Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
நெயில் பாலிஷ் போடும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!
பெண்கள் தங்களை அழகுப்படுத்த பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் நெயில் பாலிஷ். இந்த நெயில் பாலிஷ் போடாத பெண்களை பார்ப்பதே மிகவும் கடினம். அதிலும் தற்போது நல்ல அடர் நிற நெயில் பாலிஷ் தான் ட்ரெண்ட்டாக உள்ளது. ஆனால் இப்படி நகங்களை அழகுப்படுத்தப் பயன்படுத்தும் நெயில் பாலிஷை நகங்களுக்குப் போடும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ஆனால் பலர் நெயில் பாலிஷ் தானே, அதனால் என்ன பிரச்சனை ஏற்படப் போகிறது என்று எண்ணி, கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட நெயில் பாலிஷைப் பயன்படுத்துவதோடு, நெயில் பாலிஷ் போடும் முன்னும், பின்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரியாமல் இருக்கின்றனர்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, நெயில் பாலிஷ் போடுபவர்களுக்காக ஒருசில முக்கியமான டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது. இந்த டிப்ஸ்களை மனதில் கொண்டு நெயில் பாலிஷ் போட்டால், நகங்கள் நன்கு ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

எதிலும் அடிப்படை மிகவும் முக்கியம்
நகங்களுக்கு நெயில் பாலிஷ் போடும் முன், நிறமற்ற பேஸ் போடுவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே நெயில் பாலிஷ் போடும் முன் மறக்காமல் பேஸ் போடுங்கள்.

நெயில் பாலிஷ் வகைகள்
நெயில் பாலிஷ் வகைகளிலேயே மிகவும் மோசமானது என்றால் அது 'குவிக் ட்ரை' என்று குறிப்பிடப்பட்டிருப்பது தான். இந்த வகையான நெயில் பாலிஷ் விலை அதிகமானது மட்டுமல்லாமல், நகங்களை வறட்சியடையச் செய்து, விரைவில் முறியச் செய்யும்.

நகங்களை மசாஜ் செய்யவும்
நெயில் பாலிஷ் போடும் முன்னும் சரி, பின்னும் சரி, நகங்களை எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் க்யூட்டிகிள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, நெயில் பாலிஷ் உரியாமலும் நீண்ட நாட்கள் இருக்கும்.

நீரில் காண்பிக்கவும்
நெயில் பாலிஷ் போட்ட பின்னர், அது விரைவில் உலர வேண்டுமானால், குளிர்ச்சியான ஓடும் நீரில் காண்பிக்க வேண்டும்.

கூடவே கூடாது
நகங்களில் உள்ள நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்று, நெயில் பாலிஷை மிகவும் அடத்தியாகப் போடக்கூடாது. இதனால் நகங்களானது நாளடைவில் உரிய ஆரம்பிக்கும்.

நெயில் பாலிஷ் வைக்கும் இடம்
நெயில் பாலிஷை சூடான வெப்பநிலையில் பாதுகாக்கக்கூடாது. இதனால் அது விரைவில் பாழாகும். மாறாக நன்கு குளிர்ச்சியான சூழ்நிலையில் வைக்க வேண்டும். அதிலும் ஃப்ரிட்ஜில் வைத்தால், நெயில் பாலிஷ் நீண்ட நாட்கள் இருக்கும்.

குலுக்க வேண்டாம்
எப்போது நெயில் பாலிஷ் போடும் முன்னும், அதனை நன்கு குலுக்கிவிட்டு சிலர் போடுவார்கள். ஆனால் அப்படி செய்தால், நெயில் பாலிஷில் முட்டைகள் சேர்ந்துவிடும். அதற்கு பதிலாக அதனை இரண்டு உள்ளங்கைக்கு நடுவே வைத்து உருட்ட வேண்டும்.

முக்கியம்
நெயில் பாலிஷ் போடும் போது, நடுவில் அதனை முன்னும் பின்னும் பார்க்கக்கூடாது. இதனால் நெயில் பாலிஷ் க்யூட்டிக்கிளில் பட்டு, பின் க்யூட்டிக்கிளை பலவீனமடையச் செய்யும்.

சுடுநீர் கூடாது
நெயில் பாலிஷ் போட்ட பின்னர், நகங்களை சுடுநீரில் அலசக் கூடாது. இதனால் நெயில் பாலிஷில் உள்ள கெமிக்கலால் நகங்களில் வெடிப்புகள் வரும் வாய்ப்புக்களை அதிகரிக்கும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
