Latest Updates
-
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா?
முல்தானி மெட்டி உண்மையில் சருமத்திற்கு நல்லதா? சரும நிபுணர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
Multani Mitti For Skin In Tamil: சரும பராமரிப்பு என்று வரும் போது பெரும்பாலானோர் இயற்கை வழிகளை தான் முதலில் முயற்சிக்க விரும்புகின்றனர். ஏனெனில் இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்தால், பக்கவிளைவுகளும் குறைவு, அதனால் நிரந்தர பலன்களும் கிடைக்கும். அப்படிப்பட்ட நேச்சுரல் சரும பராமரிப்பு பொருட்களுள் பிரபலமான ஒன்று தான் முல்தானி மெட்டி. இந்த முல்தானி மெட்டியை நிறைய பேர் சரும அழகை பராமரிக்கவும், மேம்படுத்தவும் பயன்படுத்தி வருகின்றனர்.
உண்மையிலேயே முல்தானி மெட்டி சரும நிறத்தையும், அழகையும் மேம்படுத்த உதவுமா? இந்த முல்தானி மெட்டி சருமத்தில் மாயங்களை புரியுமா? மொத்தத்தில் முல்தானி மெட்டி சருமத்திற்கு நல்லதா என்பன போன்ற பல கேள்விகள் பலரது மனதில் இருக்கலாம். இந்த முல்தானி மெட்டி குறித்து சரும நிபுணரான டாக்டர் ராதா சுப்ரமணியன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதில் அவர் கூறியதாவது, "முல்தானி மெட்டி என்பது மக்னீசியம், அலுமினியம், சிலிகேட் ஆகியவற்றை கலவையாகும். எந்த ஒரு க்ளே மாஸ்க்கை எடுத்துக் கொண்டாலும், அதில் உள்ள ஒரு பொதுவான பொருள் தான் முல்தானி மெட்டி. ஏனெனில் இந்த முல்தானி மெட்டி சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி செய்வதைக் கட்டுப்படுத்தும். ஆனால் இது தற்காலிகம் தான்.
ஆயினும் ஏதேனும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அல்லது பார்ட்டிகளுக்கு செல்வதற்கு முன் முல்தானி மெட்டியை பயன்படுத்தினால், நிச்சயம் முகம் பளிச்சென்று இருக்கும். அதுவும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு என்றால் முல்தானி மெட்டி மிகச்சிறந்த பலனைத் தரும். ஆனால் இதை தினமும் அல்லது ஒருநாள்விட்டு ஒருநாள் பயன்படுத்தவோ கூடாது. வாரத்திற்கு ஒருமுறை தான் பயன்படுத்த வேண்டும்.
ஒருவேளை வறண்ட சருமத்தைக் கொண்டிருந்தால், முல்தானி மெட்டி மாஸ்க்கை பயன்படுத்திய பின், தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். மேலும் எப்பேற்பட்ட சருமத்தைக் கொண்டிருந்தாலும், எந்த ஒரு ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தினாலும், அதை சருமத்தில் பயன்படுத்திய பின் 100 சதவீதம் காய வைக்காமல், 80 சதவீதம் காய்ந்த பின், கழுவி விட வேண்டும். அதுவும் மிகவும் அழுத்தமாக தேய்த்து கழுவாமல் மென்மையாக கழுவ வேண்டும்." என்று கூறினார்.
முல்தானி மெட்டியை கொண்டு எந்த சருமத்தினர் எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போடலாம்?
எண்ணெய் பசை சருமத்தினருக்கு...
* எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள், முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டருடன் சேர்த்து ஃபேஸ் மாஸ்க் போடலாம்.
* அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடரை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
வறண்ட சருமத்தினருக்கு...
* வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் முல்தானி மெட்டி மற்றும் கிளிசரினைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போடலாம்.
* அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடரை எடுத்து, கிளிசரின் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* முக்கியமாக சருமத்தை உலர்த்திய பின், தவறாமல் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
முகப்பரு சருமத்தினருக்கு...
* முகப்பரு அதிகம் கொண்டவர்கள் முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் மற்றும் தேன் சேர்த்து ஃபேஸ் பேக் போடுவது நல்லது.
* அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடரை எடுத்து, 1 டீஸ்பூன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











