For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பளபளக்கும் சருமத்தை பெற உதவும் மேக்கப் டிப்ஸ்கள்...

By Boopathi Lakshmanan
|

அழகான மற்றும் பளபளக்கும் சருமம் என்பது எந்த பெண்ணுக்கும் ஒரு பொக்கிஷமாகத்தான் இருக்கும். என்ன தான் மேக்கப் இல்லாமல் நாம் அழகாகத்தான் இருக்கின்றோம் என்ற எண்ணம் பெண்களுக்கு இருந்தாலும், அவர்களுக்கு மேக்கப் இல்லாமல் தங்களை வெளிப்படுத்திக கொள்ள முடியாது என்ற எண்ணமும் ஆழமாக பதிந்துள்ளது.

நாம் முகத்தை சுத்தமாகவும் புத்துணர்வுடன் வைத்திருந்தாலும் மேக்கப் செய்வது போல் அழகை பெற முடியாது. ஆகையால் இங்கு உள்ள பகுதியில் எப்படி மேக்கப் செய்தால் நன்றாக இருக்கும் என்று அடிப்படை விஷயங்களை நாம் பார்ப்போம்.

Makeup Tips to Make your Skin Glow

ஈரப்பதமூட்டுதல்

ஒப்பனை செய்வதற்கு முன் நாம் முதலில் செய்ய வேண்டியது முகத்தில் ஒரு நல்ல ஈரப்பதமூட்டும் திரவத்தை தடவ வேண்டியது தான். இது முகத்திற்கு இயற்கையான அழகை தருவதாக உள்ளது. இது சருமத்தை மென்மையாக்கி சுருக்கங்கள் மற்றும் வெடிப்புக்களை சரி செய்ய உதவும். பொதுவாக நாம் செய்யும் ஒப்பனையானது சில மணி நேரத்திற்கு பின் வெயில் மற்றும் தூசு ஆகிய காரணங்களால் கலைந்து விடுகிறது. இதை தவிர்ப்பதற்காக ஒப்பனை செய்யும் முன் நாம் ஈரப்பதமூட்டும் திரவம் அல்லது லோஷன் ஆகியவற்றை முகத்திலும் கழுத்திலும் போடுவது சிறந்தது. இது சருமத்தில் உள்ள ஒப்பனையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், சருமத்தையும் ஒப்பனை பொருட்களின் நச்சுத் தன்மையிலிருந்து பாதுகாக்கின்றது.

ஃபவுண்டேஷன்

ஒப்பனைக்கு முன்பாக போடும் லோஷன் முகம் முழுதும் பரவியதை உறுதிப்படுத்த ஒரு சொட்டு ஃபவுண்டேஷனை விரலில் எடுத்து முகத்தில் உள்ள இடங்களில் தொட்டு எடுக்கவும். பின்னர் அதை முகம் முழுவதும் தடவவும். சந்தைகளில் பல வித ஃபவுண்டேஷன்கள் கிடைக்கின்றன. நாம் நல்ல நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எஸ்பிஎப் உள்ள பொருளாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். இது நம் சருமத்தை சூரியனிலிருந்து வரும் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும்.

கன்சீலர்

சருமத்திற்கு ஈரப்பதமூட்டிய பின், நமது முகத்திற்கு ஒரு விதமான பளபளப்பு கிடைக்கும். பின்னர் தடவப்படும் ஃபவுன்டேஷன் மேலும் பொலிவு படுத்தும் போது இதன் மூலம் மறையாத கரும் புள்ளிகள், பருக்கள் கரு வளையங்கள் ஆகியவற்றை கன்சீலர் மூலம் மறைக்க முடியும். இது சிறிது பசை போன்று டியூப் வடிவிலும், குச்சி வடிவிலும் கூட இருக்கும். இதில் உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்து பயன்படுத்தலாம் அல்லது அந்த விற்பனையாளரிடம் விசாரித்தால் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து அவர்களே தருவார்கள். அதை பாதிப்புள்ள இடத்தில் மட்டும் தடவி உலர விடவும். இது முகத்தை மேலும் அழகூட்டும்.

பவுடர்

இறுதியாக உங்கள் சருமத்தை ஒளிர வைக்கும் நோக்கத்துடன் பவுடர் போட வேண்டும். இவை முகத்தில் உள்ள ஈரப்பதத்தையும் ஒப்பனைகளையும் மறைத்து இயற்கையான அழகை அமைத்து தருகிறது. இதனால் நீங்கள் போடும் ஒப்பனைகளை யாராயினும் கண்டுபிடிப்பது கடினமாகி விடும். பவுடரில் லூஸ் பவுடர் மற்றும் பிரஸ்ட் பவுடர் என இரு வகைகள் உள்ளன. உங்கள் சருமத்திற்கேற்ப பவுடரை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். பிரஸ்ட் பவுடர் நமது நிறத்திற்கேற்ப கிடைக்கும். அதையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

இதனை பயன்படுத்தும் மக்கள் நிறைய இருப்பதனாலும் மற்றும் இது பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மையினாலும் இத்தகைய பொருட்கள் அங்காடிகளில் அதிகளவில் கிடைக்கின்றன. ஆனால் சிறந்த தரம் கொண்ட பொருட்களை நாம் வாங்கவேண்டும். இது மட்டுமல்லாமல் நாம் வாங்கும் பொருள் நமது சருமத்திற்கு ஒத்துப்போகும் பொருளாக இருக்க வேண்டும். இது நமது உடலுக்கும் கேடு விளைவிக்காமல் இருக்க வேண்டியது அவசியம்.

English summary

Makeup Tips to Make your Skin Glow

Beautiful, glowing skin is an asset for any woman. And even though we women think that we can nurture that amazing skin without makeup and look just like the airbrushed models, we have know in the back of our minds that it is not possible without makeup.
Story first published: Saturday, February 15, 2014, 18:04 [IST]
Desktop Bottom Promotion