மென்மையான அழகான கண்கள் பெறுவதற்கான மேக்-கப் டிப்ஸ்.....

Posted By:
Subscribe to Boldsky
Soft Eyes
இன்றைய காலத்தில் மேக்-கப் இல்லாத பெண்களை பார்க்கவே முடியாது. அதிலும் என்ன தான் மேக்-கப் செய்தாலும், கண்களுக்கு செய்யும் மேக்-கப் சரியில்லையெனில், அந்த மேக்-கப்பே வீணாகிவிடும். ஏனெனில் மேக்-கப்பில் கண்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கண்களுக்கு செய்யும் மேக்-கப்பால் கண்கள் நன்கு மென்மையாக அழகாகக் காணப்படுவதற்கு ஒருசில டிப்ஸ்களை அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த டிப்ஸ்களை அடிப்படையாகக் கொண்டு தான், கிரிஸ்டின் ஸ்டீவர்ட் நிறைய முறை மேக்-கப் செய்துள்ளார். அது என்னவென்று படித்து, அவற்றை பின்பற்றி, கண்களை அழகாக வெளிப்படுத்துங்கள்.

* கண்களில் செய்யும் மேக்-கப்பில் மஸ்காரா தான் முக்கியமானது. அதிலும் கண் இமைகளை நன்கு அடர்த்தியாக வெளிப்படுத்துவதற்கு, கருப்பு நிற மஸ்காராவை பயன்படுத்துவது நல்லது. சிங்கிள் கோட் போதாமல் இருந்தால், டபுள் கோட் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

* மஸ்காராவை அளவுக்கு அதிகமாகவும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அது கலைந்து, அசிங்கமான தோற்றத்தை தரும். எனவே மஸ்காரா அதிகமாகிவிட்டது போல் தெரிந்தால், லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து, சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம்.

* பின்பு கண்களின் இமைகளுக்கு மேல் இருக்கும் பகுதியை காஜலை வைத்து, அடர்த்தியான கோடு வரைய வேண்டும். அதிலும் அந்த கோடு மூக்கின் பக்கத்திலிருந்து போடும் போது மெல்லியதாகவும், போக போக அடர்த்தியாகவும் இருக்க வேண்டும்.

* கண்களுக்கு போடும் ஐ-லைனர் பென்சிலாக இருப்பது நல்லது. நீர்மமாக இருந்தால், அவை பின்பு கலைந்து அழகை கெடுத்துவிடும்.

* மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர் ப்ரௌன் அல்லது காப்பி நிறத்தில் இருப்பது நல்லது. இதனால் மேல் இமைகளுக்கு மேலே போடப்பட்டுள்ள காஜல் சற்று அழகாக வெளிப்படும். முக்கியமாக அவ்வாறு கீழே போடும் போது, மெல்லியதாக இருப்பது மிகுந்த அழகைத் தரும்.

* பிஸ்கட் அல்லது லைட் கலரில் இருக்கும் ஐ-ஷேடோவை பயன்படுத்துவது நல்லது. இதனால் மேக்-கப்பானது சற்று அழகாக காணப்படும். முக்கியமாக சிவப்பு மற்றும் மெரூனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* கிரிஸ்டின் ஸ்டீவர்ட் போன்று நல்ல கிளாமரான பார்வையில் இருக்க வேண்டுமென்றால், உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் லிப் கிளாஸ் போட்டால், அது மாலை நேர பார்ட்டிக்கு சிறந்ததாக இருக்கும்.

* பகல் நேர பார்ட்டிக்கு செல்ல வேண்டுமென்றால், மேற்கூறிய கண்களுக்கான மேக்-கப் ஐடியா சிறந்ததாக இருக்கும். ஆனால் லிப்ஸ்டிக் லேசான ப்ரௌன் நிறத்தில் போட்டால், நன்றாக இருக்கும்.

ஆகவே மேலே சொன்ன சில மேக்-கப் டிப்ஸ்களை மனதில் கொண்டு, மேக்-கப் செய்து வந்தால், கவர்ச்சிகரமாக இருக்கும். மேலும் வேறு ஏதாவது மேக்-கப்பின் அடிப்படையானது தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

English summary

Makeup Tips To Get Soft Pretty Eyes | மென்மையான அழகான கண்கள் பெறுவதற்கான மேக்-கப் டிப்ஸ்.....

There was a time when pretty ladies would make their men swoon just by batting their pretty little eyelids. However, the whole concept of being a 'pretty little thing' has gone out of fashion now. That is by most modern women opt for eye makeup ideas that are stark, smoky or bold.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter