Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
காஜலை ஈஸியா ரிமூவ் பண்ண சில டிப்ஸ்...
பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் காஜல். அதிலும் இந்த காஜலை ஆசிய நாடுகளில் உள்ள பெண்களே அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு தினமும் காஜலைப் பயன்படுத்தும் பெண்கள் ஒரு நாள் அதனை பயன்படுத்தவில்லை என்றாலும், பார்க்க ஏதோ ஒன்று குறைந்தது போல் காணப்படுவர்.
அதிலும் காஜல் நிறைய வகையில் தற்போது கடைகளில் விற்கப்படுகின்றன. மேலும் அந்த காஜலை வீட்டிலே கூட தயாரிக்கலாம் அல்லது காஸ்மெடிக்ஸ் கடைகளில் வாங்கலாம். தற்போது அவ்வாறு காஜலைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான், கண்களுக்கு போடும் காஜல் கலைந்துவிட்டு, முக அழகை கெடுத்துவிடுகின்றன. அதனாலேயே நிறைய பெண்களுக்கு கருவளையம் வந்துவிட்டது போன்று காணப்படுகிறது. சிலசமயங்களில் அந்த காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

கிளின்சிங் மில்க்: தினமும் முகத்தை கிளின்சிங் மில்க்கை வைத்து கழுவ வேண்டும். இதுவும் மேக்கப்பில் ஒரு வித பகுதி தான். அதிலும் முகத்திற்கு என்னதான் மேக்-கப் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டாலும், கிளின்சிங் மில்க்கால் கழுவ வேண்டும். அதிலும் காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்-கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் க்ரீமையும் பயன்படுத்தி நீக்கலாம்.
ஃபேஸ் வாஷ்: அவசரமாக காஜலை நீக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கண்களுக்கு அடியில் ஏற்படும் கருவளையம் ஏற்படாமல் இருப்பதற்கு, முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும். இல்லையெனில் ஏதாவது ஸ்கரப்பை பயன்படுத்தியும் நீக்கலாம். இதனால் காஜல் சருமத்தில் இருந்து நீங்குவதோடு, சருமமும் சுத்தமாகும்.
எண்ணெய்: காஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும். அவ்வாறு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது. இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.
ஈரமான துணி: ஒவ்வொரு முறை மேக்-கப்பை கலைக்கும் முன்னும் அல்லது பின்னும், மென்மையான துணியை நீரில் நனைத்து, கண்களுக்கு அடியில் துடைத்துவிட வேண்டும்.
வாஸ்லின்: காஜலை நீக்குவதற்கு இது ஒரு சிறந்த முறை. அதற்கு வாஸ்லினை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் காட்டனை வைத்து, துடைக்க வேண்டும். இதனால் காஜல் எளிதில் நீங்கிவிடும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும். மேலும் காஜல் கண்களில் இருந்து கலையாமல் இருப்பதற்கு காஜலை தடவியப் பின்னர், சிறிது பவுடரை அங்கு தேய்க்க வேண்டும். இதனால் காஜல் கலையாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications











