கண்ணாடி போட்டாலும் அழகாக காட்சியளிக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலக்கட்டத்தில் இளம்வயதிலேயே கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் எப்போதும் கணினி முன்பு இருப்பது மட்டுமின்றி, எந்நேரமும் மொபைலை நோண்டிக் கொண்டே இருப்பதும் ஒரு காரணமாகும். கண்ணாடி அணிந்திருப்பதால் தாங்கள் அழகாக காணப்படுவதில்லை என்ற எண்ணம் இருக்கும். குறிப்பாக பெண்கள் தான் அதிக கவலை கொள்வார்கள்.

ஆனால் சரியான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலைப் பின்பற்றி வந்தால், நீங்கள் கண்ணாடியில் அழகாக காட்சியளிக்கலாம். இங்கு தமிழ் போல்ட்ஸ்கை கண்ணாடி போட்டாலும் அழகாக காட்சியளிக்க ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி அழகாக காட்சியளியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காஜல்

காஜல்

கண்கள் சிறியது என்றால், கண்களுக்கு காஜல் போடுங்கள். இதனால் கண்கள் பெரிதாக காணப்படும். ஒருவேளை கண்கள் சாதாரணமாகவே பெரியது என்றால், கண்களுக்கு அளவாக காஜல் போடுங்கள். இதனால் கண்கள் அழகாக காட்சியளிக்கும்.

லைட் ஐ ஷேடோ

லைட் ஐ ஷேடோ

கண்களுக்கு கண் மை அடர்த்தியாக போட்டிருந்தால், ஐ ஷோடோ போட வேண்டாம். அதுவே அளவாக கண் மை போட்டிருந்தால், அளவாக ஐ ஷேடோ போடுங்கள். இதனால் கண்கள் அழகாக காணப்படும்.

பொட்டு

பொட்டு

கண்ணாடி அணிந்து பாரம்பரிய உடையான புடவையில் செல்லும் போது, அழகாக காட்சியளிக்க, வட்டமாக பொட்டு வைத்துக் கொண்டு செல்லுங்கள். இதனால் அது அற்புதமான தோற்றத்தைத் தரும்.

உதடுகளுக்கு லிப்ஸ்டிக்

உதடுகளுக்கு லிப்ஸ்டிக்

கண்ணாடி அணிபவர்கள் அழகாக காணப்பட, கண்களுக்கு மட்டுமின்றி உதடுகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போடுவது நல்ல தோற்றத்தைத் தரும். இல்லாவிட்டால், பிங்க் நிற லிப்ஸ்டிக் வேண்டுமானாலும் போடலாம்.

அழகான புருவங்கள்

அழகான புருவங்கள்

கண்ணாடி அணிபவர்கள் அழகாக காட்சியளிக்க புருவங்களை தவறாமல் அவ்வப்போது ட்ரிம் செய்ய வேண்டும். அதிலும் அடர்த்தியான புருவங்களை வைக்காமல், சற்று மெல்லியதாக வைப்பது நல்ல தோற்றத்தைக் கொடுக்கும்.

கண் இமைகள்

கண் இமைகள்

கண் இமைகளின் மீது தினமும் இரவில் விளக்கெண்ணெய் வைத்து வந்தால், கண் இமைகள் நன்கு கருமையாக காணப்படும். மேலும் கண்ணாடி அணிபவர்கள் கண் இமைகளுக்கு மஸ்காரா போடுவது, கண் இமைகளை அடர்த்தியாக வெளிக்காட்டும்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

முக்கியமாக கண்ணாடி அணிபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது தங்களின் ஹேர் ஸ்டைல் மீது தான். எப்போதும் கண்ணாடி அணிபவர்கள், ஸ்மார்ட் மற்றும் செக்ஸி லுக்கைத் தரும் படியான ஹேர் ஸ்டைலைப் பின்பற்ற வேண்டும். அதில் குதிரை வால் மிகவும் சிறந்த ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways To Look Hot In Glasses

Women who wear glasses can also look mesmerising. Take a look at these simple ways in which you can make your look beautiful in glasses.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter