடியில் என் முகத்தை பார்க்கும் போது தான் தெரிந்தது என் கன்னத்தில் பருக்கள் தோன்றி இருந்தது. சில வாரங்கள் கழித்து அது மறைந்து விடும் என்று அவர் கூறினார். ஆனால் 3 வாரங்கள் ஆகியும் இன்னும் அந்த பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறேன் என்கிறார் ஆட்ரி

கெல்லி

கெல்லி

"நான் ஒரு மாதத்திற்கு முன் என் முகத்தில் உள்ள இடது வெட்டு தழும்புக்காக மைக்ரோ டெர்மாபிராசியன் செய்தேன். ஒவ்வொரு சிட்டிங்காக வர சொன்னார்கள். முதல் தடவை நிறைய ஆசிட் கலவைகள் பயன்படுத்தப்பட்டது. அடுத்த தடவை நான் அது வேண்டாம் என்று கூறி விட்டேன். அதற்கு பதிலாக அவர் வேறு சில பொருட்களை பயன்படுத்தினார். ஆனால் கடைசியாக நான் என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது மூன்று வெட்டு கோடுகள் இருந்தது. இன்னமும் அந்த வெட்டுகள் மறையாமல் அப்படியே வெளிப்படையாக அசிங்கமாகத் தெரிகிறது. அவை என் முகத்தில் ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விட்டது " என்று புலம்புகிறார் கெல்லி

எனவே ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அடுத்த தடவை நீங்கள் பேஷியல் செய்வதற்கு முன்னாடி உங்களுக்கும் பியூட்டிசனுக்கும் இடையே ஒரு நல்ல உரையாடலை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுங்கள். எந்த பேஷியலாக இருந்தாலும் அதைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு செயல்படுங்கள். இதனால் மட்டுமே உங்கள் முகத்தை பற்றிய பயங்கர கதைகள் வராமல் தடுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 horrifying stories of facials gone wrong

Facials are supposed to be a healthy part of one's regular skincare routine—the operative phrase there being, supposed to be. The unfortunate truth, however, is that if you have ever had a negative experience at the esthetician's office, you are not alone.
Story first published: Monday, March 12, 2018, 9:00 [IST]