Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த 6 விஷயங்களை சரியாக செய்தால் உங்கள் கைக்கு இப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும்..!
மற்றவர்களுக்காக அழகுடன் இருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆனால், நமக்கு பிடித்த மாதிரியான அழகுடன் இருத்தல் அவசியம். சிலருக்கு முக அழகு மிக முக்கியமானதாக இருக்க கூடும். சிலருக்கு உடல் அழகு இன்றியமையாததாகும். உடல் அழகில் கை, கால்களும் அடங்கும்.

கை கால்கள் அழகுடன் இருக்க வேண்டும் என்கிற விருப்பம் பலருக்கு இருக்கும். முக்கியமாக கைகளை மிருதுவாகவும், இளமையாகவும் வைத்து கொள்ள வேண்டும் என பலர் ஆசைப்படுவர். இதனை நிறைவேற்ற பல வழிகள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான 6 வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஈரப்பதம்
கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம்.
இல்லையேல் தினமும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை கைகளில் தடவி மென்மையாக வைத்து கொள்ளலாம்.

அழுக்குகளை அகற்ற
கைகளில் உள்ள அழுக்குகளை அகற்றினாலே கைகள் மிகவும் மிருதுவாகவும் இளமையாகவும் மாற கூடும். இதற்கு தேவையானவை...
மஞ்சள் கரு 1
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
அவகேடோ பழம் பாதி

தயாரிப்பு முறை
முதலில் அவகேடோ பழத்தை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இந்த கலவையை கைகளில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கைகளை கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் கைகள் இளமையாகவே இருக்கும்.

பட்டு போன்ற கைகள்
கைகளை தொட்டாலே பட்டு போன்ற உணர்வு ஏற்பட வேண்டுமா? அதற்கு எளிய வழி இது தான். ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கைகளில் தடவினால் கைகள் பட்டு போன்று மிருதுவாக இருக்கும். மேலும், உங்களின் கைகளை அழகாகவும் மாற்றும்.

வெண்மை பெற
கைகள் மிகவும் வெண்மையாக இருக்க சிட்ரஸ் வகை பழங்களே போதும். சிட்ரஸ் வகை பழங்களை சாப்பிட்டு வந்தாலே பலவித பயன்கள் உங்களுக்கு கிடைக்கும். மேலும், இவற்றை கைகளில் எண்ணெய்யுடன் சேர்த்தும் தடவலாம்.

இளமையான கைகளுக்கு
கைகளை இளமையாக வைக்க பல வழிகள் உள்ளது. அவற்றில் இந்த வழி மிகவும் பிரமாதமானது. இதற்கு தேவையானவை...
பால் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை
முதலில் எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பாலை சேர்த்து கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் கைகள் இளமையாக இருக்கும்.
மேற்சொன்ன வழிகளை தொடர்ந்து செய்து வந்தாலே நல்ல பலனை அடையலாம்.



Click it and Unblock the Notifications
