For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயசானாலும் 'தாதா'வின் ஸ்டைலும், லுக்கும் மாறவே இல்லை!

By Mayura Akilan
|

Ganguly with wife Dona
சமீப காலங்களில் அதிகம் ஊடகங்களில் அடிபடும் பெயர் சௌரவ் கங்குலி. ஐ.பி.எல் மேட்சில் பட்டையை கிளப்பும் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன்தான் ‘தாதா’ கங்குலி. ‘பெங்கால் டைகர்’ என்ற செல்லப்பெயரோடு வலம்வந்த கங்குலி இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து சிறந்த கேப்டன் என்று பெயரெடுத்தவர். அவருடைய ஸ்மார்ட் மேனரிசம், ஹேர்ஸ்டைல் போன்றவை இளசுகளை அவர் பக்கம் ஈர்க்க காரணமாக இருந்தது.

இதோ ஐ.பி.எல் 5 ஜுரம் பற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. லீக் போட்டிகளில் எதிரணிகளை சுளுக்கெடுத்து வருகிறார் தாதா. இதற்கு காரணம் அவரது இதமான அணுகுமுறையோடு கூடிய கேப்டன்ஷிப்தான் என்கின்றனர் கிரிக்கெட் விமர்ச்சகர்கள். நாற்பது வயதானாலும் இளமை அழகோடு கங்குலி இருக்க காரணம் அவருடைய கம்பீரமான ஹேர்ஸ்டைல் என்றும் கூறுகின்றனர்.

பேட் பாய் , குட் பாய்

தொண்ணூறுகளில் கிரிக்கெட் வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. மைதானத்தில் அமைதியாய், நின்று கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு விசயம் கங்குலியை கவனிக்கத் தக்கவராய் மாற்றியது. அந்த அலட்சியமான தலை அலங்காரம். தனியாக சிரத்தை எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலும் அவரை தனி ஆளாய் காட்டியது. கங்குலி மீது முதலில் ஒரு பேட் பாய் லுக்தான் இருந்தது. தற்போது அதுவே குட்பாய் லுக்கிற்கு உயர்த்தியது.

இளம் ஹீரோ லுக்

1999 உலகக்கோப்பை போட்டியில் அனைவரையும் கவர்ந்த ஹீரோ கங்குலி என்றால் மிகையாகாது. ஸ்டைலான ஹேர்கட், சின்னதாய் மீசை, லேசான தாடி ஆகிய அம்சங்களோடு இளம் ஹீரோவிற்கு உரிய அத்தனை அம்சங்களோடும் இருந்தார். திடிரென்று தலையில் தொப்பி வைத்தால் போதும் டேர் டெவில் லுக் வந்து விடும் தாதாவிற்கு.

கொல்கத்தா இளவரசர்

இரண்டாயிரமாவது ஆண்டுகளில் கங்குலியின் கேப்டன் இன்னிங்ஸ் தொடங்கியது. அவரது அதிரடி ஆட்டம் ஆரம்பித்தது. தொடர் வெற்றிகளால் சாதனை படைத்த கங்குலியை கொல்கத்தா இளவரசர் என்று இளசுகள் கொண்டாடினர். கேப்டன் ஆனவுடன் பொறுப்பும் கூடியது. முடியை க்ராப் செய்து வெட்டினார். அந்த லுக் அசத்தலாய் அனைவரையும் கவர்ந்தது. லண்டனில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இங்கிலாந்தை வெற்றி பெற்று டி சர்ட்டை கழற்றி சுழற்றிய வேகத்தில் கங்குலியின் கம்பீரம் வெளிப்பட்டது. ஊடகங்களில் சில நாட்களுக்கு இது பற்றிய பேச்சுதான்.

இளமை கங்குலி

கிரிக்கெட் வீரர்கள் வெயிலிலும், விளக்கு வெளிச்சத்திலும் விளையாட வேண்டியிருப்பதால் எளிதில் முடி கொட்டிவிடும். கங்குலிக்கும் அது நேர்ந்தது. கங்குலிக்கு முடியும் போச்சு, வாழ்க்கையும் போச்சு என்று ஊடகங்கள் எழுதின. ஆனா ஹேர் டிரான்ப்ளான்ட் சிகிச்சை கை கொடுத்தது. இழந்த முடியை மீண்டும் பெற்றார் கங்குலி, முன்பை விட இளமையாய் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

‘தாதா’ வின் விஸ்வரூபம்

ஐ.பி.எல் 4ல் கங்குலியை சேர்த்துக்கொள்ள யாரும் தயாராய் இல்லை. அதற்காக தளர்ந்து விடவில்லை பெங்கால் டைகர். முன்பை விட சிறந்த பயிற்சி. மீண்டும் தொடங்கிவிட்டது ஐ.பி.எல் 5ல் புனோ வாரியர்ஸ் அணியின் கம்பீரமான கேப்டனாக கொண்டாடப்படும் கங்குலியின் இன்றைய ஹேர் ஸ்டைல்தான் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக். புலி பதுங்கியது பாய்வதற்குத்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் கொல்கத்தா இளவரசர் கங்குலி.

English summary

Sourav Ganguly's 'Hair' Raising Style | வயசானாலும் 'தாதா'வின் ஸ்டைலும், லுக்கும் மாறவே இல்லை!

We discuss and recommend many glamorous celebrity hairstyles. For once start talking about the hairstyles of Sourav Ganguly, a cricketer who is not known to be glamorous. The captain who ruled the Indian cricket team with an iron hand always had hairstyles to compliment his aggressive personality.
Story first published: Friday, April 27, 2012, 10:16 [IST]
Desktop Bottom Promotion