Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
முகத்தில் ஏற்படும் அனைத்து வித பிரச்சினைக்கும் தீர்வு தரும் பூண்டு..! #நச்சுனு 6 டிப்ஸ்
நமது வீட்டில் இருக்க கூடிய பல உணவு பொருட்களில் பல வித நன்மைகள் இருப்பது நமக்கு நன்கு தெரியும். ஒரு சில உணவு பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமே உதவும். ஆனால், ஒரு சில முக்கிய உணவு பொருட்கள் முக அழகு மற்றும் உடல் நலம் ஆகிய இரண்டிற்கும் சேர்த்தே உதவும்.

அந்த வகையில் பூண்டும் அடங்கும். உடலில் ஏற்பட கூடிய பல பிரச்சினைகளை இது குணப்படுத்துவதோடு, முக அழகையும் இது அதிகரிக்கிறது. எப்படி என்பதை இனி அறிவோம்.

அற்புதங்கள் நிறைந்த பூண்டு..!
நமது வீட்டில் இருக்கும் உணவு பொருட்களில் பெரும்பாலும் மருத்துவ குணம் நிறைந்தவையாகவே உள்ளது. பல ஆயிரம் வருடத்திற்க்கு முன்பு இருந்தே இது போன்று பயன்படுத்தி வருகின்றனர். அதே போன்று பூண்டானது முகப்பருக்கள், அரிப்புகள், வீக்கம், முக சுருக்கங்கள், அழுக்குகள் ஆகிய பிரச்சினைகளுக்கு விடை தருகிறது.

பருக்களை ஒழிக்க
முகத்தின் அழகை சீர் குலைக்கும் முக்கிய பங்கு இந்த பருக்களுக்கு உள்ளது. இவற்றை நீக்க ஒரு எளிய வைத்தியம் தான் இது. இதற்கு தேவையானவை...
பூண்டு 2 பல்
தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் பூண்டை பாதியாக அரிந்து ஒரு பகுதியை மட்டும் தேனில் கலந்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவவும். இவ்வாறு பருக்கள் இருக்கும் ஒவ்வொரு இடங்களிலும் மென்மையாக தடவி வந்தால் பருக்கள் ஓடியே போய் விடும். மேலும், இவை முகத்தில் உள்ள கிருமிகளையும் அழிக்க வல்லது.

வழுக்கை பிரச்சினைக்கு
இன்று பலருக்கு இருக்க கூடிய ஒரு பிரச்சினை தான் இந்த தலை முடி உதிர்வு. இது நீண்ட நாட்கள் நீடித்தால் வழுக்கையாக மாறி விடும். இந்த மோசமான நிலையை மாற்றி அமைக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு பயன்படும்.
தேவையானவை :-
தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன்
பூண்டு 3 பல்

செய்முறை :-
முதலில் தேங்காய் எண்ணெய்யை சூடு செய்து கொள்ளவும். அடுத்து இதனுடன் பூண்டை கசக்கி போட்டு கொள்ளவும். 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். இந்த எண்ணெய்யை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடி வளர தொடங்கும். மேலும், ரத்த ஓட்டத்தை அதிகரித்து இது முடியின் வளர்ச்சியை தூண்டி விடவும் செய்யும்.

என்றும் இளமையாக இருக்க
முகம் என்றுமே பார்க்க இளமையாக இருக்க வேண்டும் என்றால் முதலில் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க வேண்டும். இதற்கு இந்த டிப்ஸ் போதுமே.
தேவையானவை :-
பூண்டு 2 பல்
தேன் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

செய்முறை :-
பூண்டை துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும். அடுத்து இதனை தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து காலையில் சாப்பிட்டால் முகத்தின் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் தரும். முகத்தில் உள்ள கருமைகளையும் இந்த டிப்ஸ் போக்க வல்லது. மேலும், உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளையும் இது வெளியேற்றிவிடும்.

சொறிகளுக்கு
உங்களின் உடலில் சொறி அல்லது சிரங்கு வந்தால் ஒரு எளிய வைத்தியம் இதற்கு உள்ளது. இது போன்று இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி தேய்த்து வரலாம். மேலும், இவற்றில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை உடலில் உள்ள கிருமிகளை அழிக்க வல்லது.
இந்த நச்சுனு 8 டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால், பிறருடனும் பகிருங்கள் நண்பர்களே.



Click it and Unblock the Notifications
