For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியத்தை சீரழிக்கும் அழகு சாதனப் பொருட்கள்!

|

என்றென்றும் அழகுடன் காட்சியளிக்க, மேனி பொலிவடைய, மாசு மருவற்ற சருமம் பெறுவதற்கு என பல மாயஜால வார்த்தைகள் பேசி உங்களை அழகு சாதனப் பொருட்களை வாங்கி வைக்க முயற்சி செய்வார்கள்.

நாமும் ஏதோ மறுநாளே பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்துவிடுவதை போல வண்டி வண்டியாய் வாங்கி முகத்தில் அப்பிக்கொள்வோம். ஒரே வாரத்தில் உங்கள் முகம் பௌர்ணமி நிலவு போல ஜொலிக்கும் என கூறியதை நம்பி நீங்கள் வாங்கி உபயோகப்படுத்த ஆரம்பம் செய்திருப்பீர்.

உங்கள் பேரக்குழந்தை வளரும் வரை நீங்கள் உபயோகப்படுத்தினாலும் ஒரு பிரயோஜனமும் இருக்காது. சரி பயனளிக்கதான் செய்யாது என பார்த்ததால். பக்க விளைவுகளை மட்டும் பக்காவாக அளிக்கிறது நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்.

தினமும் மேக்கப் போடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

அழகு சாதனப் பொருட்கள் உங்களுக்கு ஏற்படுத்தும் பக்க விளைவுகளைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும் எனில், காக்க காக்க படத்தில் ஜோதிகா பாடுவதை போல "ஒன்றா.. இரண்டா..." என ஆரம்பிக்க வேண்டியதுதான்.

தலை முடியில் இருந்து விரல் நகம் வரை வகை வகையாக பாதிப்புகளை அள்ளி தருகிறது நீங்கள் உபயோகப்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள். சில அழகு சாதனப் பொருட்களின் உச்சக்கட்ட பரிசாக வம்சம் விருத்தியடைவதையே தடுக்கிறதாம்.

"என்னமா இவங்க இப்படி பண்றாங்களே.." என நீங்கள் வருந்தும் முன் அழகு சாதனப் பொருட்கள் மூலமாக நீங்கள் அடையும் மட்டற்ற பக்க விளைவுகள் பற்றி இங்கு முழுவதுமாக படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்...

அவசியம் நிறுத்த வேண்டிய பொதுவான 9 மேக்கப் தவறுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும நோய்கள்

சரும நோய்கள்

சரும பொலிவுக்காக நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்கள் உங்கள் சருமத்தை சேதப்படுத்துகிறது. நீங்கள் சாதாரணமாக வெயிலில் இருக்கும் போதும். நீங்கள் உபயோகப்படுத்தும் கிரீமை அப்பளை செய்துவிட்டு வெயிலில் இருக்கும் போதும் பாருங்கள். சரும எரிச்சல் அதிகரிக்கும். நீங்கள் வெளியில் சென்று வந்த உடன் சருமம் ஒருமாதிரி வறட்சியாக இருக்கும். இதற்கெல்லாம் காரணம் அந்த கிரீமை பயன்படுத்துவது தான். அதிகபட்சமாக சரும புற்றுநோய் ஏற்பட கூட வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

அழற்சிகள்

அழற்சிகள்

அதிகப்படியாக அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்துவதன் மூலம் பல வகையான அழற்சிகள் ஏற்படுகின்றன. சருமம், கூந்தல் மற்றும் சுவாச அழற்சிகள் ஏற்படுவதாய் கூறப்படுகிறது. நீங்கள் முகத்தில் உபயோகப்படுத்தும் கிரீம்களை அதிகம் முகர்வதனால் சுவாச அழற்சி ஏற்பட்டு சுவாசிப்பதில் எரிச்சல், சுவாச குழாயில் பிரச்சனைகள் போன்றவை ஏற்படுகின்றன. ஷாம்பூ மற்றும் கண்டீஷனர் உபயோகப்படுத்துவதன் மூலமாக தான் தற்போது நிறையப் பேருக்கு முடிவுடைதல், உச்சந்தலை வேர் பகுதிகளில் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாய் கூறப்படுகிறது

கண்களுக்கு தீங்கு

கண்களுக்கு தீங்கு

காஜல், மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவை நீங்கள் கண்களுக்கு உபயோகப்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள். இது கண் சார்ந்த நோய் தொற்றுகள் உருவாக காரணமாக இருக்கின்றது. இதில் மஸ்காரா உபயோகப்படுத்துவதன் காரணமாக கண் பார்வை பறிபோவதற்கு கூட வாய்ப்புகள் இருப்பதாய் கூறப்படுகிறது. இதில் இருக்கும் சூடோமோனஸ் எரூஜினோசா என்னும் இரசாயன பொருள் தான் கண் பார்வையை பாதிக்க வைக்க காரணமாக இருக்கிறது.

நகங்களுக்கு பாதிப்பு

நகங்களுக்கு பாதிப்பு

நகம் என்பது நமது உடலில் இருக்கும் இறந்த செல்களின் வெளியேற்றம் என்பது நாம் அறிந்ததுதான். ஆனால், நாம் அதற்கு சில அழகு பூச்சு வேலைகள் செய்யும் போது அதில் உள்ள இரசாயனங்கள் நகங்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இதனால், இறந்த செல்களின் வெளியேற்றம் அடையும் அளவில் குறைவு ஏற்படுகிறது.

புற்றுநோய் பாதிப்புகள்

புற்றுநோய் பாதிப்புகள்

பல அழகு சாதனப் பொருட்களில் ஜிங்க் ஆக்ஸ்சைட் (Zinc oxide), பேரியம் சல்ஃபேட் (Barium Sulphate) மற்றும் புடிலேடெட் ஹைட்ராக்ஸி அனிசோல் (butylated hydroxy anisole) போன்ற பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை ஆகும். இவை கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பிறக்கு காரணமாக இருக்கின்றன. மற்றும் நாம் சாப்பிடும் போது லிப்ஸ்டிக்கின் இரசாயனங்கள் உணவோடு கலந்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தரமற்ற சில அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்தும் போது தோல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சரும முதிர்ச்சி

சரும முதிர்ச்சி

நீங்கள் அளவிற்கு அதிகமாக அழகு சாதன பொருட்களை உபயோகப்படுத்தும் போது அது எதிர்வினை பயன் தர ஆரம்பிகிறது. உங்கள் சருமம் தனது இயல்பான தன்மையை தாண்டி வேகமாக முதிர்ச்சி அடையும். முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

இனப்பெருக்க பாகங்கள்

இனப்பெருக்க பாகங்கள்

நீங்கள் பயன்படுத்தும் டால்கம் பவுடர்களை நேரடியாக உங்களது பிறப்புறுப்புகளில் பயன்படுத்தும் போது சில பிறப்புறுப்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெண்கள் டால்கம் பவுடரை அவர்களது பிறப்புறுப்பில் பயன்படுத்துவதால் பிறப்புறுப்பு பகுதியில் நோய் கிருமி தொற்றுகள் ஏற்படுகின்றன. மற்றும் இது நேரடியாக பிறப்பு பகுதியினுள் செல்லும் பட்சத்தில் கருத்தருப்பதில் கூட பிரச்சனைகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

கூந்தல் பிரச்சனைகள்

கூந்தல் பிரச்சனைகள்

பூப்போன்ற கூந்தல் பெற ஒரு ஷாம்பூ, மினுமினுப்பான கூந்தல் பெற கண்டீஷனர், பொடுகு, ஈறு பிரச்சனைகளை தீர்க்க வேறொன்று என பல கிரீம்களை உபயோகப்படுத்துவதனால் தான் நிறைய கூந்தல் உடைதல், ஈறு தனது தன்மையை இழந்து முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

தலைவலி

தலைவலி

ஏன் இந்த தலைவலி ஏற்படுகிறது என நீங்கள் குழம்பிப் போயிருக்கும் அந்த தீராத பிரச்சனைக்கு, நீங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தி வரும் அந்த அழகு சாதனப் பொருட்களும் ஒரு வகையில் காரணம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

தேவையற்றது

தேவையற்றது

அழகாக இருக்க வேண்டும், ஹேன்ட்சம்மாக இருக்க வேண்டும் என நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் வெறும் மாயை. இந்த மாயை உங்களை ஒரு சில மணிநேரத்திற்கு மட்டும் தான் அழகாக வைத்துக் கொள்ளும். உங்கள் அழகை மேம்படுத்த வேண்டுமெனில் இயற்கையான பொருட்களை பயன்படுத்துங்கள் இரசாயனம் ஒருபோதும் ஒரு நல்ல தீர்வளிக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Harmful Side Effects of Using Cosmetics

You should know about the top 10 harmful side effects of using cosmetics.
Desktop Bottom Promotion