For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் லைட் மேக் போதுமே!

By Mayura Akilan
|

Summer Make up secrets
மேக் அப் போடும் போது சீசனுக்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்தினால் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். கோடையில் வியர்வையினால் வேர்க்குரு உள்ளிட்ட சரும கோளாறுகள் ஏற்படும். முகத்தில் எண்ணெய் வடியும். எனவே கோடைக்கேற்ற எளிய மேக்அப் டிப்ஸ்களை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

லேசான பவுண்டேசன்

கோடை காலத்தில் மேக் அப் போடும் போது அடர்த்தியாக பவுண்டேசன் போடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இது வியர்த்து முகத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்திவிடும். லிக்விட் பவுண்டேசன் லைட்டாக பயன்படுத்தலாம். சரும நிறத்திற்கு ஏற்றதாக பயன்படுத்தினால் கூடுதல் அழகு தரும்.

கண்ணக்கதுப்பு

கண்ணங்களின் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ் லைட்டாக இருப்பதே கோடைக்கு ஏற்றது. இல்லையெனில் வெயிலுக்கு உருகி அழகை கெடுத்துவிடும்.

கண்ணுக்கு காஜல்

கண்களில் அழகை அதிகரித்துக் காட்டுவதில் கண்மைக்கு பங்குண்டு. காலை நேரத்தில் லைட்டாகவும், மாலை நேரத்தில் திக் லைனாகவும் போடுவது கண்களுக்கு கூடுதல் கவர்ச்சி தரும்.

லிப் கிளாஸ்

கோடையில் லிப்ஸ்டிக்கிற்கு பை சொல்லிவிடுங்கள். உதடுகளுக்கு அழகு தருபவை லிப் கிளாஸ்தான். உடைகளுக்கும், சருமத்திற்கும் ஏற்ற லிப்க்ளாஸ் உபயோகியுங்கள்.

ரோஸ்வாட்டர்

கோடையில் பன்னீர், ரோஸ்வாட்டர் குளுமை தரும். சருமத்தில் அடைந்துள்ள அழுக்குகளை நீக்க சிறிதளவு பருத்து துணியில் ரோஸ்வாட்டரை நனைத்து முகத்தை துடைத்தால் அழுக்குகள் நீங்கிவிடும். சருமம் புத்துணர்ச்சியோடு திகழும்.

இவை கோடைகாலத்திற்கு ஏற்ற எளிய மேக் அப் டிப்ஸ் நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

English summary

Light Make-up Secrets For Summer! | கோடையில் லைட் மேக் போதுமே!

You apply make-up that not only suits an occasion, but also the season. Sweat and sun tan can spoil your beautiful skin. During summers, make-up should be simple and light. To look fresh on a summery day, check out these makeup secrets.
Story first published: Friday, April 6, 2012, 16:45 [IST]
Desktop Bottom Promotion