For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காட்டன் டிரஸ்சில் கோடையில் கலக்குங்க!

By Mayura Akilan
|

Priyamani
பெண்களுக்கு தனி அடையாளம் தருபவை காட்டன் சேலைகள். மொடமொடப்பாய் கஞ்சி போட்டு கட்டினால் அழகு அள்ளிக்கொள்ளும். டீச்சர், டாக்டர், லெக்சரர், மட்டுமல்லாது இப்பொழுதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் காட்டன் சேலை கட்ட ஆரம்பித்து விட்டனர். கோடைக்கேற்ற இதமான உடையும் காட்டன்தான். எனவே இந்த சீசனில் உங்களுக்கு ஏற்ற புடவைகளைத் தேர்தெடுக்க ஆடை அலங்கார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை கொஞ்சம் கேளுங்களேன்.

ஒல்லி ஒல்லி அழகு

நூலிடைப் பெண்கள் காட்டன் புடவைக் கட்டினால் அப்படியே பூசினார்போல அழகு கூடும். அதற்காக குண்டாய் இருப்பவர்கள் காட்டன் புடவை கட்டக்கூடாது என்றில்லை. மொட, மொடப்பு அதிகம் இல்லாத நாராயண்பேட் காட்டன், பேட்டேரு காட்டன், பொபிலி காட்டன் போன்ற புடவைகளை கட்டலாம்.

எளிமையான அழகு

காட்டன் புடவைகள் நூறு ரூபாயில் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய் வரை கூட தரத்தைப் பொருத்து கிடைக்கின்றன. இவை சிம்பிளாக அதே சமயத்தில் அழகாக இருக்கும். சாதாரணமாய் இருப்பவர்கள் கூட காட்டன் புடவை கட்டினால் கம்பீரமாய் காட்சியளிப்பர். சிம்பிளாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கத்வால் காட்டன் ஏற்றது. அதேசமயம் வயதானவர்களுக்கு ஜரிகை வச்ச வெங்கடகிரி காட்டன் புடவை சின்னப் பொண்ணுங்களுக்கு சூப்பர் நெட்டும், தனேகலியும் அழகாக இருக்கும்.

காட்டன் சுடிதார்

பெரிய பொம்மை டிசைன் போட்ட காட்டன் சல்வார்தான் இப்ப காலேஜ் பொண்ணுங்க மத்தியில் ஃபேஷன். அதேபோல் காட்டன் ஸ்கட், டாப்ஸ் போட்டால் கல்லூரி பெண்களுக்கு கலக்கலாய் இருக்கும். கோடைக்கும் இதமாய் இருக்கும்.

எப்படி பராமரிக்கலாம்

காட்டன் துணிகளை பராமரிப்பது எளிதானதல்ல. சரியாக பராமரித்தால் மட்டுமே அவை நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கும்.

காட்டன் துணிகளை கைகளால் துவைப்பது தான் மிகவும் நல்லது. புது காட்டன் புடவையை முதல் முறை துவைக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீர்ல கொஞ்சமா கல் உப்பு சேர்த்து பத்து நிமிஷம் ஊற வைத்து அலசினால் புடவையோட புது மெருகு அப்படியே இருக்கும். பூந்திக் கொட்டை சேர்த்த தண்ணீரில் ஊற வைத்து அலசினாலும், பளபளப்பு மங்காமல் புதுசு போல் இருக்கும்.

English summary

Tips for choosing colors in cotton sarees | காட்டன் டிரஸ்சில் கோடையில் கலக்குங்க!

cotton saris should always be washed separately as their colour starts spreading with each subsequent wash that might spoil other clothes as well. Immersing saris in water for long periods of time or drying them in scorching heat can also lead to color fading. Starching Cotton Saris after each subsequent wash helps in color retention.
Story first published: Wednesday, May 2, 2012, 11:43 [IST]
Desktop Bottom Promotion