அவசியம் நிறுத்த வேண்டிய பொதுவான 9 மேக்கப் தவறுகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

மேக்கப் என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது பெண்கள் தான். அகராதியில் பெண்களுக்கு என்ன அர்த்தம் என பார்த்தால் மேக்கப் என்று இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேக்கப்பை விரும்பாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு அலாதி பிரியமாகும். ஆண்கள் இல்லாமல் கூட பெண்கள் இருந்து விடுவார்கள், ஆனால் மேக்கப் இல்லாமல்??? கொஞ்சம் கஷ்டம் தான்.

வயது பாரபட்சம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் மேக்கப் போடுவது பிடிக்கும். சரி மேக்கப் மீது ஏன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறார்கள்? எல்லாம் அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் தான். மேக்கப் போடுவது பெண்களுக்கு அழகை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கருவளையங்கள், நிறமூட்டல் போன்ற சரும பிரச்சனைகளை மறைத்து, அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் அளிக்கும்.

மேக்கப் போடுவதால் உங்களுக்கு அருமையான உணர்வை அளிக்கும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அந்த உணர்வை உங்கள் சருமமும் பெறுகிறதா என்பது உங்களுக்கு தெரியுமா? குழப்பமாக உள்ளதா? நாங்கள் கூறுவது பெண்கள் இழைக்கும் சில மேக்கப் பற்றிய தவறுகளைப் பற்றி தான். இப்படி செய்யும் சில தவறுகளால் உங்கள் சருமத்தின் மீது மோசமான விளைவுகளையும் அது ஏற்படுத்திவிடும். அதனால் அதைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லதாகும்.

அதனால் நீங்கள் இது வரை செய்து வரும் இந்த பொதுவான தவறுகளை இனி வரும் காலங்களில் தவிர்க்கவும். அவை என்னவென்று பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படுக்க போகும் முன் மேக்கப்பை நீக்காதது

படுக்க போகும் முன் மேக்கப்பை நீக்காதது

மேக்கப்பை நீக்க சோம்பேறித்தனப்பட்டு அப்படியே தூங்க சென்று விட்டீர்களா? அப்படியானால் வெகு விரைவில் சொரசொரப்பான, வறண்ட மற்றும் வயதான சருமத்தை பெற நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள். சருமத்தின் துவாரங்களில் மேக்கப் நுழையக் கூடும். இதனால் துவாரங்களின் அளவு பெரிதாகும். எண்ணெயும் அழுக்கும் இந்த துவாரங்களை அடைத்து, அதனால் அடிக்கடி பருக்கள் ஏற்படும். இவ்வளவு தானா என நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை; இனி தான் இருக்கிறது பிரச்சனையே! இந்த பழக்கம் தொடர்ந்தால், சீக்கிரத்திலேயே உங்கள் சருமம் முதிர்ச்சியை காணும்.

சுத்தம் செய்யாமல் மேக்கப் பிரஷ்களை பயன்படுத்துதல்

சுத்தம் செய்யாமல் மேக்கப் பிரஷ்களை பயன்படுத்துதல்

வெதுவெதுப்பான நீர் மற்றும் குழந்தைகளின் ஷாம்பு சிறிதளவை ஒன்றாக கலந்து, உங்கள் மேக்கப் பிரஷ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில், அந்த கலவையில் ஊற வைத்து கழுவ வேண்டும். அழுக்கு படிந்த பிரஷ்களைப் பயன்படுத்தினால், அதில் ஏற்கனவே படிந்துள்ள மேக்கப்கள் உங்கள் சரும துவாரங்களை அடைக்கும். இதனால் நீங்கள் புதிதாக செய்யும் மேக்கப் கூட கோரமாகி விடும். மேலும் அழுக்கு பிரஷ்களைப் பயன்படுத்தும் உங்கள் முகத்தில் தொற்று ஏற்படும் இடர்பாடும் உள்ளது.

கண்களுக்கான மேக்கப்பை தவறான முறையில் துடைத்தல்

கண்களுக்கான மேக்கப்பை தவறான முறையில் துடைத்தல்

பொதுவாக கண்களில் செய்யப்பட்டுள்ள மேக்கப்பை ஈரமான பஞ்சுருண்டையை கொண்டு முரட்டுத்தனமாக துடைக்க பல பெண்கள் முற்படுவார்கள். கண்களை சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மையானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அங்கே சுலபமாக சுருக்கம் ஏற்பட்டு விடும். மேலும் கண்களில் இப்படி கடுமையான முறையில் நடந்து கொண்டால், இமைகளின் அடர்த்திக்கு தீங்கு உண்டாகும்.

நீர் புகாத மஸ்காராவை அடிக்கடி பயன்படுத்துதல்

நீர் புகாத மஸ்காராவை அடிக்கடி பயன்படுத்துதல்

நீர் புகாத மஸ்காரா நீண்ட காலம் நீடித்து நிற்பதால், அதை பயன்படுத்த பல பெண்கள் மிகவும் விருப்பப்படுவார்கள். ஆனால் அவை உங்கள் கண் இமைகளை வறட்சியாக்கும். மேலும் நீர் புகாத மஸ்காராவை நீக்குவது கஷ்டமாக இருப்பதால், அதனை அழிக்கும் போது கண்களை அதிகமாக தேய்க்க வேண்டி வரும். இதனால் கண்களை சுற்றியுள்ள சருமம் சுருக்கம் அடைவதோடு, இமைகளையும் உதிரச் செய்யும்.

முகம் முழுவதும் ப்ரான்ஸர் பூசிக்கொள்வது

முகம் முழுவதும் ப்ரான்ஸர் பூசிக்கொள்வது

முகத்தின் மீது ப்ரான்ஸர் பூடிக்கொண்டால் உங்கள் முகம் அருமையாக காட்சியளிக்கும்; ஆனால் அதை எங்கே தடவ வேண்டும் என்பது தெரிந்தால் மட்டுமே! முக அமைப்பிற்குத் தேவையான முக்கியமான மேக்கப் சாதனமாக இது இருந்தாலும் கூட, இதனை முகம் முழுவதும் தடவிக் கொண்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. முகத்திற்கும், கழுத்திற்கும் உள்ள நிற வேறுபாடு பளிச்சென காட்டிக்கொடுத்து விடும். ஒரு வேளை அதை பயன்படுத்த வேண்டுமென்றால், முகம் முழுவதும் பூசாமல், உங்கள் மூக்கு, தாடையெலும்பு மற்றும் கன்னத்தின் இடுக்குகளில் மட்டும் பூசிக்கொள்ளலாம்.

அளவுக்கு அதிமாக ஃபவுண்டேஷன் போடுவது

அளவுக்கு அதிமாக ஃபவுண்டேஷன் போடுவது

அளவுக்கு அதிகமாக ஃபவுண்டேஷன் பயன்படுத்தினால் உங்கள் முகம் பார்ப்பதற்கு பேய் போல் தெரியும். அளவாகவும், மிதமாகவும் இருந்தால் மேக்கப் போட்டால் தான் பார்ப்பதற்கு உண்மையாக தெரியும். ஃபவுண்டேஷனை அதிகமாக போடுவதால் உங்கள் சருமத்தின் நிறமும் செயற்கையாக தெரியும். ப்ரான்ஸர் போல ஃபவுண்டேஷனையும் கழுத்து மற்றும் சருமங்களில் பூசாமல் லேசாக முகத்தில் மட்டும் போட்டுக் கொள்ளுங்கள்.

தவறான முறையில் லைனரை பயன்படுத்துதல்

தவறான முறையில் லைனரை பயன்படுத்துதல்

பலர் பரிந்துரைப்பதை போல் அல்லாமல், உதட்டு லைனரை உதட்டு விளிம்பில் மட்டும் பயன்படுத்தாமல், உதடு முழுவதும் பயன்படுத்த வேண்டும். அதற்கு காரணம் சில மணிநேரத்தில் உதட்டின் சாயத்தின் நிறம் தேய்ந்து விட்டால், அடர்த்தியான உதட்டு வளையம் மட்டுமே மீதமிருக்கும். அதனால் லைனரை உதடு முழுவதும் போடுங்கள்.

அழகு சாதனங்களை ஆண்டாண்டு காலமாக பாதுகாத்தல்

அழகு சாதனங்களை ஆண்டாண்டு காலமாக பாதுகாத்தல்

அனைத்து பொருட்களுக்குமே அதிகபட்ச பயன்பாட்டு காலம் உள்ளது. இது அழகு சாதனப் பொருட்களுக்கும் அடங்கும். சில அழகுப் பொருட்கள் திறக்கப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே தீர்ந்து விடும். ஆனால் முதிர்வு காலம் முடிந்த பின்னரும் கூட இந்த பொருட்களை பாதுகாத்து பயன்படுத்துவது நல்லதல்ல. அது உங்கள் தோற்றத்திற்கும் சரி, உங்கள் சருமத்திற்கும் சரி, நல்லதல்ல. அதனால் பழைய மேக்கப் சாதனங்களை முதிர்வு காலம் முடிந்தவுடனேயே கழித்து விட வேண்டும்.

 உடலை மாய்ஸ்சரைஸ் செய்யாமல் இருத்தல்

உடலை மாய்ஸ்சரைஸ் செய்யாமல் இருத்தல்

வறண்ட சருமத்தை உடைய பெண்கள் குறிப்பாக இதனை செய்ய வேண்டும். பொதுவாக பல பெண்களும் முகத்திற்கு மேக்கப் அளிக்க பல மணிநேரம் செலவழிப்பார்களே தவிர உடலை மறந்து விடுவார்கள். முகத்தை போலவே உடலின் மற்ற சருமத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பது முக்கியமாகும். வெப்பநிலை, வெந்நீர் குளியல், மாசு போன்றவைகள் அனைத்தும் தலை முதல் பாதம் வரையிலான சருமங்களை பாதிக்கும். அதனால் தினமும் அதனை மாய்ஸ்சரைஸ் செய்யவில்லை என்றால் தன் இயற்கை பொழிவை உங்கள் சருமம் இழந்து விடும்.

சரி இந்த தவறுகளை எல்லாம் இதற்கு முன் நீங்கள் செய்து வந்திருந்தால் பரவாயில்லை. தெரியாமல் செய்ததால் ஒன்றும் தவறில்லை. ஆனால் முழுமையான வழிகாட்டலுக்கு பின்பு, இந்த தவறுகளுக்கு எல்லாம் நீங்கள் முற்றுப்புள்ளி வைத்து, ஆரோக்கியமான சருமத்தை பெறும் நேரம் வந்து விட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

9 Common Makeup Mistakes That You Must Stop Making Right Now

Here are some common makeup mistakes that you must stop making right now. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter