For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆபீஸ் கெளம்பீட்டிங்களா பெண்களே.. அஞ்சே நிமிஷத்தில் மேக்கப் போடலாம்!

By Boopathi Lakshmanan
|

தற்போதைய காலத்தில் அலுவலகம் செல்லும் பெண்கள் மிகவும் அதிகளவில் உள்ளனர். அவ்வாறு செல்லும் பெரும்பாலான பெண்கள் நிறைய வேலைகளை ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டியுள்ளது. அவர்கள் கிடைக்கும் நேரத்தில் அத்தனை வேலைகளையும் செய்து வாழ்க்கையை சமன்படுத்தி வாழ வேண்டும். வீட்டு வேலைகளும் இதர வேலைகளும் அவர்கள் பொறுப்பில் உள்ளது. ஆதலால் வேலைக்கு செல்லும் முன் பெண்கள் தங்களை அழகுபடுத்துவதற்காக, சிறிது நேரம் கண்ணாடி முன் நின்று யோசித்து எதை அணிந்து கொள்வது என்று நினைக்கக் கூட அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது.

வேலை செய்யும் இடத்திற்கேற்ப தங்களை அழகு செய்து அவ்விடத்தின் மதிப்பிற்கேற்ப அவர்களை பராமரிக்க செய்ய வேண்டியதும் மிக அவசியமாகும். சில அலுவலங்களில் வேலை பார்க்கும் இடத்திற்கேற்ப ஆடைகளை அணிய வேண்டும் என்ற கட்டாயமும் ஏற்படலாம். இதையும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும். மேக்கப் போட்டு தங்களைத் தயார் செய்து கொள்ள பொதுவாக 10 முதல் 15 நிமிடங்கள் தான் தேவைப்படும்.

5 Minute Makeup For Office Women

புத்துணர்வுடன் இருக்கவும்

பெண்கள் அலுவலகத்திற்குள் நுழையும் போது பளிச்சென்றும் புத்துணர்வுடனும் இருக்க வேண்டும். சோம்பலாகவும் களைப்பாகவும் அலுவலகத்திற்கு செல்வது உங்களது மதிப்பை குறைக்கும். உங்கள் மேல் பிறர் கொண்டுள்ள அபிப்பிராயமும் அதனால் குறையும். ஆகையால் நீங்கள் இந்த விஷயத்தில் கவனத்தில் கொண்டு உங்கள் அழகையும் பொலிவையும் எப்போதும் மேம்படுத்த வேண்டும்.

காலத்திற்கேற்ப அழகு செய்யுங்கள்

நீங்கள் செய்யும் மேக்-கப் காலத்தையும் நேரத்தையும் சார்ந்ததாக இருக்க வேண்டும். குளிர் காலத்தில் மிகுந்த வறட்சியாக இருக்கும் என்பதால் ஆயில் மேக்கப் பயன்படுத்த வேண்டும். வெயில் காலத்தில் இதை அப்படியே எதிர்மறையாக செய்ய வேண்டும். எப்படியிருந்தாலும் நீங்கள் அணியும் மேக்கப் வெகு நேரத்திற்கு கலையாமல் இருக்க வேண்டும்

அழகிற்கான அடிப்படை

அலுவலகத்திற்கு செல்லும் போது முகத்திற்கும் தோலிற்கும் அதிகம் கவனம் செலுத்த வேண்டாம். நீங்கள் அழுத்தமான கண் மை மற்றும் லைனர்கள் பயன்படுத்த இது ஒன்றும் சமூக கூடமோ அல்லது விருந்தோ கிடையாது. அலுவலகத்திற்கு செல்லும் போது சிறிது வித்தியாசம் இருத்தல் வேண்டும். உங்கள் கன்னங்களை பளிச்சென வையுங்கள். அது மிகவும் அழகாக இருக்கும். இயற்கையான பொலிவுடன் காணப்படுவது அலுவலக சுற்று சூழலுக்கேற்ற சிறந்த முறையாகும்.

சரியான அளவு

எப்போதும் சரியான அளவு மற்றும் வெளிர் நிற வண்ணங்கள் கொண்டு மேக்கப் செய்வது அழகை கூட்டும். அதிக மேக்கப் செய்து உங்களை காட்டிக் கொண்டால், வேலையை விட மேக்கப் போடுவதற்கே இவர்கள் அதிக கவனம் செலுத்துபவர்கள் என்ற எண்ணம் சக ஊழியர்களுக்கு ஏற்படும். வேலையை விட மேக்கப் தான் உங்களுக்கு முக்கியம் என்று நீங்கள் இருப்பதாக மற்றவர்களுக்குத் தோன்றும். ஆகையால் இயற்கையான அழகுமுறைகளை கையாள்வது பணியிடத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.

அழகு செய்யும் முறை

பல்வேறு பணி இடங்களிலும் குறைந்த வெளிச்சம் அல்லது வேலைக்கேற்ப வெளிச்சம் வரும் வகையிலான விளக்குகள் மூலைகளில் பொருத்தப்பட்டும் மற்றும் பசுமைத் தன்மையை காட்டும் விஷயங்களும் இருக்கும். இப்படிப்பட்ட வெளிச்சம் கொண்ட பணியிடங்களில் உங்கள் மேக்கப் அழகாக காணப்பட வேண்டும். அங்கு ஒளிரும் வெளிச்சத்திற்கேற்ப நமது அழகும் ஒளிர வேண்டியது மிகவும் அவசியமானதாகும். வெளிர் நிற பிளஷ்களை பயன்படுத்துவது உகந்ததாக இருக்கும். இவ்வகையில், ஆப்ரிகாட் பீச் பிளஷ்கள் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். சிவப்பு மற்றும் ஊதா ஆகிய வண்ணங்களை பயன்படுத்த வேண்டாம். அவை தோலின் தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகைகளாகவே இருக்கும்.

லிப்ஸ்டிக் கலர்

லிப்ஸ்டிக் பயன்படுத்தும் போது பழுப்பு, பழுப்பு சிவப்பு (மெரூன்), சாம்பல் போன்ற வண்னங்களை தவிர்ப்பது நல்லது. இவை வேலைக்கு செல்லும் போது பயன்படுத்தும் நிறங்கள் அல்ல. மேலும் அலுவலகத்தில் உள்ள குறைந்த ஒளியில் இத்தகைய வண்ணங்கள் மிகவும் அசிங்கமாகவும், நமது அழகை சிதைக்கவும் செய்யும். சிறிது மினுமினுப்புடன் வெளிர் நிறம் கொண்ட வண்ணங்களைப் பயன்படுத்துவது சிறந்ததாகும். இவ்வாறாக குறைந்த வெளிச்சமுள்ள பணியிடங்களிலும் கூட, நீங்கள் அழகுடன் காட்சியளிக்கலாம். பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்களை அலுவலகங்களில் பயன்படுத்த வேண்டாம்.

கண்களை மையப்படுத்துதல்

மென்மையான மற்றும் வெளிர் நிறங்களை நீங்கள் கண்களுக்கு பயன்படுத்த வேண்டும். இந்த நிறங்கள் கண்களை ஆழமாக மிளிரச் செய்து அழகூட்டும். வெளிர் சாம்பல், வெளிர் பழுப்பு மற்றும் ரோஸ் கலர்களை நீங்கள் தேர்ந்தெடுத்து கண்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

English summary

5 Minute Makeup For Office Women

Office going women in most cases have lots of things to manage at the same time. They have to balance life in a manner in order to fit everything within the schedule. They have household activities and other responsibilities to maintain. If you know the norms of daily makeup well enough, it will not take you more than 10 to 15 minutes to make yourself ready for the day.
Desktop Bottom Promotion