உங்க பற்களும் இப்படி மின்னணுமா?... இந்த சின்ன ரிஸ்க் மட்டும் எடுங்க போதும்...

Posted By: Kripa Saravanan
Subscribe to Boldsky
மஞ்சள் கரை நீங்கி வெண்மையான பற்கள் வேண்டுமா?- வீடியோ

பளிச்சென்று வெண்மையாக இருக்கும் பற்களை யாருக்குதான் பிடிக்காது. பற்களை வெண்மையாக மாற்ற சில இரசாயன சிகிச்சைகள் உண்டு. ஆனால் இதனால் பக்க விளைவுகளும் உண்டு. இந்த சிகிச்சை முறைகள் பயனளிக்க கால தாமதம் ஏற்படும் மற்றும் விலை மதிப்பும் அதிகம். இவற்றை விடுத்து, எளிய வழியில் வீட்டில் இருக்கும் பொருட்களான எலுமிச்சை, கரித்தூள், பிரட் போன்றவற்றை பயன்படுத்தி வெண்மையான பற்களை உடனடியாக பெறலாம். வாருங்கள் அவற்றை பார்க்கலாம்.

home remedies for teeth whitening

மஞ்சள் கறை

பளிச்சென்ற பிரகாசம் வீசும் பற்களை யாருக்கு தான் பிடிக்காது? ஒரு மனிதன் கவர்ச்சிகரமாக தோன்றுவதில் பற்களுக்கு பெரும் பங்கு உண்டு. நம்மில் பலருக்கு பற்களில் படிந்த மஞ்சள் கறையால் சமூகத்தில் சிரித்து பேச முடியாத நிலை ஏற்படுகிறது. மரபு, வயது அளவுக்கு அதிகமாக டீ , காபி, புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவது , பற்களை சரியான முறையில் பாதுகாக்காமல் விடுவது போன்றவை பற்களில் மஞ்சள் நிறம் தோன்ற காரணம் ஆகும்.

வீட்டுக்குறிப்புகள்

பற்களை வெண்மையாக்கும் சிகிச்சைக்காக இரசாயன முறைகளை பின்பற்றுவதால் பல பக்க விளைவுகள் உண்டாகும். மேலும் இந்த சிகிச்சை முடிய பல நாட்கள் ஆகும். இதற்கான பணச்செலவும் அதிகம். கவலை வேண்டாம். பற்களை வெண்மையாக்க சில எளிய வீட்டு குறிப்புகள் உண்டு. அவற்றை பயன்படுத்தி விரைவாக வெண்மையான பற்களை பெறலாம். வாருங்கள் அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை கொண்டு பற்களை தேய்க்கவும். இதன் பிறகு எப்போதும் போல் பற்பசையால் பற்களை சுத்தம் செய்யவும். கண்டிப்பாக எலுமிச்சை சாறுடன் தண்ணீர் சேர்த்து கலந்து பின் பற்களை தேய்க்கவும். தண்ணீர் சேர்க்காமல் வெறும் எலுமிச்சை சாறை பற்களில் தடவுவதால், எலுமிச்சையில் உள்ள அமிலத்தால் பற்களில் உள்ள எனாமல் சேதம் அடையும். இரண்டு வாரங்கள் தொடர்ந்து இதனை பின்பற்றினால் நல்ல மாற்றம் தெரியும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

வெண்மையான பற்களை பெற பேக்கிங் சோடா பெரிதும் உதவுகிறது. உங்கள் பற்பசையுடன் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து பின் பல் துலக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் வாயை சுத்தம் செய்யவும். இரண்டு வாரங்கள் தொடர்ந்து இதனை செய்து வரலாம். பற்களில் படிந்துள்ள அழுக்குகளை பேக்கிங் சோடா சுத்தம் செய்து வெண்மையான பற்களை மீட்டுத் தருகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயால் வாயை கொப்பளிக்கவும். தினமும் பற்களை சுத்தம் செய்வதற்கு முன்னர் இதனை செய்து வரவும். இதனை ஆயில் புல்லிங் என்று கூறுவார். இதனால் வாயும் பற்களும் விரைந்து சுத்தமாகும்.

வாழைப்பழத்தோல்

வாழைப்பழத்தோல்

வாழைப்பழத் தோலில் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற மினரல்கள் அதிகமாக உள்ளன. இதனால் பற்கள் பளிச்சென்று மாறும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் , வாழைப்பழத் தோலை உங்கள் பற்களில் மேலும் கீழும் நன்றாக தேய்க்கவும். வாழைப்பழத் தோலில் இருக்கும் பேஸ்ட் பற்களில் படரும் வரை தேய்க்கவும். பின்பு 10 நிமிடங்கள் அப்படி விடவும். பின்பு பிரஷால் பேஸ்ட் பயன்படுத்தி சுத்தம் செய்து வாயை கழுவவும். உங்களால் உடனடி மாற்றத்தை உணர முடியும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்

இந்த எண்ணெய் சிகிச்சை முறையை 5 நாட்கள் தொடர்ந்து செய்தால் உங்கள் பற்கள் பளிச் பளிச். ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு இரண்டையும் ஒன்றாக கலக்கவும். இந்த கலவையை கொண்டு தினமும் காலையில் ஒரு முறை பல் தேய்க்கவும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் பற்பசையை கொண்டு பல் துலக்கலாம்.

பிரட்

பிரட்

பிரட், ஆம்! இந்த மந்திர பொருள் கொண்டு உங்கள் பற்களை உடனடியாக வெண்மையாக மாற்றலாம் . ஒரு பிரட் துண்டை எடுத்து அடுப்பில் காண்பித்து கருக்கி கொள்ளவும். பிறகு அந்த பிரட் துண்டை எடுத்து உங்கள் பற்களில் தேய்க்கவும். இதனால் உங்கள் பற்கள் உடனடி வெண்மை பெறும்.

உப்பு

உப்பு

பல காலமாக உப்பை நாம் சுத்தம் செய்ய பயன்படுத்தி வருகிறோம். வீட்டில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உப்பு இருந்து வருகிறது. இது பற்களின் வெண்மைக்கும் பெருமளவில் பயன்படுகிறது. பற்பசைக்கு மாற்றாக உப்பை பயன்படுத்தி தினமும் காலையில் பல் துலக்கலாம். கல் உப்பை பயன்படுத்தும்போது தூளாக்கி பயன்படுத்த வேண்டும். தூளாக மாற்றி பயன்படுத்தவில்லையெனில் உப்பின் சொரசொரப்பு பற்களின் எனாமலை சேதப்படுத்தும்.

கரித்தூள்

கரித்தூள்

கரித்தூள், அழுக்கை அகற்றி தூய்மையான பற்களை பெற சிறந்து செயலாற்றும். ஒரு கிண்ணத்தில் உங்கள் பற்பசை மற்றும் சிறிதளவு கரி தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை கொண்டு தினமும் பல் துலக்கவும். கரித்தூள் கிடைக்கவில்லை என்றால் அதற்கு மாற்றாக ரோஸ் மேரி தூளை பயன்படுத்தலாம். இதனைக் கொண்டும் அழகான வெண்மையான பற்களை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Instant Teeth Whitening Home Remedies That You Did Not Know

Your teeth have pores just like your skin or a sponge. Anything you put in your mouth that has color will absorb into those pores. Wine, coffee, dark berries, and smoking are extremely active in staining teeth. Over time, the natural color of your teeth becomes darker due to these stains. These stains will never go away unless you actively remove them.
Story first published: Thursday, March 15, 2018, 8:30 [IST]