தீபாவளிக்கான கண்களை கவரும் அசந்தலான மெகந்தி டிசைன்கள்!

Written By:
Subscribe to Boldsky

பண்டிகைகள், விழாக்கள் அன்று பெண்கள் மருதாணி இட்டுக்கொள்வது மிகச்சிறப்பு. மருதாணி இட்டுக்கொள்வது பெண்களுக்கு மகிழ்ச்சியை தருவது மட்டுமின்றி, பல ஆரோக்கிய நன்மைகளையும், உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறதாம். இன்று பல டிசைன்களில், மெஹந்தி இட்டுக்கொள்வது டிரெண்டில் உள்ளது. இந்த பகுதியில் பெண்கள் தங்களது கைகளுக்கு வகைவகையாக எளிமையான டிசைன்களை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மயில் டிசைன்

மயில் டிசைன்

மயில் டிசைன் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். மயிலை உள்ளங்கையில் வரைந்து கொண்டு நீங்கள் உங்களது கிரியேட்டிவிட்டிக்கு தகுந்தது போல பல டிசைன்களை இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

சிம்பிள் டிசைன்

சிம்பிள் டிசைன்

ஒரு சிலருக்கு அதிகமாக மெகந்தி போட்டுக் கொள்வது அவ்வளவாக பிடிக்காது. அப்படி உள்ளவர்கள், இந்த சிம்பிள் டிசைனை பின்புற கைக்காக பயன்படுத்தலாம். இதனை நீங்கள் விஷேசத்தின் அன்று மட்டுமல்லாமல், வேறு சில நாட்களில் போட்டால் கூட ஸ்டைலாக இருக்கும்.

அசத்தலான டிசைன்

அசத்தலான டிசைன்

இந்த குறிப்பிட்ட டிசைனை உங்களது கைகளில் போட்டால், பார்ப்பவர்கள் நிச்சயம் பொறாமைப்பட தான் செய்வார்கள். இதனுடன் நீங்கள் கைகளில் முத்துக்கள் பதித்த ஆபரணம் ஏதேனும் ஒன்றை போட்டால் நீங்களே நம்ப முடியாத அளவு உங்கள் கைகள் அழகாக மாறிவிடும்.

அரப்பிக் டிசைன்

அரப்பிக் டிசைன்

மாடனாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் இந்த டிசைனை டிரை செய்யலாம். இதற்கு நீங்கள் அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. இதனை போட நீங்கள் மெகந்தி கலையில் பட்டம் பெற வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. மிகவும் எளிமையான டிசைன் தான்.

அரபிக் டிசைன் 2

அரபிக் டிசைன் 2

உங்களுக்கு அரபிக் டிசைன் மீது அதிக பிரியம் இருந்தால் நீங்கள் இதனை கண்டிப்பாக டிரை செய்யலாம். இரண்டு கைகளுக்கும் போட்டுக்கொள்ள இந்த டிசைனை தேர்வு செய்யுங்கள். க்யூட்டாக இருக்கும்.

பின் கைகளுக்கு

பின் கைகளுக்கு

உங்களது பின்புற கைகளை அழங்கரிக்க நீங்கள் இந்த அரபிக் டிசைனை தேர்ந்தெடுக்கலாம். இது மிகவும் எளிமையானதாகும். உங்களது விரல்கள் சூப்பராக தோன்ற வேண்டும் என்று ஆசைப்பட்டால் இதனை டிரை செய்யலாம்.

செஸ் போர்டு டிசைன்

செஸ் போர்டு டிசைன்

செஸ் போர்டு டிசைன்கள் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது உங்களது தோற்றத்தை மிக அருமையாக காட்டும். நீங்கள் மாங்காய், பூக்கள் போன்ற டிசைன்களுக்குள் செஸ் போர்டு டிசைனை செய்யலாம்.

நியூ அரபிக்

நியூ அரபிக்

அரபிக் டிசைகள் என்றால் பலருக்கு கொள்ளை பிரியம் இருக்கும். ஏனென்றால் இது உங்களது தோற்றத்தை மிக அழகாக வேறுபடுத்தி காட்டும். கொஞ்சம் பயிற்சியும், கொஞ்சம் அனுபமும் மட்டும் இருந்தாலே போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eye Catchy Mehendi Designs For Karwa Chauth

Eye Catchy Mehendi Designs For Karwa Chauth