உங்கள் முகத்திற்கு எந்த வகையான புருவம் ஏற்றதாக இருக்கும்?

By: Ashok CR
Subscribe to Boldsky

மேக்கப் செய்யும் போது உங்கள் புருவங்களுக்கு சரியான வடிவத்தை கொடுக்கவில்லை என்றால், நீங்கள் செய்யும் மேக்கப் முழுமை பெறாது. எனவே எப்போதும் உங்கள் முக வடிவத்திற்கு ஏற்றவாறு புருவங்களை சரியாக ட்ரிம் செய்ய வேண்டும்.

உங்கள் முகத்தின் வடிவம் உங்கள் பெர்சனாலிட்டியைப் பற்றி என்ன கூறுகிறது?

உங்களுக்கு முகத்திற்கு வந்த வகையான புருவம் சரியாக இருக்கும் என்று தெரியவில்லையா? அப்படியெனில் இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு எந்த வகையான புருவங்கள் உங்கள் முகத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களுக்கு நீள்வட்ட வடிவமான முகமா?

உங்களுக்கு நீள்வட்ட வடிவமான முகமா?

கண்மணிகளின் மையப்பகுதியில் புருவங்கள் மேலே சென்று, அதன் பின் வளையத் தொடங்க வேண்டும். இந்த ஸ்டைலை தான் பல நட்சத்திரங்கள் பின்பற்றுகின்றனர்.

உங்களுக்கு வட்ட வடிவமான முகமா?

உங்களுக்கு வட்ட வடிவமான முகமா?

உயரமான வளைவை உருவாக்குங்கள். உங்களாலான பல செங்குத்து கோடுகளை உருவாக்க புருவங்கள் வளைந்து இருக்க வேண்டும். அவை ரொம்பவும் வட்ட வடிவில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் முகம் பார்ப்பதற்கு ஒரு பந்து போல் ஆகி விடும்.

உங்களுக்கு நீளமான முகமா?

உங்களுக்கு நீளமான முகமா?

தட்டையான புருவங்களை தேர்ந்தெடுங்கள். இது தான் பராமரிப்பதற்கு சுலபமான ஸ்டைலாகும். மேலும் உங்கள் முகம் அவ்வளவு நீளமாகவும் தோற்றமளிக்காது.

உங்களுக்கு சதுர வடிவமான முகமா?

உங்களுக்கு சதுர வடிவமான முகமா?

உங்களுக்கு பட்டையான புருவங்களே மிக எடுப்பாக இருக்கும். உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், சற்று வட்ட வடிவமாகவும் வைத்திருக்கவும். அவற்றை முழுமையான வளைவாக மாற்றி விடாதீர்கள்.

உங்களுக்கு இதய வடிவிலான முகமா?

உங்களுக்கு இதய வடிவிலான முகமா?

நீங்கள் வட்ட வடிவிலான புருவங்களை தேர்ந்தெடுங்கள். நீங்கள் உயரமான வளைவை உருவாக்கலாம். இயற்கையான தோற்றத்தைப் பெற வேண்டுமானால் சிறிய வளைவை போடவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Kind Of Eyebrows Suit Your Face Type?

Doing the right make-up is a job half done if your eyebrows aren't shaped the right way. Read on to find out what style of brows you should maintain...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter